வாய்ப்பூட்டு போட நினைக்குறீங்களா சிஎம் சார்? வண்டவாளங்களைத் தண்டவாளம் ஏற்றுவோம்! முக ஸ்டாலின் சுளீர்
சென்னை: திமு.க முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் முன்னாள் எம்.எ.ஏ.க்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ரெய்டு நடத்தி திமுகவினருக்கு வாய்ப்பூட்டு போடலாம் என்று நினைக்கிறீர்களா? என முதல்வர் விஜய்யை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின்.
திமுக முதன்மை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கேஎன் நேருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர். கேஎன் நேரு வீடு மட்டுமல்லாமல், அவரது சகோதரர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

மேலுன், திமுக முன்னாள் எம்எல்ஏக்களான அணைக்கட்டு நந்தகுமார், நாமக்கல் ராமலிங்கம் மற்றும் திருச்சி துறையூர் திமுக நகரச் செயலாளர் மெடிக்கல் முரளி ஆகியோர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ரெய்டு நடத்தி திமுகவினருக்கு வாய்ப்பூட்டு போடலாம் என்று நினைக்கிறீர்களா? என முதல்வர் விஜய்யை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பெண்கள், குழந்தைகள், முதியோர் என யாருமே பாதுகாப்பாக இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றிவிட்ட முதலமைச்சர், மக்களின் கவனத்தையும் - ஊடகங்களின் Breaking News-ஐயும் திசைதிருப்ப Roadshow நடத்தலாமா? Raidshow நடத்தலாமா? எனச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்.
ஊழல் பெருச்சாளிகளை எல்லாம் பேரக் குதிரைகளாக மாற்றி தன் கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கும் த.வெ.க. எனும் "TN Branch Washing Machine", தி.மு.க. ஆட்சியின் முன்னாள் அமைச்சர்களை மட்டும் குறிவைத்து நடத்திக் கொண்டிருக்கும் "Vettri Vendetta Politics" திட்டம், வழக்கம் போல் சட்டத்தின் முன் தோற்று, மக்கள் முன் தலைகுனிந்து நிற்கும்!
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலுக்கான ரீல்ஸ் விடியோக்களைத் தயாரிக்கவும் - முதலமைச்சர் மேடையில் punch dialogue என்ற பெயரில் பல modulation-இல் காட்டுக்கத்து கத்தவும் நடத்தப்படும் இந்த ரெய்டுகளைக் கண்டு தி.மு.க.வின் கடைக்கோடிக் தொண்டரின் கால் நகம் கூட அஞ்சாது!
சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, துருப்பிடித்துவிட்ட நிர்வாகம், வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு என மக்களை பாதித்துக் கொண்டிருக்கும் இந்த த.வெ.க. ஆட்சியைக் கண்டு, தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய நாடே எள்ளி நகைக்கிறது. இதை எல்லாம் மறைக்க, தி.மு.க.வினருக்கு வாய்ப்பூட்டு போடலாம் என்று நினைக்கிறீர்கள். இனி இன்னும் இன்னும் வேகமாகத் த.வெ.க. அரசின் வண்டவாளங்களைத் தண்டவாளம் ஏற்றுவோம்!" என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
