தாய் பத்திரம் இல்லாவிட்டால் வீட்டுக் கடன் கிடைக்குமா? பூர்வீகச் சொத்தை விற்க முடியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சொந்தமாக ஒரு நிலம் வாங்க வேண்டும், வீடு கட்ட வேண்டும் என்பது பலரின் கனவு.. ஆனால், சொத்து வாங்கும்போது ஒரு முக்கியமான ஆவணத்தை பற்றி பலருக்கும் முழுமையாகத் தெரிவதில்லை. அதுதான் தாய் பத்திரம்! இது இல்லாவிட்டால் நிலம் வாங்க முடியாதா, வீட்டுக் கடன் கிடைக்காதா? இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!

ஒரு சொத்து இப்போது யாருடைய பெயரில் இருக்கிறது என்பதை மட்டும் தெரிந்துகொண்டால் போதாது. அந்த சொத்து அவருக்கு எப்படி வந்தது, இதற்கு முன்பு யார் பெயரில் இருந்தது, அவர்களிடமிருந்து அடுத்தவருக்கு எப்படி மாறியது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.. இதற்கு உதவுவதுதான் தாய் பத்திரம். எளிமையாகச் சொன்னால், ஒரு சொத்தின் முந்தைய உரிமை வரலாற்றைத் தெரிந்துகொள்ள உதவும் முக்கியமான ஆவணம் இது.

Property

தாய் பத்திரம் இல்லாமல் நிலம் வாங்கலாமா?

தாய் பத்திரம் இல்லாமல் நிலம் வாங்க முடியுமா என்றால், வாங்கவே முடியாது என்று சொல்ல முடியாது. ஆனால், தாய் பத்திரம் ஏன் இல்லை என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.... அது தொலைந்துவிட்டதா அல்லது சொத்தின் உரிமையில் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.

தாய் பத்திரத்தின் சான்றளிக்கப்பட்ட நகல், வில்லங்கச் சான்றிதழ், பட்டா, தற்போதைய உரிமைப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களைச் சரிபார்த்த பிறகே நிலம் வாங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும்.. வில்லங்கச் சான்றிதழில் பிரச்சினை இல்லை என்பதற்காக மட்டும் சொத்தின் உரிமை சரியாக இருக்கிறது என்று முடிவு செய்துவிட முடியாது. அதனால் நிலம் வாங்குவதற்கு முன்பு சொத்து ஆவணங்களை வழக்கறிஞர் மூலம் சரிபார்ப்பது நல்லது என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

வங்கியில் வீட்டுக் கடன் கிடைக்குமா?

அதேபோல, தாய் பத்திரம் இல்லாமல் வீட்டுக் கடன் வாங்க முடியுமா என்ற சந்தேகமும் சிலருக்கு இருக்கலாம். வீடு கட்டவோ, வீடு அல்லது நிலம் வாங்கவோ வங்கியில் கடன் கேட்கும்போது, சொத்து தொடர்பான ஆவணங்களை வங்கி சரிபார்க்கும்.. இதில் தாய் பத்திரத்தையும் வங்கி கேட்கலாம்.

தாய் பத்திரம் இல்லாவிட்டால் கடன் கிடைக்குமா என்பது மற்ற ஆவணங்களைப் பொறுத்து மாறுபடும். ஒருவேளை தாய் பத்திரம் தொலைந்துவிட்டால், அதன் சான்றளிக்கப்பட்ட நகலைக் கொடுத்தால் ஏற்றுக்கொள்வார்களா என்று வங்கியில் விசாரிக்கலாம்.. அதனால் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பே வங்கியிடம் ஆவணங்கள் குறித்து கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.

பூர்வீகச் சொத்து

பூர்வீகச் சொத்துக்கு தாய் பத்திரம் இல்லை என்றாலும், அந்தச் சொத்தை விற்க முடியுமா என்பதை அதன் உரிமை ஆவணங்களை பொறுத்தே முடிவு செய்ய முடியும்.

தாத்தா அல்லது தந்தை பெயரில் இருந்த சொத்தின் பழைய பத்திரம் தொலைந்துவிட்டால், கிடைக்கக்கூடிய பழைய பத்திரங்களின் நகல்கள், பட்டா மற்றும் வாரிசுரிமை தொடர்பான ஆவணங்களை வைத்து சொத்தின் உரிமையை சரிபார்க்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், அந்தச் சொத்தில் மற்ற வாரிசுகளுக்கும் பங்கு இருக்கிறதா என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

எனவே, தாய் பத்திரம் இல்லை என்பதற்காகச் சொத்தை விற்க முடியாது என்று சொல்ல முடியாது. அதே நேரத்தில், சொத்தின் உரிமையை உறுதிப்படுத்தாமல் விற்பனை செய்வதையும் தவிர்க்க வேண்டும் என்பதே நிபுணர்களின் அறிவுறுத்தலாகும்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+