சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செக் குடியரசு நாட்டில் ஸ்டைலாக அமைச்சர் தாமோ அன்பரசன்! முதலீட்டாளர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: செக் குடியரசு நாட்டுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள அமைச்சர் தா.மோ.அன்பரசன், அந்நாட்டு தொழில் முதலீட்டாளர்களை தமிழகத்திற்கு வருமாறு சிவப்பு கம்பளம் விரித்து அழைப்பு விடுத்துள்ளார்.

செக் குடியரசு நாட்டில் ஸ்டைலாக கோட் சூட் அணிந்து வலம் வரும் அமைச்சரின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டுள்ளன.

அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, மனோ தங்கராஜ், ஐ.பெரியசாமி, செஞ்சி மஸ்தான், வரிசையில் அமைச்சர் தாமோ அன்பரசனும் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பான விவரம் வருமாறு;

அரசு முறை பயணம்

அரசு முறை பயணம்

தமிழகத்தை தொழில் துறையில் முதன்மை மாநிலமாக உருவாக்கிட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். குறு , சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையில் பல்வேறு புதிய சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் விதமாக முதலமைச்சர் உத்தரவின் படி அமைச்சர் தா.மோ.அன்பரசன் அரசு முறை பயணமாக செக் குடியரசு நாட்டிற்கு சென்றிருக்கிறார்.

செக் குடியரசு

செக் குடியரசு

அங்கு நடைபெறும் MSV கண்காட்சியை பார்வையிட்ட அவர், செக் குடியரசு நாட்டின் அரசு அதிகாரிகள் மற்றும் தொழில் முதலீட்டார்களுடன் ஆலோசனையும் நடத்தியிருக்கிறார். இதனிடையே அமைச்சர் தாமோ அன்பரசனும் அவருடன் பயணித்துள்ள MSME குழுவினரும் EVEKTOR விமானம் தயாரிக்கும் தொழிற் சாலையினையும், கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலையினையும் பார்வையிட்டனர்.

முதலீடுகளை ஈர்க்க

முதலீடுகளை ஈர்க்க

இந்த ஆய்வின் போது அந்நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள வருமாறு அமைச்சர் தாமோ அன்பரசன் அழைப்பு விடுத்தார். ஏற்கனவே தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு துபாய், கொரியா, என பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொழில் முதலீடுகளை ஈர்த்து முதலமைச்சரிடம் பாராட்டு மழை பெற்றிருந்தார். அந்த வரிசையில் குறு , சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை அமைச்சர் தாமோ அன்பரசனும் முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சிகளை தொடங்கியுள்ளார்.

ஸ்டைலாக ஆடை

ஸ்டைலாக ஆடை

அமைச்சருடன் துறை செயலாளர் அருண் ராய், நிதித்துறை அரசு துணை செயலாளர் சி.பிஆதித்யா செந்தில்குமார், தொழில் வணிக கூடுதல் ஆணையர் கிரேஸ் பச்சாவ் மற்றும் தமிழக MSME தொழில் துறை குழுவினர், இந்த சுற்றுப்பயணத்தில் பங்கேற்றுள்ளனர். இதனிடையே செக் குடியரசு நாட்டில் ஸ்டைலாக கோட் சூட் அணிந்து வலம் வரும் அமைச்சரின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டுள்ளன.

English summary
Minister Thamo Anbarasan visit to Czech Republic, has invited the industrial investors of that country to come to Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X