சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீராவி முறையை பொது இடங்களில் யாரும் செய்ய வேண்டாம் - அமைச்சர் மா சுப்பிரமணியன்

Google Oneindia Tamil News

சென்னை: நீராவி முறையை பொது இடங்களில் யாரும் செய்ய வேண்டாம் என சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் நீராவி முறையை பொது இடங்களில் யாரும் செய்ய வேண்டாம். பொது இடங்களில் ஒரே நேரத்தில் பலர் ஆவிப்பிடிப்பதால் கொரோனா பரவல் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. பொது இடங்களில் ஆவிப்பிடித்தல் போன்ற நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும்.

நாரதா லஞ்சம் வழக்கு:மே.வ.அமைச்சர்கள் பிா்ஹாத் ஹகீம், சுப்ரதா முகர்ஜி உட்பட 4 பேரை கைது செய்தது சிபிஐநாரதா லஞ்சம் வழக்கு:மே.வ.அமைச்சர்கள் பிா்ஹாத் ஹகீம், சுப்ரதா முகர்ஜி உட்பட 4 பேரை கைது செய்தது சிபிஐ

மருத்துவர்களின் அனுமதி இல்லாமல் முகநூலில் வருவதை பார்த்து விட்டு யாரும் சுயமாக புகை போடுதல் கூடாது. மருத்துவர்கள் அறிவுரை இல்லாமல் சுய வைத்தியம் எடுத்து கொள்வது மிகவும் தவறு.

கிருமிகள்

கிருமிகள்

வாயை திறந்து மூடும் போது கிருமிகள் அருகில் உள்ளவர்களுக்கும் எளிதாக பரவும். புகைப்போடுதல் மூலம் அழுத்தமான காற்று வாய் வழியாக சென்று நுரையீரலில் எளிதில் பாதிக்கும் அபாயம் உள்ளதாக மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கைகழுவுவது

கைகழுவுவது

இத்தனை ஆண்டுகளாக பழங்கால முறைகளை விட்டுவிட்டு மாடர்ன் என்ற பெயரில் பழமையை கடைப்பிடிக்காமல் இருந்தோம். ஆனால் இந்த கொரோனா வந்தவுடன் மஞ்சள் தண்ணீர் குடிப்பது, மஞ்சள் கலந்து பால் குடிப்பது, கைகளை அடிக்கடி கழுவுவது உள்ளிட்ட செயல்களை செய்து வருகிறோம்.

வேது பிடிப்பது

வேது பிடிப்பது

அது போல் சளி பிடித்தால் ஆவி அல்லது வேது பிடிப்பதை மூதாதையர்கள் வழக்கமாக கொண்டிருந்தார்கள். ஆனால் இன்றோ நாம் மெடிக்கல் ஷாப்பில் போய் மாத்திரை வாங்கி போட்டு வருகிறோம். தற்போது கொரோனாவால் தொண்டையில் உள்ள சளி நீங்க ஆவி பிடிக்கும் முறை மீண்டும் கொண்டு வரப்படுகிறது. இதற்காக ஆவி பிடிக்கும் சிறிய அளவிலான மின்சாரத்தை கொண்டு இயக்கும் கருவிகளும் வந்துள்ளன.

கொதி நீர்

கொதி நீர்

இதில் கீழ் உள்ள லேயரில் தண்ணீர் கொதித்து அதன் ஆவி மேற்புறமாக வரும். அதன் அருகே நாம் மூக்கு, வாய் படுவது போல் வைத்திருக்க வேண்டும். இது போல் ஆவிபிடித்தல் மூச்சுக்குழாயில் உள்ள தொற்றுகளை சரி செய்ய உதவும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் 10 பேர் சேர்ந்து ஆவி பிடிக்கும் வகையில் நூதன முயற்சி செய்யப்பட்டது. இதற்கு பெரும் அளவில் வரவேற்பு இருந்தாலும் மருத்துவர்கள் இது அபாயத்தை ஏற்படுத்தும் என்றே கூறியுள்ளனர்.

ஆவி பிடித்தல்

ஆவி பிடித்தல்

இது போல் பொது இடங்களில் ஆவி பிடிக்கும் போது ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தால் உடனே அது மற்றவர்களை எளிதில் தாக்கும் என மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளார். சென்னையில் மட்டுமல்லாது கோவை, திருச்செங்கோடு உள்ளிட்ட இடங்களிலும் இது போல் பொது ஆவி பிடித்தல் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

பார்வையிட்ட போது

பார்வையிட்ட போது

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பொது இடங்களில் ஆவிபிடித்தல் கூடாது என சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். லயோலா கல்லூரியில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையத்தை அவர் பார்வையிட்ட போது இவ்வாறு தெரிவித்தார்.

English summary
TN Health Department Minister Ma Subramanian saya that dont do steam inhaler in public places.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X