"மோடி எங்க டாடி.. மத்தியில் இருப்பது எங்க அய்யா”.. மீண்டும் சொன்ன ராஜேந்திர பாலாஜி!
சென்னை: "மத்திய அரசில் இருப்பது உங்க அய்யா இல்லை; எங்கள் அய்யா மோடி தான் இருக்கிறார்.. எங்கள் டாடி தான் இருக்கிறார்" என சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார். ராஜேந்திர பாலாஜியின் "மோடி எங்கள் டாடி" டயலாக் முன்பு பிரபலமானது. இந்நிலையில், பாஜக கூட்டணியில் அதிமுக மீண்டும் இணைந்த நிலையில் மீண்டும் அதை கூறியுள்ளார் ராஜேந்திர பாலாஜி.
கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த ராஜேந்திர பாலாஜி 2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

அமைச்சராக இருந்தபோது தடாலடி கருத்துகள் மூலம் பரபரப்பை ஏற்படுத்தி வந்தார் ராஜேந்திர பாலாஜி. "அம்மா என்ற ஆளுமை இல்லாத நேரத்தில் மோடிதான் எங்கள் டாடி. மத்தியில் மோடி ஆட்சியும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியும் தான் எப்போதும் தொடரும். பிரதமர் மோடி இருக்கும் வரை எங்களை யாரும் மிரட்ட முடியாது" என்று பேசி இருந்தார் ராஜேந்திர பாலாஜி.
ராஜேந்திர பாலாஜி பேசிய "மோடி எங்கள் டாடி" டயலாக் அரசியல் களம் மட்டுமல்லாது பொதுமக்கள் மத்தியிலும் மிகவும் பிரபலம் ஆனது. ராஜேந்திர பாலாஜியின் பேச்சை திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. அதிமுகவையே மொத்தமாக பாஜகவிடம் அடகு வைத்து விட்டனர், மோடியே லேடியா எனக் கேட்ட ஜெயலலிதாவின் கட்சியில் இருந்து, 'மோடி எங்கள் டாடி' என்ற பேச்சை கேட்கும் நிலை வந்துவிட்டது என விமர்சித்தனர்.
இந்நிலையில், 2024 லோக்சபா தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி முறிந்தது. தற்போது மீண்டும் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன. வரும் 2026 சட்டசபை தேர்தலை இரு கட்சிகளும் இணைந்து எதிர்கொள்ள உள்ளன. இதனால் அதிமுக தலைவர்கள் பிரதமர் மோடியை பாராட்டிப் பேசத்தொடங்கியுள்ளனர்.
இன்று சிவகாசியில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "சிவகாசியில் புதிய ரயில்வே மேம்பாலங்களுக்கு அனுமதி பெற்றது அதிமுக ஆட்சியில் தான். மத்திய அரசிடம் உங்களால் அனுமதி வாங்க முடியுமா? மத்திய அரசில் இருப்பது உங்க ஐயா இல்லை. எங்கள் ஐயா மோடி தான் இருக்கிறார். எங்கள் டாடி தான் இருக்கிறார்" எனப் பேசியுள்ளார்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications