Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை.. இன்று ஸ்டாலின் கொடுத்த முக்கிய அப்டேட்! 15 நாளிலேயே இப்படி ஒரு மாற்றமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரூ.1000 மகளிர் உரிமைத் தொகையால் ஏற்பட்ட மாற்றம் குறித்து இன்று கிராம சபைக் கூட்டத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் உரையாற்றி உள்ளார்.

காணொலி காட்சி வாயிலாக பேசிய அவர், "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கி வைத்திருக்கிறேன். உங்கள் குழந்தைகள் இப்போது பள்ளிக்கு சென்று, சாப்பிடுகிறார்களா?தமிழ்நாடு முழுக்க 16 லட்சம் குழந்தைகள் காலை உணவு சாப்பிடுகிறார்கள். அதுமட்டுமல்ல, எண்ணும் எழுத்தும் திட்டம், பள்ளி உட்கட்டமைப்புத் திட்டங்கள், இதுமாதிரியான திட்டங்களை நீங்கள் மேம்படுத்த உதவி செய்து செயல்படுத்த வேண்டும்.

MK Stalin talk about Rs.1000 Magalir urimai thogai scheme in gram sabha meet

இன்றைக்கு கிராம சபையில் பங்கெடுத்த நீங்கள், பங்கேற்காத உங்கள் ஊர் மக்களிடம் போய் சொல்லுங்கள். கிராம சபையை ஒரு ஆக்கப்பூர்வமான கருத்துப் பரிமாற்றக் களமாக கருதி கலந்து கொள்ள வேண்டும் என்று. கிராம சபையில், ஊராட்சிகளுடைய ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் தேவையான கருத்துகளை மட்டுமே விவாதிக்க வேண்டும்.

ஊராட்சியினுடைய எல்லாப் பகுதிகளும் முழுமையான வளர்ச்சியை அடைய, அங்கே கூடியிருக்கக்கூடிய அலுவலர்களிடத்தில், அவர்கள் துறை மூலமாக மேற்கொள்ளப்படுகிற திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். மகளிர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் அதிக அளவில் கலந்துக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

கிராம சபையில் அவர்கள் கருத்துகளுக்கு உரிய முக்கியத்துவமும் அளிக்கப்பட வேண்டும். தேர்வு செய்யப்படுகிற பணிகள் பொதுவானதாகவும் எல்லோரும் பயன்பெறும் வகையில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். கிராம சபை நடைபெற்ற விவரங்களை குறிக்க, பதிவேடு பராமரித்து, எல்லோருடைய கருத்துகளையும் பதிவு செய்ய வேண்டும்.

நீர் ஆதாரங்களை வளப்படுத்துதல், 'தண்ணீரின் முக்கியத்துவம், நிலத்தடி நீரினை செறிவூட்டுதல், நீர்நிலைகளைப் பாதுகாத்தல் - போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள வேண்டும். சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்தல், சுகாதாரம் பேணுதல், முறையான திட, திரவக் கழிவு மேலாண்மை செய்தல் - போன்ற பணிகளை மேற்கொள்ளவும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதை நிலைநிறுத்துகிற வகையில், எல்லா ஊராட்சி மன்ற தலைவர்களும் மக்கள் பணி ஆற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகிற வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது. ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் இந்தத் திட்டத்தின் மூலமாக பயனடைந்து கொண்டு வருகிறார்கள்.

விடுபட்டவர்களும் மேல்முறையீடு செய்யலாம் என்கிற வாய்ப்பை அரசு வழங்கியிருக்கிறது. இந்தத் திட்டத்தில் கிராமப்புறப் பெண்கள்தான் அதிகமாக பயனடைகிறார்கள். 1,000 ரூபாய் என்பது அவர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் மிகுந்த உதவியாக இருக்கிறது. இன்னும் சொன்னால், ஊரகப் பகுதிகளில் பணப்புழக்கம் அதிகமாக இந்தத் திட்டம் வழிவகை செய்திருக்கிறது.

ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றே - மகளிருக்குக் கட்டணமில்லாப் பயணம் என்கிற விடியல் பயண வசதியை ஏற்படுத்தித் தந்தோம். இதுவும் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது. அரசுப் பள்ளியில் படித்த மாணவிகள், உயர்கல்விக்காகக் கல்லூரியில் சேர்ந்தால், அவர்களுக்குப் புதுமைப்பெண் திட்டத்தில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறோம்.

வேளாண்மைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து கொண்டு இருப்பதும் நம்முடைய கழக அரசுதான். இதன் மூலமாக, பாசனப் பரப்பும் அதிகமாகி, வேளாண் உற்பத்தியும் உயர்ந்துள்ளது. அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்திற்கு புத்துயிர் வழங்கி, விரிவுபடுத்தி கொண்டு வருகிறோம்.

இப்படியாக, கிராமங்களுடைய கிராம மக்களுடைய ஒட்டுமொத்த முன்னேற்றத்தில் சிறப்பு கவனத்தை திமுக அரசு செயல்படுத்தி கொண்டு வருகிறது. அனைத்துத் துறையும் வளர வேண்டும் அனைத்து மாவட்டங்களும் வளர வேண்டும் என்ற இலக்கை வைத்து செயல்பட்டு வருகிறோம். நகர்ப்புறங்கள் மட்டும் வளர்ந்தால் போதாது - கிராமப்புறங்களும் வளர்ந்தாக வேண்டும்.

"ஒரு மாநிலத்தினுடைய வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக தொழில் வளர்ச்சியாக மட்டும் இருக்கக் கூடாது. சமுதாய வளர்ச்சியாக இருக்க வேண்டும்" என்று நான் அடிக்கடி சொல்லி கொண்டு வருகிறேன். அதை செயல்படுத்திக் காட்ட வேண்டும் என்றால், கிராமங்கள் முழுமையாக வளர்ச்சி அடைந்தாகவேண்டும். இதை மனதில் வைத்துதான் திட்டங்களையும் செயல்படுத்தி கொண்டு வருகிறோம்.

இன்று அக்டோபர் 2, அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள். "இந்தியா - கிராமங்களில் வாழ்கிறது" என்று சொல்லி, 'கிராம சுயராஜ்ஜியம்' எனும் கிராம தற்சார்பு நிலையை எல்லா கிராமங்களும் அடைய வேண்டும் என்று விரும்பினார்.

தற்சார்புள்ள கிராமங்கள் தன்னிறைவு பெற்ற கிராமங்கள் எல்லா வசதிகளும் கொண்ட கிராமங்கள் - சமூக வளர்ச்சி பெற்ற கிராமங்கள் - ஆகியவற்றை உருவாக்க இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு எந்நாளும் உழைக்கும், உழைக்கும், உழைக்கும்!" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+