May 1 Labour Day Wishes Tamil 2025:உழைக்கும் கரங்களை ஊக்குவிக்க பகிர வேண்டிய 'உழைப்பாளர்கள் தின வாழ்த்துக்கள்'!!
May 1 Labour Day Wishes 2025 in Tamil: உழைப்பாளர்கள் தினம், உழைப்பின் முக்கியத்துவத்தை மற்றும் மக்களின் அர்ப்பணிப்பை கொண்டாடும் ஒரு நாள். இந்த சிறப்பு நாளில் உங்கள் நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு பகிர்ந்து மகிழ 'உழைப்பாளர்கள் தின வாழ்த்து படங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
உதிரத்தை உழைப்பாக்கி
உலகத்தை உயர்த்திடும்
உண்மை தொழிலாளியை
உள்ளத்தால் வணங்குவோம்
அனைவருக்கும் இனிய
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்

முயன்றால் முடியாதது இல்லை
முயற்சிப்போம் முடிவுக்காக அல்ல
நம் முன்னேற்றத்திற்காக
தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்

உழைப்பே உலகின் முதல் மூலதனம்..
மூலதனத்தின் முதலாளி உழைப்பாளி..
உலக உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்..

உழைப்பின் வாசம் வியர்வையை
துடைக்கும் விரல்களுக்கே தெரியும்
தொழிலாளர் தின வாழ்த்துக்கள்..

இன்று நாம் கடந்து
செல்லும் கடினமான
பாதை தான் நாளை நாம்
பெறப் போகும் வலுவான
வெற்றியின் ஆரம்பம்
உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்..

வீட்டை உயர்த்திட
நாட்டை வளர்த்திட
நாளை உருவாக
இன்று உழைத்திடும்
உன்னத கரங்களே
அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள்..!













Click it and Unblock the Notifications