மேடை பேச்சுக்கு இடையூறு..‛‛கொசுத்தொல்லை’’ என நிர்வாகிகளை கடிந்து கொண்ட அமைச்சர் நாசர்.. சிரிப்பலை
சென்னை: சென்னை அருகே திமுக உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் நாசரின் பேச்சுக்கு இடையூறு செய்யும் வகையில் சிலர் மேடையில் பேசி கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களை கடிந்து கொண்ட அமைச்சர் நாசர், ‛‛சில இடங்களில் இப்படி தான் கொசுத்தொல்லை'' இருக்கும் என கூறியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.
தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலின் அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சராக நாசர் உள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தின் பல இடங்களில் திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டங்களில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் பங்கேற்று கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பேசி வருகிறார். கட்சி பணி தொடர்பான பல்வேறு விஷயங்கள் பற்றி அவர் எடுத்துரைத்து வருகிறார்.
ஆவின் இனிப்புகளுக்கு போட்டி ஜாஸ்தியாயிடுச்சு! அதான் இப்படியெல்லாம் பண்றாங்க! அமைச்சர் நாசர் வேதனை!

அமைச்சர் நாசர் பேச்சு
இதேபோல் தான் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே கரையைான்சாவடியில் திமுக சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் நாசர் பங்கேற்று பேசினார். அப்போது மேடையில் அவருக்கு பின்னால் சிலர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் தங்களுக்குள் பேசி கொண்டிருந்தனர்.

கடிந்து கொண்ட அமைச்சர்
இந்த சத்தம் அமைச்சர் நாசருக்கு கேட்டது. மேலும் அவர்கள் பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்து பேசினார். இதனால் தனது தனது பேச்சுக்கு இடையூறாக இருப்பதாக நாசர் நினைத்தார். இதனால் மைக் முன்பு பேசிய நாசர், பின்னால் இருந்தவர்களை நோக்கி பேச்சை நிறுத்துங்கள் எனக்கூறி கடிந்து கொண்டார்.

கொசுத்தொல்லை
அதோடு ‛‛நாம் இங்கு பேசி கொண்டிருக்க.. பின்னால் அவர்கள் கூட்டம் போட்டு பேசி கொண்டிருக்கிறார்கள். கொசுத்தொல்லை. சில இடங்களில் இப்படித்தான் கொசுத்தொல்லை இருக்கும்'' என அமைச்சர் நாசர் மேடையில் நகைச்சுவைக்காக கூறினர். அதாவது மேடையில் தனது பேச்சுக்கு இடையூறு செய்யும் வகையில் பேசிய நிர்வாகிகளை கொசுத்தொல்லை என சினிமா பட பாணியில் அமைச்சர் நாசர் குறிப்பிட்டார்.

சிரிப்பலை
இதனால் அங்கு சிரிப்பலை எழுந்தது. அதோடு மேடையில் நின்றவர்களும் கூட்டமாக நின்று பேசியதை கைவிட்டு கலைந்தனர். இதனால் அமைதியான சூழல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அமைச்சர் நாசர் கட்சியினர் இடையே தொடர்ந்து பேசி விழாவை முடித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.