Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எந்த பிரச்சினையும் வராது! மாண்டஸ் புயலை எதிர்கொள்ள தயார்! அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் நம்பிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை : புயல் எச்சரிக்கைக்கு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து காணொளி வாயிலாக மாவட்ட ஆட்சியர்களிடம் நிலவரங்களை கேட்டறிந்ததோடு கண்காணிப்பு அதிகாரிகளிடமும் நிலவரங்களை முதலமைச்சர் கேட்டறிந்துள்ளதாகவும், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த புயலை அரசு எதிர்கொள்ளும் என பேரிடர் மற்றும் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் உறுதியளித்துள்ளார்.

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாண்டஸ் புயலாக உருமாறி தற்போது சென்னையில் இருந்து சுமார் 130 கி.மீ தூரத்தில் இப்போது மையம் கொண்டுள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

வடமேற்கு திசையில் நகர்ந்துவரும் மாண்டஸ் புயல், இன்று நள்ளிரவு - நாளை அதிகாலைக்கு இடைப்பட்ட நேரத்தில் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் அப்பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாண்டஸ் புயல்

மாண்டஸ் புயல்

புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், தேவையான அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என்றும் தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. நாளை மாண்டஸ் புயல் கரையை கடக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாடு, புதுச்சேரியில் அதிக கன மழை பெய்யும் என்பதால் பல பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

இந்நிலையில் புயல் எச்சரிக்கைக்கு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து காணொளி வாயிலாக மாவட்ட ஆட்சியர்களிடம் நிலவரங்களை கேட்டறிந்ததோடு கண்காணிப்பு அதிகாரிகளிடமும் நிலவரங்களை முதலமைச்சர் கேட்டறிந்துள்ளார். இதனிடையே யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த புயலை அரசு எதிர்கொள்ளும் என பேரிடர் மற்றும் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் உறுதியளித்துள்ளார்.

கண்காணிப்பு

கண்காணிப்பு

சென்னையில் மாண்டஸ் புயல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், "புயல் எச்சரிக்கைக்கு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து காணொளி வாயிலாக மாவட்ட ஆட்சியர்களிடம் நிலவரங்களை கேட்டறிந்ததோடு கண்காணிப்பு அதிகாரிகளிடமும் நிலவரங்களை முதலமைச்சர் கேட்டறிந்துள்ளார். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்ட ஆட்சியர்களோடு நேரடியாக காணொளி வாயிலாக முதலமைச்சர் கேட்டறிந்தார்.

நிவாரண முகாம்

நிவாரண முகாம்

மாமல்லபுரத்தில் இருந்து 110 கிலோ மீட்டர் தொலைவில் புயல் நகர்ந்து கொண்டு வருகிறது. மாமல்லபுரம் பகுதிக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து மாநிலம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 121 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மீனவ கிராம மக்களை நிவாரண முகாம்களுக்கு அழைத்து சென்று உணவு உள்ளிட்ட வசதிகளை மேற்கொள்ள முதலமைச்சரை உத்தரவிட்டுள்ளார். 1,936 நிவாரணம் மையங்கள் மாநில முழுவதும் தயார் நிலையில் உள்ளது. இரவு முழுவதும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் பணியில் இருப்பார்கள்

எதிர்கொள்ள தயார்

எதிர்கொள்ள தயார்

மாவட்ட நிர்வாகத்திற்கு தேவையான உதவிகள் மற்றும் அறிவுறுத்தல்களை தொடர்ந்து வழங்குவோம். 2,204 பேர் தற்போது வரை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரண முகாம்களில் இனி தொடர்ந்து மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மாமல்லபுரம் முதல் மரக்காணம் வரை தொடர்ந்து நிவாரண முகங்களில் பொதுமக்களை பத்திரப்படுத்தும் வேலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மிகப்பெரிய பாதிப்பு சென்னைக்கு இருக்காது என எதிர்பார்க்கிறோம். சென்னையை பாதித்தாலும் தயார் நிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உள்ளது. யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த புயலை அரசு எதிர்கொள்ளும். அணை திறந்து விடும் நிலையில் தற்போது எங்கும் இல்லை. உரிய முன்னறிவிப்புகள் கொடுத்தே அவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+