Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லேசான காய்ச்சல்.. உடல் சோர்வு.. சென்னை அப்பல்லோவில் அமைச்சர் துரைமுருகன் அனுமதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வயோதிகம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புதான் என்றும் அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு அவ்வப்போது உடல் நல பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கடந்த மாத இறுதியில் திடீர் காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Minister Durai Murugan hospitalized at apollo for health issue

துரைமுருகன் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது உடல் நலனில் முன்னேற்றம் ஏற்படவே அவர் மருத்துவமனையில் இருந்து மறுநாளே வீடு திரும்பினார்.

இந்த நிலையில் இன்று அதிகாலையில் மீண்டும் உடல் நல பாதிப்பு ஏற்படவே துரைமுருகன் மீண்டும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லேசான காய்ச்சல் உள்ளதாகவும் அவர் ஓய்வெடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வயோதிகம் காரணமாகவே அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Minister Durai Murugan hospitalized at apollo for health issue

காட்பாடியை அடுத்துள்ள காங்குப்பம் என்ற கிராமத்தில், 1938ஆம் ஆண்டு, ஜூலை 1ம் தேதி பிறந்தவர் துரைமுருகன். தந்தை துரைசாமி, தாயார் தவசி அம்மாள். வசதியற்ற குடும்பத்தில் பிறந்த துரைமுருகனுக்கு பணம் கொடுத்து உதவியவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் தனிக் கட்சி தொடங்கியபோது துரைமுருகனையும் தன்னுடன் வருமாறு அழைத்தார். ஆனால், நீங்கள் எனக்கு உதவி செய்திருக்கலாம். ஆனால், என்னுடைய தலைவர் கலைஞர்தான் என்று துரைமுருகன் எம்.ஜி.ஆருடன் செல்ல மறுத்து கருணாநிதி பக்கம் உறுதியுடன் நின்றார். வழக்கறிஞர், அரசியல்வாதி, பேச்சாளர் எனப் பன்முகத் திறன் கொண்டவர் துரைமுருகன்.

சட்டப்படிப்பு மற்றும் முதுகலைப் பட்டம் பயின்ற துரைமுருகன். திமுகவில்அதிக அனுபவமுள்ள மூத்த தலைவர்களில் ஒருவர். நீண்ட காலம் திமுக மாணவர் அணியில் அங்கம் வகித்தவர், பின்னர் தலைமைக் கழக முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர் என உயர்ந்து, தற்போது பொதுச்செயலாளர் எனக் கட்சியின் உயரிய பொறுப்பையும் வகிக்கிறார். வயதானபோதும் இன்றைக்கும் கட்சி நிகழ்ச்சிகளில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். அமைச்சர் பணிகளை அயராது மேற்கொண்டு வருகிறார்.

Minister Durai Murugan hospitalized at apollo for health issue

சில ஆண்டுகளுக்கு முன்பு இதய பிரச்சினைக்கு சிகிச்சை பெற்ற துரைமுருகன், அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் சனிக்கிழமை நள்ளிரவில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்படவே உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்கள் தரப்பில் கேட்டபோது, துரைமுருகனுக்கு வயோதிகம் காரணமாக ஏற்படும் வழக்கமான பாதிப்புதான், தற்போது அவர் நலமுடன் இருக்கிறார் என்றனர். கடந்த ஆண்டு அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து தீவிர சிகிச்சைக்குப் பின்னர் அதிலிருந்து குணமடைந்து அரசியல் பணியாற்றி வருகிறார் துரைமுருகன். அவ்வப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டலாம் உடனடியாக நலமடைந்து தீவிரமாக அரசியல் பணியாற்றி வருகிறார் துரைமுருகன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+