காய்ச்சல்.. உடல் சோர்வு.. அப்பல்லோவில் அமைச்சர் துரைமுருகனுக்கு சிகிச்சை..உடல் நலமடைந்து டிஸ்சார்ஜ்
சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் துரைமுருகன் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளார். வயோதிகம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புதான் என்றும் அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திடீர் காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் உடல்நிலையை பரிசோதனை செய்தனர்.

துரைமுருகன் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது உடல் நலனில் முன்னேற்றம் ஏற்படவே அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
வயோதிகம் காரணமாகவே அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
காட்பாடியை அடுத்துள்ள காங்குப்பம் என்ற கிராமத்தில், 1938ஆம் ஆண்டு, ஜூலை 1ம் தேதி பிறந்தவர் துரைமுருகன். தந்தை துரைசாமி, தாயார் தவசி அம்மாள். வசதியற்ற குடும்பத்தில் பிறந்த துரைமுருகனுக்கு பணம் கொடுத்து உதவியவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் தனிக் கட்சி தொடங்கியபோது துரைமுருகனையும் தன்னுடன் வருமாறு அழைத்தார். ஆனால், நீங்கள் எனக்கு உதவி செய்திருக்கலாம். ஆனால், என்னுடைய தலைவர் கலைஞர்தான் என்று துரைமுருகன் எம்.ஜி.ஆருடன் செல்ல மறுத்து கருணாநிதி பக்கம் உறுதியுடன் நின்றார். வழக்கறிஞர், அரசியல்வாதி, பேச்சாளர் எனப் பன்முகத் திறன் கொண்டவர் துரைமுருகன்.
இன்னும் எவ்வளவு காலம் என்று தெரியாது.. இருக்கிற வரை கட்சிக்காகவே உழைப்பேன்.. துரைமுருகன் உருக்கம்!
சட்டப்படிப்பு மற்றும் முதுகலைப் பட்டம் பயின்ற துரைமுருகன். திமுகவில்அதிக அனுபவமுள்ள மூத்த தலைவர்களில் ஒருவர். நீண்ட காலம் திமுக மாணவர் அணியில் அங்கம் வகித்தவர், பின்னர் தலைமைக் கழக முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர் என உயர்ந்து, தற்போது பொதுச்செயலாளர் எனக் கட்சியின் உயரிய பொறுப்பையும் வகிக்கிறார். வயதானபோதும் இன்றைக்கும் கட்சி நிகழ்ச்சிகளில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். அமைச்சர் பணிகளை அயராது மேற்கொண்டு வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இதய பிரச்சினைக்கு சிகிச்சை பெற்ற துரைமுருகன், அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் சனிக்கிழமை நள்ளிரவில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்படவே உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்கள் தரப்பில் கேட்டபோது, துரைமுருகனுக்கு வயோதிகம் காரணமாக ஏற்படும் வழக்கமான பாதிப்புதான், தற்போது அவர் நலமுடன் இருக்கிறார் என்றனர். கடந்த ஆண்டு அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து தீவிர சிகிச்சைக்குப் பின்னர் அதிலிருந்து குணமடைந்து அரசியல்பணியாற்றி வருகிறார் துரைமுருகன்.
-
விசிகவுக்கு 7 தொகுதிகள்.. தேமுதிகவுக்கு எவ்வளவு? நாளை தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக! -
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு ஸ்கெட்ச்.. ஐகோர்ட்டில் பரபர மனு! -
“2 மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை?” அதிமுக தலைவர்களின் பேச்சுக்கு ஸ்டாலின் காட்டிய ரியாக்ஷன்! -
2021ல் திமுக vs அதிமுக.. எந்த மண்டலத்தில் எந்தெந்த கட்சி ஆதிக்கம் செய்தது? தமிழ்நாடு MAPஐ பாருங்க! -
ஸ்டாலின் டூ அண்ணாமலை வரை... 2021 தேர்தலில் டாப் 10 லீடர்கள் தொகுதிகளின் ரிசல்ட் இதுதான்.. ரீவைண்ட் -
தமிழ்நாடு, புதுச்சேரியில்.. தேர்தல் ரிசல்டை தீர்மானிக்க போகும் 5 மேஜர் விஷயங்கள்! இதுதான் பிரச்சனையே -
29 சீட் டீல் ஓகே? சென்னை வரும் டெல்லி விஐபி.. புஸ்ஸான தவெக பிளான்.. ஜெட் வேகத்தில் திமுக -
8 கேட்கும் விசிக.. 6க்கு இழுக்கும் திமுக.. அழுத்தமாக நிற்கும் திருமாவளவன்.. திமுக கணக்கு என்ன? -
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு.. இறுதியானது பங்கீடு -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
விஜய் எவ்வளவு ஓட்டு வாங்குவார்? நேர்காணலின் போது திமுக நிர்வாகிகளிடம் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி! -
கொங்கு வேட்பாளர்களுக்கு இன்று திமுக நேர்காணல்.. கோவையின் 10 தொகுதிகளில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications