குசும்புக்கு அளவே இல்லையாப்பா.. மு.க. அழகிரி பெயரில் ஆன்லைன் திமுக உறுப்பினர் அட்டை!
சென்னை: திமுகவின் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையில் சில குசும்பர்கள் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி பெயரில் அட்டை பெற்று சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
எல்லோரும் நம்முடன் என்ற தலைப்பில் திராவிட முன்னேற்றக் கழகம் இணையவழி உறுப்பினர் சேர்க்கையை மேற்கொண்டு வருகிறது. கடந்த 8 நாட்களில் புதியதாக 2,93,355 பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆன்லைன் உறுப்பினர்கள் சேர்க்கை
புதியதாக ஆன்லைனில் 28,593 பேர் திமுக உறுப்பினர்களாகி உள்ளனர். இணையவழி உறுப்பினர் சேர்க்கை முகாம்களை மாநிலம் முழுவதும் திமுகவினர் நடத்தி வருகின்றனர்.

குசும்பன்ஸ் குறுக்குசால்
இத்தகைய கட்சிகளின் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையில் சில குசும்பர்கள் எப்போதும் குறுக்குசால் ஓட்டுவது வழக்கம்தான். இதனை தற்போது திமுகவின் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை முறையும் எதிர்கொண்டிருக்கிறது.

அழகிரிக்கும் உறுப்பினர் அட்டை
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் பெயரில் ஆன்லைன் உறுப்பினர் அட்டையை சில குசும்பர்கள் பெற்றிருக்கிறார்கள். இப்போது இதனை சமூக வலைதளங்களிலும் வைரலாக்கி வருகின்றனர்.

அண்ணனை சேர்த்துட்டாங்களாம்..
அத்துடன் மு.க. அழகிரி ஆதரவாளர்கள், திமுகவில் மீண்டும் அண்ணனை இணைத்துக் கொண்டதற்கு நன்றி என கேப்ஷன்களுடன் இந்த படத்தை பகிர்ந்து வருகின்றனர். ஆன்லைனில் நெட்டிசன்கள் செய்யும் மரண பங்க விளையாட்டுகளுக்கு முடிவுகள்தான் எப்போது?
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்!












Click it and Unblock the Notifications