சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குஜராத்தை பின்னுக்கு தள்ளி! செஸ் ஒலிம்பியாட்டை தட்டி தூக்கியது இப்படிதான்! அமைச்சர் மெய்யநாதன் அதிரடி

Google Oneindia Tamil News

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், இது தொடர்பாகத் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    குஜராத்தை பின்னுக்கு தள்ளி! செஸ் ஒலிம்பியாட்டை தட்டி தூக்கியது இப்படிதான் - அமைச்சர் மெய்யநாதன்

    சென்னை பழைய மகாபலிபுரம் சாலை காரப்பாக்கத்தில் உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் சர்வதேச FIDE சதுரங்க போட்டி இன்று தொடங்குகிறது.

    அந்த மனசு தான் கடவுள்.. பறவைகளுக்காக 6 மாடி கட்டிடத்தை கட்டிய ஜெய்ப்பூர் மக்கள்.. குவியும் பாராட்டு!அந்த மனசு தான் கடவுள்.. பறவைகளுக்காக 6 மாடி கட்டிடத்தை கட்டிய ஜெய்ப்பூர் மக்கள்.. குவியும் பாராட்டு!

    மொத்தம் ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள இந்தத் தொடரைத் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

     அமைச்சர் மெய்யநாதன்

    அமைச்சர் மெய்யநாதன்

    இந்தப் போட்டியில் அமெரிக்க மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 350க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன், "வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த 44வது சதுரங்க (செஸ்) ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28ஆம் தேதி உலக புகழ்பெற்ற மாமல்லபுரத்தில் தொடங்க உள்ளது. அந்த மாபெரும் சிறப்பு நிகழ்வு நடப்பதற்கு முன்பாக இப்போது மற்றொரு சர்வதேச செஸ் போட்டி தொடங்கப்பட்டு உள்ளது.

     வெறும் 24 மணி நேரம்

    வெறும் 24 மணி நேரம்

    இந்தியாவிலுள்ள குஜராத், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்கள் போட்டிப் போட்ட நிலையில் தமிழக முதல்வரின் முயற்சியால் 24 மணி நேரத்தில் செஸ் ஒலிம்பிக் போட்டி தமிழகத்தில் நடைபெற அனுமதி பெற்றார். இந்திய வரலாற்றில் இது வரைக்கும் 187 நாடுகள் பங்கேற்ற விளையாட்டுப் போட்டிகள் நடந்ததாக வரலாறு இல்லை. அப்படிப்பட்ட ஒரு சரித்திர நிகழ்வை நமது முதல்வர் தமிழ்நாட்டில் நடத்துவதற்குப் பெற்றுத் தந்து, அந்த செஸ் போட்டியைத் தலைமையேற்று நேரடியாகக் கண்காணித்து, செயல்படுத்திக் கொண்டு இருக்கிறார்.

     செஸ் ஒலிம்பியாட் தீபம்

    செஸ் ஒலிம்பியாட் தீபம்

    கடந்த 19ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த செஸ் ஒலிம்பியாட் தீபத்தை இந்தியாவில் இருக்கக் கூடிய அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைக் கடந்து வரும் ஜூலை 28ஆம் தேதி தமிழக முதல்வரின் கரங்களில் ஒப்படைக்க இருக்கிறது. இந்தியாவில் 74 கிராண்ட் மாஸ்டர்கள் இருக்கிறார்கள். அதில் அதிகமானவர்கள் தமிழ்நாட்டில், அதிலும் குறிப்பாகச் சென்னையில் தான் உள்ளார்கள். இந்தியாவில் செஸ்ஸின் தலைமையகமாக சென்னை உள்ளது.

     விசா

    விசா

    இந்த போட்டி இங்கு நடைபெறுவது நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அதற்காக ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இதில் 187 நாடுகளைச் சேர்ந்த 227 அணிகள் பங்கேற்க இருக்கிறது. இதில் 135 மேலான நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு விசாக்கள் வழங்கும் நடவடிக்கை நடந்து வருகிறது.

     மாநாடு

    மாநாடு

    மேலும் கல்லூரி மாணவர்களுக்கான விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் விதமாகக் கடந்த 24 மற்றும் 25ஆம் தேதிகளில் குஜராத்தில் உள்ள நிவடியா என்ற பகுதியில் இந்தியாவின் அனைத்து மாநிலத்தைச் சார்ந்த விளையாட்டுத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது. அதில் விளையாட்டுப் போட்டிகள் அடுத்த கட்டமாகக் கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கருத்து எடுத்து வைக்கப்பட்டது. தமிழக முதல்வரின் நோக்கமும் அதுவாகத்தான் இருக்கிறது.

     முதல்வர் நோக்கம்

    முதல்வர் நோக்கம்

    விளையாட்டுப் போட்டிகளைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் கொண்டு சென்றால் தான் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் பொழுது மிகப்பெரிய வெற்றியைப் பெறக்கூடிய வாய்ப்பு ஏற்படும். அமெரிக்காவில் இருக்கக்கூடிய ஒரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் ஒலிம்பிக் போட்டிகளில் 120 தங்க பதக்கங்களை வென்று உள்ளனர் என்பது வரலாறு. அதன் அடிப்படையில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் விளையாட்டுப் போட்டிகளைக் கொண்டு செல்வது தான் தமிழக முதல்வரின் அடுத்த இலக்கு.

     நடவடிக்கை

    நடவடிக்கை

    கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னால், இப்போது தான் பள்ளிகளைத் திறக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் ஒவ்வொரு பள்ளிகளிலும் விளையாட்டு (PET) வகுப்புகள் இருந்தது. ஆனால் தற்போது இல்லை. மீண்டும் அதைக் கொண்டு வந்து நடைமுறை படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தமிழக முதல்வர் மேற்கொண்டு இருக்கிறார்" என்று அமைச்சர் தெரிவித்தார்.

    English summary
    Tamilnadu minister Meyyanathan says totally 187 countries are participating in Chess olympiad: (தமிழ்நாட்டில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து அமைச்சர் மெய்யநாதன்) Meyyanathan expalins about steps taken to encourage sports among students.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X