மேகதாது அணைக்கு எதிரான தனித் தீர்மானம் தமிழக சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றம்!
மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய சட்டசபையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அனைத்துக்கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவுடன் தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது
சென்னை: கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டசபையில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வந்து பேசினார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். நாம் தண்ணீருக்கு கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக பேசினார். அனைத்து கட்சி எம்எல்ஏக்கள் இந்த தீர்மானத்தின் மீது பேசினர். மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
மேகதாது பகுதியில் காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. சமீபத்தில் கர்நாடக அரசின் நிதிநிலை அறிக்கையின் போது சட்டசபையில் பேசிய அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட நிதி நிலை அறிக்கையில் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக அறிவித்தார்.
மேகதாது அணை கட்ட மத்திய அரசு, கர்நாடக அரசுக்கு எந்தவித ஒப்புதலும் இதுவரை அளிக்காத நிலையில், கர்நாடக அரசின் இந்த அறிவிப்பு சர்ச்சையை கிளப்பியது.காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டினால் தமிழக விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுவர் என தொடர்ந்து தமிழக அரசும் , அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

சட்டசபையில் தனித்தீர்மானம்
இந்த நிலையில், மேகதாது விவகாரத்தில் அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுத்து தமிழக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே தமிழக சட்டசபையில் மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்

சட்டசபையில் முன் மொழிந்த துரைமுருகன்
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட நிதி ஒதுக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கும், அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தீர்மானத்தை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் முன்மொழிந்து பேசினார்.

கையேந்தும் நிலை
தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தண்ணீரை தடுத்து அணை கட்டுவோம் என்று கூறுவது அடாவடித்தனம் என்று கர்நாடகத்துக்கு துரைமுருகன் கண்டனம் தெரிவித்தார். தண்ணீருக்காக தமிழ்நாடு கேரளத்திடமும், கர்நாடகத்திடமும் கையேந்தும் நிலை உள்ளது என்று கூறிய அவர், நாம் அணை கட்ட அனுமதித்தால் வருங்கால சந்ததியினர் நம்மை மன்னிக்க மாட்டார்கள் என்று கூறினார்.

மோதல் போக்கு வேண்டாம்
காவிரி பிரச்சனையில் யார் சரியாக செயல்பட்டார் என்று மோதிக் கொள்வதை நாம் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், கர்நாடகத்தில் அனைத்து கட்சியினரும் காவிரி பிரச்சனையில் ஒரே அணியாக இருக்கின்றனர். தமிழ்நாட்டில் திமுக கொண்டு வந்த தீர்மானத்தை அதிமுகவும், அதிமுக கொண்டு வந்த தீர்மானத்தை திமுகவும் ஆதரித்தது என்று துரைமுருகன் குறிப்பிட்டார். நீங்கள் என்ன செய்தீர்கள் என்ற பேச்சு இப்போதைக்கு வேண்டாம் என்றும் கூறிய அவர், அனைவரும் ஒற்றுமையுடன் கர்நாடக மாநில எம்எல்ஏக்கள் போல இருக்க வேண்டும். இந்த தீர்மானத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

விட்டுக்கொடுக்கக் கூடாது
காவிரி பிரச்சனைக்காக நாம் போராட வேண்டிய நிலையில் இருக்கிறோம்; தோற்றுவிட்டால் அடுத்த தலைமுறை நம்மை சபிக்கும் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார். மேகதாது விவகாரத்தை தமிழ்நாடு சட்டப்படி அணுக வேண்டும். அண்டை மாநிலத்துடன் நல்லுறவை பேணும் நேரத்தில் நமது உரிமையையும் விட்டுக்கொடுக்கக்கூடாது என்று துரைமுருகன் குறிப்பிட்டார்.

மாற்றாந்தாய் மனப்பான்மை
உச்சநீதிமன்றம் சொன்னதைக் கூட ஒரு மாநில அரசு கேட்க மறுப்பது கூட்டாட்சித்தத்துவத்திற்கு எதிரானது என்றும் கூறினார். மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக கூறிய துரைமுருகன், மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளதாக கூறி அதனை சட்டசபையில் வாசித்தார்.

ஏகமனதாக நிறைவேற்றம்
கர்நாடக அரசின் முயற்சியை முறியடிக்க அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள் விடுத்தார். இந்த தீர்மானத்தின் மீது அனைத்துக்கட்சி எம்எல்ஏக்களும் பேசினர். மேகதாது அணை கட்ட எந்த சூழ்நிலையிலும் கர்நாடக மாநிலத்திற்கு அனுமதி தரக்கூடாது என்றும் பேசினர். இதனையடுத்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தமிழ்நாடு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.. யார் இவர்? வெங்கடராமனை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
தமிழகத்தின் 44 தனித்தொகுதிகளில் 90% வேட்பாளர்கள் தகுதி நீக்கம்? அர்ஜுன் சம்பத் பொதுநல வழக்கு -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
ஏழை மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. தனியார் பள்ளிகளில் LKG முதல் இலவசம்.. ஹென்றி சொன்ன தேதியை பாருங்க -
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார் -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்!












Click it and Unblock the Notifications