உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுகிறார்! சர்வதேச திரைப்பட விழாவில் வெள்ளக்கோவில் சாமிநாதன் பெருமிதம்!
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வழிகாட்டுதலோடு செய்தி மற்றும் விளம்பரத்துறை செயல்பட்டு வருவதாக அந்த துறையின் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் சென்னையில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழக அரசின் ஆதரவு தொடரும் என அவர் உறுதியளித்துள்ளார்
அமைச்சரவை மாற்றத்தின் போது வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு வேறு இலாகா வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச திரைப்பட விழா
சென்னை இராயப்பேட்டை சத்யம் திரையரங்கில், இந்தியத் திரைப்படத் திறனாய்வு கழகம் (Indo Cine Appreciation Foundation) சார்பில் நடைபெற்ற "20ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவினை" (Chennai International Film Festival) அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், சினிமாவை ஊக்குவிப்பதற்காக உலகத்தரம் வாய்ந்த சிறந்த திரைப்படங்கள் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுவற்கு பாராட்டு தெரிவித்தார்.

உதயநிதி வழிகாட்டல்
மேலும், திரைத்துறையில் ஒரு நடிகராக இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகி இப்போது தமிழ்நாடு அரசின் அமைச்சராக பொறுப்பேற்றிருக்கிற உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலோடு செய்தி மற்றும் விளம்பரத்துறை செயல்பட்டு வருவதாக பேசினார். தற்போது நடைபெறும் 20வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு எழுபத்தைந்து லட்சம் ரூபாய் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் செய்தித் துறை வழங்கியுள்ளதாக அமைச்சர் சாமிநாதன் குறிப்பிட்டார்.

அமைச்சர் உறுதி
கடந்த 2016, 2017, 2018, 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளுக்கான விருதுகளை தேர்வு செய்வதற்கான குழு அமைக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அதற்கான தேர்வு நடைபெற்று கலைஞர்களுக்கான அந்த விருதுகளும் திரைப்படத் துறையிலும், சின்னத்திரை சார்ந்திருப்பவர்களுக்கும், தமிழ்நாடு அரசின் Film City சார்ந்த மாணவர்களுக்கும் வழங்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.

அமைச்சரவை மாற்றம்
கடந்த திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை என்ற மிகப்பெரிய துறையின் அமைச்சராக இருந்தவர் வெள்ளக்கோவில் சாமிநாதன். இதனால் அண்மையில் நிகழ்ந்த அமைச்சரவை மாற்றத்தின் போது இவருக்கு வனத்துறை உட்பட வேறு ஏதேனும் ஒரு துறை மாற்றிக் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?











Click it and Unblock the Notifications