இன்னும் எவ்வளவு காலம் என்று தெரியாது.. இருக்கிற வரை கட்சிக்காகவே உழைப்பேன்.. துரைமுருகன் உருக்கம்!
சென்னை : "இருக்கிற காலம் இன்னும் எவ்வளவு என்று எனக்கு தெரியாது. ஆனால் இருக்கிற வரை கட்சிக்காக உழைப்பேன். என் தலைவன் கலைஞர். என் கட்சி திமுக" என உருக்கமாகப் பேசியுள்ளார் திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன். பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார் அமைச்சர் துரைமுருகன்.
திமுகவின் மறைந்த மூத்த தலைவர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன், எவன் கட்சிக்கு உழைக்கிறானோ, எவன் கட்சிக்காக பாடுபடுகிறானோ அவன் கட்சியில் இருக்கட்டும் எனப் பேசியுள்ளார்.
மேலும், மழைக்காலங்களில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சிறப்பாக அரசு செயல்பட்டதால் இந்த முறை சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கவில்லை. அடுத்த ஆண்டு மழையை பற்றி பொதுமக்கள் கவலையே படாமல் இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் துரைமுருகன்
சென்னை வில்லிவாக்கத்தில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான சேகர்பாபு முன்னிலையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மற்றும் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் எம்.பி ஜெகத்ரட்சகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

அரிய செயல்கள்
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், "இந்து சமய அறநலத்துறையில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் செய்யாத பல அரிய செயல்களை கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அமைச்சர் சேகர்பாபு செய்துள்ளார். இந்து சமய அறநலத்துறையில் பல்வேறு கோவிலுக்கு சொந்தமான பல்வேறு சொத்துக்களை மீட்டு அரசிடம் ஒப்படைத்துள்ளார். ஆண்டவன் நிலம் அபகரித்தவர்களுக்கே சொந்தம் என்று இருந்த நிலையை மாற்றி கோவில் நிலத்தை மீட்ட பெருமை அமைச்சர் சேகர்பாபுவிற்கு உண்டு.

சேகர்பாபுவுக்கு பாராட்டு
இந்து சமய அறநிலையத்துறை நமக்கு எதிரான துறை இல்லை. பெரிய பெரிய ஆட்கள், சில சாதிக்காரர்கள் கோவில் தங்களுக்கு தான் சொந்தம் என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள். இப்போதும் சிதம்பரம் கோவில் எங்களுக்கு தான் சொந்தம் என்கிறார்கள். எடுத்துக்கொண்ட பொறுப்பை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற முறையில் அமைச்சர் சேகர்பாபு சிறப்பாகப் பணியாற்றுகிறார்.

திமுக பலமாக இருக்க காரணம்
திமுக பலமாக இருப்பதற்கு காரணம் இருப்பவர்களையும், இறந்தவர்களையும் பாராட்டுவது தான். உழைத்தவனை, கட்சிக்காக சிறைக்குச் சென்றவனை, சித்திரவதை அனுப்பவித்தவனை பாராட்டும் குணம் திமுகவிற்குத்தான் உண்டு. திமுகவில் படிப்பகம் என அறிவகங்கள் உள்ளன. இப்படி திமுக விதை ஊன்றப்பட்ட போதே அதனுடன் ஊன்றியவர் பேராசிரியர். இந்த பொதுக்கூட்டத்தின் நோக்கம் என்பது திராவிடத்தின் வரலாற்றை இளைஞருக்கு தெரியபடுத்துவதே.

அடுத்த வருடம் கவலையே இல்லை
ஒன்றரை ஆண்டுகளில் சிறப்பான செயல்களை வைத்து தான் இந்தியாவில் சிறந்த முதல்வராக நமது தலைவரும், சிறந்த மாநிலமாக தமிழ்நாடும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சிறப்பாக அரசு செயல்பட்டதால் இந்த முறை சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கவில்லை. இன்னும் வரக்கூடிய காலங்களில் மேலும் சில நடவடிக்கைகள் மேற்கொண்டு சென்னையில் எங்கும் மழைநீர் தேங்காமல் தடுக்கப்படும். அடுத்த ஆண்டு மழையை பற்றி பொதுமக்கள் கவலையே படாமல் இருக்கலாம்.

இருக்கிற வரை கட்சிக்காக
எவன் கட்சிக்கு உழைக்கிறானோ, எவன் கட்சிக்காக பாடுபடுகிறானோ அவன் கட்சியில் இருக்கட்டும். இருக்கிற காலம் இன்னும் எவ்வளவு என்று எனக்கு தெரியாது. ஆனால் இருக்கிற வரை கட்சிக்காக உழைப்பேன். என் தலைவன் கருணாநிதி. என் கட்சி திமுக. சட்டசபை கூடப்போகிறதே என்று அதிமுககாரர் ஒருவரிடம் கேட்டேன். அதற்கு அவரோ அட ஏண்ணே.. நாங்க எங்க உட்காருறதுனே தெரியல, இரண்டு நாளில் சட்டசபையை முடிச்சுருங்க என்கிறார்." எனப் பேசியுள்ளார்.
-
Rs 8000 Gift Voucher: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000 கூப்பன் எங்கே கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? -
அதிமுக கோட்டையில் ஓட்டை போடும் திமுக.. கொங்கு மண்டலத்தில் மாறும் களம்! Poll Tracker கருத்துக்கணிப்பு -
வில்லிவாக்கம் தொகுதி திமுக பொறுப்பாளர்கள் கூட்டத்தில், மனைவியுடன் பங்கேற்ற ஸ்டாலின் மருமகன் சபரீசன் -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி!












Click it and Unblock the Notifications