சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மேயரா வந்திருக்கேன்.. அடுத்து... பழைய தோஸ்துகளை சந்தித்த குஷியில் ஸ்டாலின் அதிரடி!

Google Oneindia Tamil News

சென்னை: 50 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடன் படித்த பழைய மாணவர்களை சந்தித்து பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இந்த சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு பன்ச் வைத்து விட்டுப் போனார். அவரது பன்ச்சால் அந்த இடமே கலகலப்பானது.

கடும் பிசியான அரசியல் சூழலுக்கு மத்தியிலும் பழைய மாணவர் சந்திப்பில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அதுவும் அடுத்தடுத்து 2 நாட்களும் அவர் வந்திருந்து தனது பால்ய கால நண்பர்களை மகிழ்வித்தார்.

சென்னை சேத்துப்பட்டில் உள்ளது எம்சிசி மேல்நிலைப் பள்ளி எனப்படும் மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரி பள்ளி. இங்கு 1965ம் ஆண்டு முதல் 1970ம் ஆண்டு வரை அதாவது 6 முதல் 11ம் வகுப்பு வரை ஸ்டாலின் படித்தார்.

உலகை ஆளும் அறிவு எங்களுக்கு இருக்கு..இன்னொருவர் மூளைக்கு வேலை செய்ய முடியாது: பிகே குறித்து சீமான்உலகை ஆளும் அறிவு எங்களுக்கு இருக்கு..இன்னொருவர் மூளைக்கு வேலை செய்ய முடியாது: பிகே குறித்து சீமான்

ஒன்று கூடல்

ஒன்று கூடல்

இந்த மாணவர்கள் ஒன்று கூடி நேற்றும் இன்றும் பழைய மாணவர் சந்திப்பை நடத்தினர். இதில்தான் ஸ்டாலின் கலந்து கொண்டு சந்திப்பையே கலகலப்பாக்கினார். நேற்று ஸ்டாலின் தான் படித்த வகுப்பறைகளைப் பார்வையிட்டு மகிழ்ந்தார். பழைய நண்பர்களுடன் பேசி மகிழ்ந்தார். அதேபோல இன்றும் அவர் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

கலக்கல் டி சர்ட்

கலக்கல் டி சர்ட்

சூப்பர் டி சர்ட்டில் அத்தனை பேரும் வந்திருந்தனர். அவர்களுக்கு இடையே கல்லூரி மாணவர் போல காணப்பட்டார் ஸ்டாலின். இதை அவரது நண்பர்களும் கூட சுட்டிக் காட்டத் தவறவில்லை. ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்காவும் வந்திருந்தார். தனது நண்பர்களுடன் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு பேசிய ஸ்டாலின் பின்னர் அவர்களுடன் இணைந்து சாப்பிடவும் செய்தார்.

பழைய நினைவுகள்

பழைய நினைவுகள்

சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் ஸ்டாலின். அவருடன் நண்பர்களும் உடன் இருந்தனர். அப்போது ஸ்டாலின் பேசுகையில், 50 ஆண்டுகளுக்குப் பிறகு பழைய நண்பர்களை சந்திக்க நல்லதொரு வாய்ப்பாக இது அமைந்தது. பழைய நினைவுகளை, மலரும் நினைவுகள் என்று சொல்வார்களே அது போல பகிர்ந்து கொண்டோம்.

எப்படியெல்லாம் அடி வாங்கினோம்

எப்படியெல்லாம் அடி வாங்கினோம்

எங்கெல்லாம் அமர்ந்திருந்தோம். எந்தெந்த வாத்தியாரிடம் அடி வாங்கினோம், எந்தெந்த வகுப்பையெல்லாம் கட் அடித்தோம், படம் பார்க்கப் போனோம் என்பதையெல்லாம் பகிர்ந்து கொண்டோம். தற்போதைய தலைமை ஆசிரியர் பள்ளியை சுற்றிக் காட்டினார். சில மாற்றங்கள் நடந்துள்ளதே தவிர பழையவற்றை அப்படியே பராமரிக்கிறார்கள். நான் 6 மற்றும் 7வது வகுப்பு படித்த வகுப்பறைகள் கிண்டர் கார்டனாக மாறியுள்ளன.

அடுத்து எப்படி வருவேன்

அடுத்து எப்படி வருவேன்

இந்த பள்ளிக்கு எம்எல்ஏவாக வந்துள்ளேன். மேயராக வந்துள்ளேன். உள்ளாட்சித் துறை அமைச்சராக வந்துள்ளேன். துணை முதல்வராக வந்துள்ளேன். இப்போது எதிர்க்கட்சித் தலைவராக வந்துள்ளேன். நாளை எப்படி வருவேன் என்பதை பிறகு சொல்கிறேன் என்று பன்ச் வைத்து முடித்தார் மு.க.ஸ்டாலின். மு.க.ஸ்டாலின் தனது கடுமையான பிசிக்கு மத்தியிலும் தங்களுடன் வந்து சந்திப்பை சிறப்பித்தது அவரது பழைய நண்பர்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்தது.

English summary
DMK president MK Stalin has shared his nostalgia with his 1970's school mates in Chennai in a Two day meeting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X