அதெல்லாம் முடியாது! ஒரே பதிலில் விஜயதாரணியை ஆஃப் செய்த துரைமுருகன்! சிரிப்பை அடக்க முடியாத அப்பாவு!
சென்னை : தனது தொகுதிக்குட்பட்ட பகுதியில் கால்வாயை சீர் செய்ய வேண்டும் என காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி கோரிக்கை விடுத்த நிலையில் தண்ணீர் வராத கால்வாயை எல்லாம் சீரமைத்து தடுப்பணை கட்ட முடியாது என ஒரே வார்த்தையில் பதில் கொடுத்து ஆஃப் செய்தார் துரைமுருகன். அதை பார்த்து சபாநாயகர் அப்பாவு சிரிப்பில் ஆழ்ந்தார்.
தமிழக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் நேற்று கூடிய நிலையில் கூட்டத்தொடர் தொடங்கியதும் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை சட்ட சபை கூடிய நிலையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் அமளி ஈடுபட்டனர். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் நியமனம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

சட்டசபை கூட்டத் தொடர்
கேள்வி நேரத்தின் போது இது பற்றி பேசிக் கொள்ளலாம் என அப்பாவு கூறினார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் அவர்களை சட்டமன்ற வளாகத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என சபாநாயகர் அப்பா உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் வெளியேற்றப்பட்டதற்கு பின் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

காங்கிரஸ் விஜயதாரணி
தொடர்ந்து இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்ய பிற தலைவர்கள் வரவேற்று பேசினர் இதை எடுத்து கேள்வி நேரம் நடைபெற்றது அப்போது பேசிய விலவோடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் விஜயதாரணி தனது தொகுதி தொடர்பாக கோரிக்கை ஒன்றை வைத்தார். அப்போது பேசிய அவர், தனது தொகுதிக்குட்பட்ட நெய்யாறு - இடிந்தகரை கால்வாய் மிகவும் சேதமடைந்து இடிந்துள்ளது.

கால்வாயை சீரமைக்க வேண்டும்
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு உள்ளது. அதன் தீர்ப்பு வர தாமதமாகும் எனத் தெரிகிறது. எனவே அந்த கால்வாயை சீரமைக்கும் வகையிலும், நிலத்தடி நீரை செறிவூட்டும் வகையிலும் தனது தொகுதிக்குட்பட்ட பள்ளிக்கூட்டம் பகுதியில் தடுப்பணை கட்டி ரிவர்ஸ் எஞ்சினியரிங் முறையில் ஆய்வு செய்து நீரை கொண்டு வர முடியுமா என கேள்வி எழுப்பினார்.

துரைமுருகன் அதிரடி
அதற்கு பதிலளித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்," நெய்யாற்றிலே கேரளாக் காரர்கள் தண்ணீரே தர மாட்றார்கள்.. தண்ணீர் வராத கால்வாயை சீர்படுத்த வேண்டுமென கேட்கிறார்கள்" என்றார். அப்போது விஜயதாரணி இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாகக் கூறினார். இதனைக் கேட்ட துரைமுருகன், அப்போது தீர்ப்பு வரட்டும்.. சும்மா இருக்கும் கால்வாயை எதற்கு தூர்வாரணும். அதெல்லாம் முடியாது" என கூறி அமர்ந்தார். அப்போது விஜயதாரணி ஏதோ சொல்ல முயற்சிக்க, உங்களை விட எனக்கு நெய்யாற்றை பற்றி எல்லாம் தெரியும் என அமைச்சர் துரைமுருகன் கூறியதும் சிரித்தே விட்டார் சபாநாயகர் அப்பாவு.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications