ஓய்வு பெற்ற நிபுணர்களை அழைக்கிறார்.. ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய ரெண்டே கேள்வி வைக்கும் தங்கம் தென்னரசு
சென்னை: தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்லும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஓய்வு பெற்ற நிபுணர்களை அழைத்து இரு கேள்விகளை கேட்கிறார்கள். இதிலிருந்து ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து மக்களின் உயிரை காக்க திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
திமுக ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன்னரே கொரோனாவை கட்டுப்படுத்துவதில் ஸ்டாலின் முழு வீச்சில் பணியாற்றினார். பின்னர் அவர் முதல்வராக பொறுப்பேற்ற 7 நாட்களில் நிறைய மாற்றங்களை செய்துள்ளார்.
திமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவியையும் பார்த்து பார்த்து கொடுத்துள்ளார். தமிழகத்தில் இருக்கும் பிரச்சினைகளை சமாளிக்க யார் சரியான ஆள் என அலசி ஆராய்ந்து துறையை ஒதுக்கியுள்ளார்.

அமைச்சர்கள்
ஸ்டாலின் நினைத்தபடியே அவர் நியமித்த அமைச்சர்களும் தங்கள் கடமையை சரிவர செய்கிறார்கள். சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கொரோனா தடுப்பு பணிகளில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். எம்பிபிஎஸ் பயிலும் மாணவர்களை கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுத்த முயற்சித்து வருகிறார்.

படுக்கைகள்
அது போல் மருத்துவமனையின் படுக்கைகளை அதிகரிப்பது, கொரோனா சிகிச்சை மையங்களை அதிகரிப்பது என இவர் ஒரு பக்கம் செல்கிறார். அது போல் தொழில்துறை அமைச்சராக உள்ள தங்கம் தென்னரசு தமிழகத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு நேற்று முன் தினம் முதல் ஆக்ஸிஜன் உற்பத்தி பணிகள் தொடங்கியுள்ளன.

தங்கம் தென்னரசு
இந்த நிலையில் அவர் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தொழிற்சாலைகளுக்கும் செல்கிறார் அங்கு மூடிக்கிடக்கும் ஆலைகளின் பூட்டுகள் திறக்கப்படுகின்றன. பின்னர் ஓய்வில் சென்ற நிபுணர்கள் திரும்ப அழைக்கிறார்கள். அவர்களை சந்திக்கும் தங்கம் தென்னரசு என்ன கேட்கிறார் தெரியுமா?

ஆக்ஸிஜன்
இரண்டே இரண்டு கேள்விகள்தாங்க. ஒன்று இந்த ஆலையில் உங்களால் ஆக்ஸிஜன் தயாரிக்க முடியுமா, மற்றொரு கேள்வி அப்படி முடியுமென்றால் எத்தனை நாட்கள் ஆக்ஸிஜன் தயாரிக்க உங்களுக்கு காலம் தேவைப்படும் என இரு கேள்விகளை மட்டுமே தங்கம் தென்னரசு கேட்கிறார். ஒரு பக்கம் கொரோனாவை ஒழிக்க முதல்வர் இரவு பகல் பாராமல் உழைக்கிறார் என்றால் மறுபக்கம் அமைச்சர்களும் ஓய்வில்லாமலேயே உழைக்கிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications