போஸ்டரெல்லாம் வேஸ்ட்டா? முக்குலத்தோரை மேடையேற்றிய இபிஎஸ்! ஓபிஎஸ்க்கு பொதுக்குழுவில் கொடுத்த ஷாக்..!
சென்னை : அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முக்குலத்தோர் சமுதாயத்தின் முக்கிய நிர்வாகிகளாக அறியப்பட்ட கேபி முனுசாமி, ஓ.எஸ்.மணியன், நத்தம் விஸ்வநாதன், ஆர்பி உதயகுமார் ஆகியோர் ஓபிஎஸ்க்கு தீவிர எதிர்ப்பாக பேசிய நிலையில் கடந்த சில நாட்களாக ஓபிஎஸ்-க்கு ஆதரவாக முக்குலத்தோர் சமுதாயம் இருக்கிறது என்ற பிம்பம் உடைக்கப்பட்டுள்ளதாக கருதுகின்றனர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள்.
Recommended Video
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் நேற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 23ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென கூட்டத்தில் இருந்து பாதியிலேயே கிளம்பிச் சென்றார்.
அவர் செல்லும் போது, அவருடைய வாகனத்தை பஞ்சர் ஆகிய சிலர், அவரைத் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. மேலும், ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில்களை வீசியதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிமுக பொதுக்குழு கூட்டம்
முன்னதாக இந்தக் கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார். மேலும், இபிஎஸ்ஐ ஒற்றைத் தலைமையாக கொண்டுவர பொதுக்குழு உறுப்பினர்கள் விரும்புவதாக அறிவித்தார். இதனைக் கண்டித்து ஓபிஎஸ் உட்பட அவரது ஆதரவாளர்கள் வெளிநடப்பு செய்தனர். மேலும் அடுத்த பொதுக்குழு ஜுலை 11ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக போஸ்டர் யுத்தம் நடைபெற்றது.

முக்குலத்தோர் ஆதரவு
குறிப்பாக ஓ பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவு நிர்வாகிகளும், முக்குலத்தோர் கூட்டமைப்பு முக்குலத்தோர் இளைஞர் பேரவை முக்குலத்தோர் இளைஞர் அமைப்பு உள்ளிட்ட பல சமுதாய அமைப்புகள் ஓ பன்னீர் செல்வத்திற்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போஸ்டர்களை ஓட்டுநர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்த ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாகவும் எடப்பாடி பழனிச்சாமி, சிவி சண்முகம், ஜெயக்குமார், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோரை கட்சியிலிருந்து நீக்கியும் பரபரப்பு போஸ்டர்களை ஒட்டினர்.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பு
மேலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும் முக்குலத்தோர் சமுதாயம் இருப்பது போல ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர்களும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சற்று அதிருப்தியில் இருந்தாலும் வேறு வகையில் திட்டம் ஒன்றை தீட்டினார் எடப்பாடி. அந்தத் திட்டத்தின் விளைவுதான் இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் நடந்தேறிய நிகழ்வுகள். அதிமுகவை பொறுத்தவரை முக்குலத்தோர் சமுதாயம் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருப்பதாகவே இன்று அதிமுக பொது குழு கூட்டத்தில் நடைபெற்ற காட்சிகள் எடுத்துக்காட்டின.

எடப்பாடியின் திட்டம்
இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் முக்குலத்தோர் சமுதாயத்தினரே அதிகம் பங்கெடுத்திருந்தனர். அதிமுக பொதுக்குழுவின் தீர்மானங்களை முன்மொழிந்தவர் நத்தம் விஸ்வநாதன். மொத்தமுள்ள 16 தீர்மானங்களில் முதல் 8 தீர்மானங்களை முன்மொழிந்து ஒப்புதல் பெற்றவர் ஆர்.பி உதயகுமார். மீதமுள்ள 8 தீர்மானங்களை முன்மொழிந்து ஒப்புதல் பெற்றவர் ஓஎஸ் மணியன். கட்சியின் வரவு செலவு வாசித்து ஒப்புதல் பெற்றவர் புதுகை விஜயபாஸ்கர். இவர்கள் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஓபிஎஸ்க்கு மாற்றாக சமுதாய ஓட்டு வங்கியை சமன் செய்ய இப்படி திட்டம் தீட்டியிருக்கிறார் என்கின்றனர் அதிமுக மூத்த நிர்வாகிகள்.
-
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா!












Click it and Unblock the Notifications