ரெட்டி சிக்னல்..அண்ணாமலை காலில் விழுந்த மாணவியின் மார்க் -சீட் எப்படி கிடைக்கும்?விளாசிய திமுக எம்பி
சென்னை: அண்ணாமலை காலில் விழுந்த மாணவி நீட் தேர்வில் 104 மதிப்பெண் மட்டுமே பெற்றுள்ள நிலையில் அவர் மருத்துவம் படித்து முடிக்க ரூ.1 கோடி வரை செலவாகும் என திமுக எம்.பி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
மருத்துவப் படிப்புகளுக்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில், மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக நீட் என்ற நுழைவுத்தேர்வை அறிமுகம் செய்தது.
இதற்கு தொடக்கத்திலிருந்தே தமிழக அரசியல் கட்சிகளும் மாணவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் இதனால் அனிதா தொடங்கி பல மாணவர்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.

நீட் விலக்கு மசோதா
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்குகோரி சட்டப்பேரவையில் 2 முறை தீர்மானங்களை நிறைவேற்றியும் ஆளுநர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப காலம் தாமாதம் செய்ததால் இந்த ஆண்டும் தமிழ்நாடு மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்கவில்லை. இதனால் மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தனர்.

நீட் தேர்வு முடிவுகள்
இந்த நிலையில், பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜூலை 17 ஆம் தேதி நடைபெற்றது. மே 6 ஆம் தேதியுடன் தேர்வுக்காக விண்ணப்பம் நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் 1.32 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி பிற்பகல் 12 மணியளவில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின.

அண்ணாமலை காலில் விழுந்த மாணவி
இந்த நிலையில் நேற்று நீட் தேர்வில் 104 மதிப்பெண் பெற்ற மாணவி ஒருவர் தமிழ்நாடு பாஜக அண்ணாமலையிடம் மருத்துவப் படிப்பு செலவுக்கு உதவி கேட்க சென்றிருந்தார். அப்போது அவரை வாழ்த்திய அண்ணாமலை கல்வி செலவு முழுவதையும் ஏற்பதாக உறுதியளித்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் மாணவி அண்ணாமலை காலில் விழுந்தார். அவரை அண்ணாமலை தூக்கி காலில் விழக்கூடாது என்றார்.

அமர் பிரசாத் ரெட்டியின் சிக்னல்
இந்த நிலையில் அண்ணாமலை காலில் மாணவி விழுவதற்கு முன்பாக அவரை பார்த்து பாஜகவை சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி, சைகை காட்டுகிறார். அதன் பின்னர் அவர் அண்ணாமலை காலில் விழுகிறார். இதனை வைத்து அமர் பிரசாத் ரெட்டி கொடுத்த சைகையால்தான் அண்ணாமலை காலில் மாணவி விழுந்தார் என்று சமூக வலைதளங்களில் வீடியோவை பகிர்ந்து பலரும் விமர்சனங்களை பதிவு செய்து வந்தனர்.

செந்தில்குமார் ட்வீட்
இந்த நிலையில் தருமபுரி தொகுதி திமுக எம்.பி. செந்தில்குமார், 104 மதிப்பெண் பெற்றவரால் மருத்துவக் கல்லூரியில் பணம் செலுத்தி சீட் பெறுவது மட்டுமே ஒரே வழி. ஒரு ஆண்டுக்கான கல்விக் கட்டணம் ரூ.16-20 லட்சம். படிப்பை நிறைவு செய்ய ரூ.80 லட்சம் முதல் 1 கோடி வரை செலவாகும். புத்தகங்கள், விடுதி கட்டணத்தையும் சேர்க்கலாம். எல்லாவற்றையும் தாண்டி 40% சதவீதம் வரி செலுத்த வேண்டும். இதற்காக பாஜக மசோதாவை நிறைவேற்றுமா என்று பார்ப்போம்." என்று பதிவிட்டுள்ளார்.
-
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
அரசு பள்ளி முட்டை.. ₹3.70க்கு வாங்கி ₹5.63 விற்பனை. விஜய்க்கு அண்ணாமலை வைத்த கோரிக்கை -
பெருந்துறை இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுகிறாரா? பாஜகவில் செல்வாக்கை நிரூபிக்க ஆசிட் டெஸ்ட்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே!












Click it and Unblock the Notifications