சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"லிஸ்ட்டில்".. மொத்தம் 21 பேராம்.. ஸ்டாலின் இப்படி செய்யலாமா.. வெடித்து கிளம்பியது பிரச்சனை..!

: திமுகவில் உட்கட்சி பூசல் வெடித்து கிளம்பி உள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: மொத்தம் 21 பேராம்.. எல்லாருமே வாரிசுகளாம்.. இவர்கள் அனைவருக்கும் தேர்தலில் போட்டியிட சீட் தந்துள்ளது திமுக.. இதுதான் அந்த கட்சிக்குள் தற்போது கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் பிரச்சனையாகும்..!

வழக்கமாக திமுகவில் உட்கட்சி பூசல் எந்த அளவுக்கு இருக்கிறதோ, அதே அளவுக்கு வாரிசு அரசியல் விவகாரம் தொன்று தொட்டு வருகிறது.. கட்சியில் உண்மையாக உழைப்பவர்களுக்கு எப்போதுமே முன்னுரிமை தரப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டும் நிலைத்து நீடித்து வருகிறது.

நேற்று திமுகவின் சார்பில் வேட்பாளர் லிஸ்ட் வெளியிடப்பட்டது.. மொத்தம் 173 வேட்பாளர்களின் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார்... இதில் புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்களிடையே நிலவி வந்தது.

"ஹீரோ".. திமுகவா இப்படி.. நம்பவே முடியலையே.. ஆனா "அந்த" ஒரு விஷயம்தான்.. வியந்து பார்க்கும் தமிழகம்

 வாய்ப்புகள்

வாய்ப்புகள்

ஆனால், மொத்த நம்பிக்கையும் தகர்ந்துவிட்டது.. காரணம், ஏற்கனவே போட்டியிட்ட முன்னாள் அமைச்சர்கள், அவர்களது வாரிசுகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.. அந்த லிஸ்ட்டில் 21 பேர் ஏற்கனவே திமுகவில் பல்வேறு பொறுப்புகளில் உள்ளவர்களுக்கும், சட்டமன்ற தேர்தலில் ஏற்கனவே போட்டியிட்டவர்களுக்கும் அவர்களின் வாரிசுகளுக்கும் இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

வாரிசுகள்

வாரிசுகள்

இதில் நேரிடை வாரிசுகள் 16 பேருக்கும், 5 பேர் தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் இடங்கள் வழங்கப்பட்டுள்ளது... இதுதான் திமுகவில் தொண்டர்களிடையே கடுப்பை தந்து வருகிறதாம்.. குறுநில மன்னர்கள் போன்று வாழையடி வாழையாக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருவது திமுகவில் எப்போதுமே நடப்பதாக அதிருப்தி வெடித்துள்ளது.

கருணாநிதி

கருணாநிதி

கருணாநிதி காலத்தில் இருந்து திமுகவின் மாவட்ட செயலாளர்கள் அந்த பகுதியின் குறுநில மன்னர்களாக செயல்பட்டு வந்தனர்... அது இப்போது ஸ்டாலின் காலத்திலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது... இதை முறியடிக்க முடியாதது ஸ்டாலினின் பலவீனத்தையே காட்டுகிறது... இந்த பலவீனம் சட்டப்பேரவை தேர்தலிலும் எதிரொலிப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

 குடும்ப கட்சி

குடும்ப கட்சி

அதாவது திமுக ஒரு குடும்ப கட்சி என்று ஏற்கனவே அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில், இந்த 21 வாரிசுகளுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்துள்ளது, எதிர்கட்சிகளின் நெடுநாள் விமர்சனத்தை உண்மையாக்கியுள்ளது. வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற பிரச்சாரம் நாடு முழுவதும் நல்ல பலனை அளித்துள்ள நிலையில் தமிழகத்தில் வாரிசு அரசியல் குறித்து சர்ச்சையை அரசியல் கட்சிகள் கிளப்ப திமுக வாய்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

 உதயநிதி

உதயநிதி

இதில், உதயநிதிக்கு சீட் தந்ததன் மூலம், முக ஸ்டாலின், திமுகவை கருணாநிதி குடும்பத்தின் அடுத்த தலைமுறைக்கு கைமாற்றி விடுவதாக தொண்டர்களின் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.. அதாவது, உதயநிதிக்கு சீட் தந்தால், திமுகவின் மற்ற தலைவர்களின் வாரிசுகளுக்கும் சீட் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் திமுகவின் அடிமட்ட தொண்டர்கள் கவலையுடன் சொல்கிறார்கள்.

சலசலப்பு

சலசலப்பு

உதயநிதியுடன் அவரது சம்பந்தப்பட்ட 40 பேருக்கும் சீட் வழங்கப்பட்டுள்ளது. இந்தி மொழி எதிர்ப்பு போன்ற போராட்டங்கள் மூலம் தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் இப்போது, ஒரே ஒருவரின் கைகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது... இது சித்தாந்தங்களில் உருவாக்கப்பட்ட இயக்கத்தின் கொள்கைகளுக்கு நேர் எதிராக இருப்பதாக அரசியல் அறிஞர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

English summary
MK Stalin and Local Politics has arised in DMK over Candidate list
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X