லண்டனை போல் சென்னை மாறும்! கூவம் நதி தூய்மையாக்கப்படும்! அமைச்சர் எ.வ.வேலு கொடுத்த உறுதி!
சென்னை: கூவம் நதியை சீரமைக்கும் பணி விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் அதன் பிறகு லண்டனை போல் சென்னை மாறும் எனவும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
மழைக்காலத்திற்கு பிறகு கூவம் நதியை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்ற உறுதியை அமைச்சர் எ.வ.வேலு அளித்துள்ளார்.
இதனிடையே இந்தாண்டு சென்னையில் மழைவெள்ளம் ஏற்படாது என்ற நம்பிக்கையையும் கொடுத்துள்ளார் அமைச்சர் எ.வ.வேலு.

சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் 90% நிறைவடைந்து விட்டதாகவும் இன்னும் 10% மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருக்கிறார். அதனையும் விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதால் பணிகள் விரைந்து முடிவடையும் எனக் கூறினார்.
சென்னை மக்கள் இந்தாண்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு அதிகாரிகள் போட்டி போட்டு பணியாற்றி வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.

இதேபோல் மதுரவாயல் -துறைமுகம் பறக்கும் சாலையை வரும் 2024ஆம் ஆண்டு திறக்கும் வகையில் பணிகள் நடைபெற உள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியிருக்கிறார்.
இதனிடையே தேம்ஸ் நதியை போல் கூவம் நதி தூய்மையாக்கப்பட்டால் அது தமிழக வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக பார்க்கப்படும். அமைச்சர் எ.வ.வேலு கூறியதை போல் சென்னை லண்டனாக எப்போது மாறும் என்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் சென்னை வாசிகள்.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications