மன்மோகன் சிங் ஆட்சி! எப்படி இருந்த இந்தியா.. இப்படி ஆச்சே! மோடி - அமித்ஷா படத்துடன் முரசொலியில் மீம்
சென்னை: எப்படி இருந்த இந்தியாவை எங்க கொண்டு வந்து நிறுத்திட்டாங்க என்ற தலைப்புடன் பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் புகைப்படங்களை வைத்து மீம் ஒன்றை வெளியிட்டு உள்ளது திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் நிறுவப்பட்ட முரசொலி நாளிதழில் திமுகவின் அறிவிப்புகள், தமிழ்நாடு அரசின் திட்டங்கள், எதிர்க்கட்சிகள், மத்திய பாஜக அரசு மீதான விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
குறிப்பாக முரசொலியில் வெளியிடப்படும் தலையங்கங்கள் தமிழ்நாட்டில் அடிக்கடி விவாதங்களை கிளப்புவது உண்டு. அதேபோல் தற்போதைய டிரெண்ட்படி சமூக வலைதளங்களில் வைரலாகும் மீம்களையும் முரசொலி வெளியிட்டு வருகிறது.

முரசொலியில் வெளியான மீம்
அந்த வகையில் இன்றைய பதிப்பில் ஒரு மீமை வெளியிட்டு இருக்கிறது முரசொலி. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரிடன் புகைப்படங்களுடன், எப்படி இருந்த இந்தியாவை எங்க கொண்டு வந்து நிறுத்திட்டாங்க என்ற தலைப்புடன் வெளியிடப்பட்டு இருக்கும் அந்த மீமில் இந்தியாவின் பொருளாதார சூழல் குறித்து விமர்சிக்கப்பட்டு உள்ளது.

எப்படி இருந்த இந்தியா, இப்படி ஆச்சு
கடந்த 2014 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசின் கீழும், தற்போது 2022 ஆம் ஆண்டு ஆட்சி செய்து வரும் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசின் கீழும் இருந்த இந்தியாவின் கடன் சுமை, வேலை வாய்ப்பு, விலைவாசி, வளர்ச்சி, பொருளாதாரம் தொடர்பாக அதில் ஒப்பீடு செய்யப்பட்டு இருக்கிறது.

நாட்டின் கடன் சுமை
கடந்த 2014 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் 56 லட்சம் கோடியாக இருந்த மத்திய அரசின் கடன் சுமை, தற்போது 2022 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா ஆட்சியில் 139 லட்சம் கோடியாக அதிகரித்து இருக்கிறது என அந்த மீமில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஒவ்வொரு தனி மனிதனின் கடன் காங்கிரஸ் ஆட்சியில் ரூ.44,348 ஆக இருந்த நிலையில் தற்போது அது ரூ.1,01,048 ஆக உயர்ந்து இருக்கிறது.

வேலையில்லா திண்டாட்டம், ரூபாய்
குறிப்பாக வேலையில்லா திண்டாட்டத்தை பொறுத்தவரை மன்மோகன் சிங் ஆட்சி செய்த காலத்தில் 4.7 சதவீதமாக இருந்ததாகவும், தற்போது பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி காலத்தில் அது 7.8 சதவீதமாக பெருகி உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதேபோல் டாருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அப்போது ரூ.59 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.80 ஆக அதிகரித்து உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விலைவாசி உயர்வும் வளர்ச்சியும்
கேஸ் சிலிண்டர் விலையை எடுத்தக்கொண்டால் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒரு சிலிண்டரின் விலை ரூ.410 ஆக இருந்த நிலையில் தற்போது 2022 ஆம் ஆண்டு அது கடுமையாக அதிகரித்து ரூ.1,053 ஆக உயர்ந்து உள்ளதாக அந்த மீமில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. குறிப்பாக கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தின் முடிவில் 3 வது இடத்தில் இருந்த இந்தியாவின் வளர்ச்சி தற்போது பாஜக ஆட்சி காலத்தில் 164 வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளதாக அதில் கூறியுள்ளார்கள்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications