திமுக கூட்டணியில் இருந்து விலகும் மதிமுக? ஸ்டாலின் முன் நடந்த சம்பவம்.. டெல்லியில் பேச்சுவார்த்தை!
சென்னை: சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில், திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 2019ஆம் ஆண்டு முதல் மதிமுகவில் இருந்து விலகிய யாரும் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் சேர்த்து கொள்ளப்படவில்லை. இந்த சூழலில் மதிமுகவில் இருந்த முத்து ரத்தினம் திமுகவில் இணைந்திருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசுகையில், திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகளுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அவர்கள் ஏற்கனவே எங்களுடன் வாஜ்பாய் ஆட்சி காலத்திலேயே கூட்டணியில் இருந்தவர்கள் தான். இன்னும் 3 மாதங்களில் முழுமையாக தெரிய வரும். பாஜக கூட்டணி முழுமையடைந்துவிடும் என்று தெரிவித்தார்.

எல்.முருகன் பேச்சுவார்த்தை
அப்போது திமுக கூட்டணியில் உள்ள மதிமுக உடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதா என்ற கேள்வி எழுந்தது. ஏனென்றால் வாய்பாய் ஆட்சி காலத்தில் பாஜகவுடன் இணைந்து மதிமுக கூட்டணி அமைத்திருந்தது. அதேபோல் 2014 லோக்சபா தேர்தலின் போதும் மதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டது. இதனால் வைகோவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா என்ற கேள்வி எழுந்தது.
மதிமுக விளக்கம்
இதற்கு மதிமுக எம்பி துரை வைகோ முற்றிலும் மறுப்பு தெரிவித்திருந்தார். அதேபோல் வைகோவும், திமுக கூட்டணியில் மட்டுமே தொடருவோம் என்று அறிவித்திருந்தார். ஆனால் மதிமுக பொதுக்குழு கூட்டத்தில், சட்டமன்றத் தேர்தலில் மதிமுகவுக்கு கூடுதல் தொகுதிகள் பெற வேண்டும் என்று அக்கட்சியினர் கூறினர். அதற்கேற்ப துரை வைகோவும் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் பெறுவோம் என்று பேசி இருந்தார்.
கூடுதல் தொகுதி
ஏற்கனவே விசிக, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் கூடுதல் தொகுதிகளை எதிர்பார்த்திருப்பதாக கூறி வந்த நிலையில், அந்த பட்டியலில் மதிமுகவும் இணைந்துள்ளது. இதனால் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிச்சயம் சிக்கலை கொடுக்கும் என்று பார்க்கப்பட்டது. இந்த நிலையில் 2021 சட்டமன்றத் தேர்தலில் பல்லடம் தொகுதியில் மதிமுக சார்பாக போட்டியிட்ட முத்து ரத்தினம் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
திமுகவில் இணைந்த மதிமுக புள்ளி
திமுக - மதிமுக கூட்டணி 2019ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதில் இருந்து மதிமுகவில் இருந்து விலகிய யாரும் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் சேர்த்து கொள்ளப்படவில்லை. ஆனால் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் காலக் கட்டத்தில் மதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருந்த முத்து ரத்தினத்தை ஸ்டாலின் இணைத்து கொண்டிருப்பது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமைச்சராகும் துரை வைகோ?
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகும் முடிவை எடுத்துவிட்டதால், ஸ்டாலின் இந்த முடிவிற்கு வந்திருக்கலாம் என்று பார்க்கப்படுகிறது. இதனால் வைகோ அதிமுக - பாஜக கூட்டணியில் இணைய அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. அதேபோல் துரை வைகோவுக்கு பாஜக தரப்பில் மத்திய அமைச்சர் பதவி அளிக்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகி இருக்கிறது.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications