இஸ்லாமியர்களுக்காக போராடி வாழ்க்கையில் முதல்முறை கைதானேன்! இப்தார் விழாவில் உதயநிதி ஸ்டாலின்!
சென்னை: இஸ்லாமியர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக, தனது அரசியல் வாழ்வில் முதல்முறையாக தாம் கைது செய்யப்பட்டதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற இப்தார் விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.

பாஜகவின் அடிமையான அதிமுகவை வீட்டுக்கு அனுப்பியது போல் இப்போது பாசிஸ பாஜகவை மத்தியில் ஆட்சியிலிருந்து அகற்றி வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
பாஜகவை இன்னும் வலிமையாக எதிர்க்க வேண்டியிருப்பதால் முதலமைச்சர் ஸ்டாலினின் கரத்திற்கு இஸ்லாமியர்கள் வலு சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
அதிமுக, பாஜகவை தொடர்ந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனையும் உதயநிதி சூசகமாக விமர்சித்தார். டிடிவி தினகரன் இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை என கிண்டல் செய்தார்.

திமுகவை பார்த்தால் சிலருக்கு வயிற்றெரிச்சல் வரத்தான் செய்யும் என்றும் அதற்கு தாங்கள் ஒன்றும் செய்ய முடியாது எனவும் பேசினார்.
சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு மாதத்திற்கு 2 முறையாவது தாம் வந்துவிடுவதாகவும் அமைச்சர் சேகர்பாபு தன்னை அழைத்து வந்துவிடுவதாகவும் கூறினார்.

தேர்தல் வந்தால் மட்டுமே மக்களிடம் வரக் கூடிய இயக்கம் அதிமுக என்றும் ஆனால் எப்போதுமே மக்களிடம் வந்து மக்களுக்காக மக்கள் நலப் பணிகளை ஆற்றக் கூடிய இயக்கம் திமுக எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
கடந்த 4 நாட்களாக தொடர்ச்சியாக பல்வேறு இப்தார் விழாக்களில் கலந்துகொண்டு வரும் உதயநிதி, அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் இன்று நடைபெறும் இப்தார் விழாவிலும் கலந்துகொள்கிறார்.
-
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
உதயநிதி வட்டத்தை காலி செய்யும் விஜய்.. ரெடியான மெகா பிளான்.. முதல் தூண்டிலே திமிங்கலத்திற்கு! -
"24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள்".. முதல்வரிடம் உதயநிதி சரமாரி கேள்வி












Click it and Unblock the Notifications