துடித்த சித்தரஞ்சன் சாலை.. ஸ்டாலின் டென்சன்.. உடைந்து போன ராகுல்.. இரவு முழுக்க நடந்தது என்ன?
சென்னை: ராஜ்யசபா தேர்தலுக்கு மனுத்தாக்கல் செய்ய இன்னும் ஒரே ஒரு நாள் மட்டும் இருக்கும் நிலையில், திமுக-காங்கிரஸ் கூட்டணி உறவு இழுபறியாகவே இருந்து வருவதில் காங்கிரஸ் மீது செம டென்சனில் இருந்து வருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின். நேற்று நள்ளிரவைத் தாண்டியும் சித்தரஞ்சன் சாலை பாரபரப்பாகவே இருந்துள்ளது. இந்த நிலையில், டெல்லியிலிருந்து நேற்று இரவு கோவாவுக்கு திரும்பிய கிரிஸ் சோடங்கர், சென்னைக்கு எப்போது வருவார்? என்கிற எதிர்பார்ப்பு காங்கிரசிலுள்ள திமுக ஆதரவாளர்கள் மத்தியில் நிலவுகிறது.
தங்களின் முடிவில் உறுதியாக இருந்து வரும் ராகுல்காந்தியை சமாதானப் படுத்திய சோனியாகாந்தி, கூட்டணி விவகாரத்தில் திமுகவின் ஆதரவு நிலையில் இருந்து வருகிறார். ராகுலின் பிடிவாதத்திற்கு கே.சி.வேணுகோபால், கிரீஸ் சோடங்கர் இருவரும் தான் காரணம் என உணர்ந்த சோனியா, திமுகவிடம் பேசுவதற்கு, திமுக குடும்பத்தினருடன் நெருக்கமாக இருக்கும் கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் அல்லது தெலுங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டியை அனுப்பி வைத்து பிரச்சனையை சுமூகமாக்க முடிவு செய்திருந்தார்.

இந்த நிலையில்தான், ப.சிதம்பரத்திடமிருந்து சோனியாவுக்கு ஃபோன் போனது. சோனியாவை தொடர்புகொண்ட ப.சிதம்பரம், ''கூட்டணி சிக்கலை இந்தளவுக்கு இழுத்துக்கொண்டே இருப்பது முதல்வர் ஸ்டாலினை மிகவும் வருத்தம் அடைய வைத்திருக்கிறது. காங்கிரஸுக்காக எவ்வளவோ விட்டுக்கொடுத்திருக்கிறோம். கடந்த 20 ஆண்டுகாலமாக காங்கிரசை திமுக நல்லாதானே வைத்திருக்கிறது என சொல்கிறார் ஸ்டாலின். திமுக கூட்டணியில் எந்த அசெளகரியமும் இல்லாத போது ஏன் காம்ப்ளிக்கேட் செய்துகொள்கிறீர்கள்? தேர்தல் வேலை நிறைய இருக்கு. இன்னும் காங்கிரஸ் பஞ்சாயத்தையே பேசிக்கொண்டிருக்க முடியுமா? என்றும் வருத்தப்படுகி றார். ஒரு முடிவை நீங்கள்தான் எடுக்க வேண்டும் '' என்று பேசியிருக்கிறார்.
சிதம்பரத்திடம் ஸ்டாலின் வருத்தப்பட்டதை அறிந்த சோனியா, ''நீங்களே ஸ்டாலினிடம் பேச்சுவார்த்தை நடத்துங்கள். சிவக்குமாரை அனுப்பி சுமூகமாக்க நினைச்சேன். உங்கக்கிட்ட அவர் (ஸ்டாலின்) பேசினதினாலே...நீங்களே தொடர்ந்து பேசுங்கள்'' என க்ரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார். இதனையடுத்தே, அவசரம் அவசரமாக ஸ்டாலினிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக்கொண்டு அவரை சந்தித் தார் ப.சிதம்பரம். அவருடன் செல்வப்பெருந்தகையும் சென்றார்.
ப.சிதம்பரம் ஸ்டாலினிடம் பேசுவதற்காக செல்கிறார் என்பதை ராகுல்காந்திக்கு தெரிவித்த சோனியா, ''பேசட்டும். ஆனால், 30+2 வேண்டும். அதை பேசி முடிக்கச் சொல்லுங்கள். இதைத்தாண்டி நாம் இறங்கி வரமுடியாது. நம் எதிர்பார்ப்பை திமுக நிறைவேத்தினா கூட்டணியை கண்டினியூ பண்றத்தில் எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை'' என்று கட் அண்ட் ரைட்டாக பேசியிருக்கிறார் ராகுல்காந்தி. இந்த கணக்கை ப.சிதம்பரத்திடம் சொல்லி அனுப்பினார் சோனியா.
ஸ்டாலின் - ப.சி. சந்திப்பில் பரஸ்பரம் நிறைய அரசியல் சம்பவங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இறுதியில் சீட் ஷேரிங் பேசு வந்தது. ஒவ்வொரு எண்ணிக்கையில், கணக்குகள் சொல்லப்பட்டு, இறுதியில் 29+2 என்றும், இந்த ராஜ்யசபா 2-ல் ஒன்று இப்போதும், மற்றொன்று அடுத்த வருடமும் தருகிறோம் என்கிற இறுதி முடிவை திமுக சொன்னதை ப.சிதம்பரம் ஏற்றுக்கொண்டு, சோனியாவிடம் பேசுகிறேன் என சொல்லிவிட்டு கிளம்பினார்.
ஸ்டாலின் சொன்ன கணக்கை சோனியாவிடமும், கார்கேவிடமும் தெரிவித்த ப.சிதம்பரம், ''திமுகவிடம் இதற்குமேலே எதிர்பார்ப்பது ஆரோக்கியமாக இருக்காது. இதுவே திமுக சீனியர்கள் ஏற்கமாட்டார்கள். ஆனாலும் அவர்களை சமாதானப் படுத்திக் கொள்ளலாம் என்கிற ரிஸ்க்கை எடுத்து இந்த இறுதி முடிவை சொல்லியிருக் கிறார் ஸ்டாலின். ஓ.கே. சொல்வது சரியாக இருக்கும்'' என்று விவரித்துள்ளார்.
இந்த நிலையில், இது குறித்து ராகுலிடம் சோனியா தெரிவிக்க, நேற்று நள்ளிரவு வரை எந்த முடிவையும் ராகுல் எடுக்கவில்லை. காங்கிரசிடமிருந்து உறுதியான தகவல் வருமா? என்றுதான் நேற்று நள்ளிரவு வரை காத்திருந்தார் ஸ்டாலின். ப.சி.யை தொடர்பு கொண்டும் பேசினார். அப்போது, ''டெல்லியிலிருந்து தகவல் வந்ததும் உங்களை அழைக்கிறேன். நீங்கள் ரெஸ்ட் எடுங்கள்'' என்று தெரிவித்தார் ப.சிதம்பரம். அதன் பிறகே உறங்கச் சென்றார் ஸ்டாலின்.
இதற்கிடையே, ''நேற்று இரவு டெல்லியிலிருந்து கோவாக்கு திரும்பினார் கிரிஸ் சோடங்கர். ராகுலிடமிருந்து உத்தரவு வந்தால், சென்னைக்கு உடனே ப்ளைட் பிடிக்க தயாராக இருக்கிறார். கிரிஸ் சோடங்கர் வருவது உறுதியானால் கூட்டணியும் உறுதி யாகும்'' என்கிறார்கள் காங்கிரஸ் எம்.பி.க்கள்.
- சிறப்பு நிருபர் எழில்












Click it and Unblock the Notifications