இந்து பயங்கரவாதம் உருவாகும் என பேச்சு... ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை: தமிழகத்தில் இந்து பயங்கரவாதம் உருவாகும் என்று பேசியுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை ஆளுநர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தனியார் டிவி சேனல் நிகழ்ச்சி ஒன்றில் பேட்டியளித்த ராஜேந்திர பாலாஜி, இஸ்லாமிய தீவிரவாதத்தை உருவாக்கும் நோக்கத்தில் சில இயக்கங்கள் தொடர்ந்து அரசியல் செய்தால் இந்து பயங்கரவாதம் உருவாகுவதை யாராலும் தடுக்க முடியாது என கூறியிருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
நெஞ்சில் நஞ்சும்,வாயில் வன்மமும் கொண்டு நாட்டை வன்முறைப் பாதைக்கு மாற்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டமிடுவது வன்மையான கண்டனத்துக்குரியது.
நெஞ்சில் நஞ்சும்,வாயில் வன்மமும் கொண்டு நாட்டை வன்முறைப் பாதைக்கு மாற்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டமிடுவது வன்மையான கண்டனத்துக்குரியது.
— M.K.Stalin (@mkstalin) February 2, 2020
சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்துவிட்டு, சட்டவிரோதி ஆகி வரும் ராஜேந்திர பாலாஜியை ஆளுநர் பதவிநீக்கம் செய்வதோடு; சட்டரீதியான நடவடிக்கை தேவை! https://t.co/656WPLQM8z
சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்துவிட்டு, சட்டவிரோதி ஆகி வரும் ராஜேந்திர பாலாஜியை ஆளுநர் பதவிநீக்கம் செய்வதோடு; சட்டரீதியான நடவடிக்கை தேவை!
இவ்வாறு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
-
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications