மன சங்கடம்..நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் நிராகரித்தது உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும் - துரை வைகோ
வார்டு பங்கீட்டில் முழு திருப்தி என தாம் சொன்னால் அது நிச்சயமாக பொய்யாகும் என்று துரை வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை: வார்டு பங்கீட்டில் முழு திருப்தி என தாம் சொன்னால் அது நிச்சயமாக பொய்யாகும், ஒரு சில இடங்களில் எங்களுக்கு மன சங்கடங்கள் உள்ளதாக மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் நிராகரித்திருப்பது கண்டிப்பாக உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. பல முனை போட்டி நிலவுகிறது. அதிமுக, திமுக, பாஜக, பாமக, தேமுதிக, அமமுக, மநீம, நாம்தமிழர், விஜய் மக்கள் இயக்கம் என பலரும் களத்தில் உள்ளதால் பலமுனை போட்டி நிலவுகிறது.
அதிமுக உடன் சிறு கட்சிகள் கூட்டணியில் இருந்தாலும் அனைத்து வார்டுகளிலும் இரட்டை இலையிலேயே போட்டியிடுகின்றனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூ.., இந்திய கம்யூ.., மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மமக உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. வார்டு பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துள்ளன.

வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள்
வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசிநாளாகும். இன்று மாலைக்குள் வேட்பாளர்கள் தங்களின் மனுக்களை தாக்கல் செய்து விட்டு பிரசாரத்திற்கு கிளம்ப வேண்டும். திமுக கூட்டணியில் உள்ள மதிமுக பேச்சுவார்த்தையை முடித்து சில வார்டுகளை பெற்றுள்ளது. வார்டுகள் எண்ணிக்கையை பார்த்து திமுக கூட்டணியில் கட்சிகள் அதிருப்தி அடைந்து உள்ளன. ஆனாலும் வேறு வழியில்லை என்பதால் ஒப்புக்கொள்ளும் மனநிலையில் உள்ளன. அது துரை வைகோவின் பேச்சில் வெளிப்படையாகவே தெரிந்தது.

துரை வைகோ
திமுக நிறுவனரும் முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 53வது நினைவு தினத்தையொட்டி, நேற்று சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் விலக்கு தீர்மானத்தை தமிழக ஆளுநர் நிராகரித்துள்ளது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.

உள்ளாட்சித் தேர்தலில் எதிரொலிக்கும்
பாஜக தவிர மற்ற அனைத்து கட்சிகளும் மாநில மக்களும் நீட் தேர்வை எதிர்க்கும் போது, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். நீட் விலக்கு கோரி தங்களது போராட்டம் வரும் காலங்களில் தொடரும். நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் நிராகரித்திருப்பது கண்டிப்பாக உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும் என்று கூறினார்.

திமுக உடன் மன சங்கடம்
வார்டு பங்கீட்டில் முழு திருப்தி என தாம் சொன்னால் அது நிச்சயமாக பொய்யாகும், ஒரு சில இடங்களில் எங்களுக்கு மன சங்கடங்கள் உள்ளன. ஆனால், மதவாத சக்திகள் தமிழகத்தில் வேரூன்ற கூடாது என்பதில் தமிழக மக்கள் நலனை காக்க திமுக கூட்டணியில் தாங்கள் தொடர்வதில் உறுதியாக இருக்கிறோம்.
Recommended Video

மீண்டு எழுவோம்
கடந்த 10 ஆண்டுகளில் மதிமுக தேக்க நிலையில் இருந்ததை மறுக்க முடியாது. ஆனால் சில ஆண்டுகளில் அதிலிருந்து மீண்டெழுவோம் என நம்பிக்கை உள்ளதாகவும் துரை வைகோ தெரிவித்தார். நதி நீர் இணைப்புக்கு நிதி ஓதுக்குவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
-
அதிமுகவுக்கு அந்த 50 இடங்கள் இடிக்குதே? உள்குத்து டேஞ்சர்! எடப்பாடி இதை செய்தாலே போதுமே -
தூத்துக்குடி, சேலம் ஆட்சியர்கள் மாற்றம்.. மதுரை காவல் ஆணையர் மாற்றம்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications