தூக்கத்தில் சாம்பியன் பட்டம்.. மும்பை இளம்பெண்ணுக்கு லட்ச லட்சமாய் பரிசை அள்ளி கொடுத்த நிறுவனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 60 நாட்களுக்கு தினமும் நிம்மதியான தூக்கத்தை போடும் போட்டி ஒன்றில் பங்கேற்ற மும்பையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அவருக்கு ரூ.9.6 லட்சம் ரூபாய் பரிசும் இலவச சுற்றுலாவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நன்றாக தூங்கியதற்கு பரிசா? என இந்த போட்டி குறித்த விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

பிரபல வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான வேக்ஃபிட் ஆண்டுதோறும் நூதன போட்டிகளை நடத்தி வருகிறது. மெத்தை, கட்டில்கள் உள்ளிட்டவற்றை தயாரித்து வரும் வேக்ஃபிட் நிறுவனம் தனது நிறுவனத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் தூக்கத்தில் சாம்பியன் என்ற பயிற்சி திட்டத்தை அறிவித்து வருகிறது.

Mumbai woman winning Rs 9 6 lakh and a sponsored holiday after winning Sleep Internship


60 நாட்கள் தூங்க வேண்டும்

இந்த பயிற்சி திட்டத்தில் பங்கேற்கும் போட்டியாளர்கள், வேறு எதுவும் செய்ய வேண்டியது இல்லை. ஆழ்ந்து தூங்க வேண்டும் அவ்வளவுதான்.. சீரான தூக்கம் மற்றும் ஆக்கப்பூர்வமான சில சவால்களும் கொடுக்கப்படும். அவற்றை வெற்றிகரமாக செய்து முடித்தால் பரிசு அளிக்கப்படும். சமீப காலமாக பிரபலமாகி வரும் இந்த போட்டியில் பங்கேற்க 2 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்து இருந்தனர்.

நாடு முழுவதும் வந்து குவிந்த 2 லட்சம் விண்ணப்பங்களில் வெறும் 10 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு இருந்தார்கள். இந்த 10 பேருக்கும் பல்வேறு சுற்றுகள் நேர்முகத்தேர்வுகள் நடத்தப்பட்டன. இறுதியாக தூக்க போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு 60 நாள்கள் அவர்களுக்கு சோதனை நடைபெற்றது. இந்த 60 நாட்களிலும் அவர்களின் தூக்கத்தின் அளவு, எந்த பொசிஷனில் தூங்குகிறார்கள். ஆழ்ந்து தூங்குகிறார்களா? என்றெல்லாம் கண்காணிக்கப்பட்டது.

வித்தியாசமான போட்டிகள்

வெறும் தூக்கம் மட்டுமின்றி போட்டியில் பங்கேற்றவர்கள் தங்கள் கிரியேட்டிவிட்டியை காட்டும் வகையில் வழக்கத்திற்கு மாறான சில பணிகளும் கொடுக்கப்பட்டன. ஸ்லீப் சினிமா, ஸ்லீப் பிங்கோ என்ற பெயர்களில் வித்தியாசமான போட்டிகள் வைக்கப்பட்டன. 'ஸ்லீப் சினிமா' வில், பிரபல திரைப்படக் காட்சிகளை தூக்கம் தொடர்பான அம்சங்களுடன் வித்தியாசமாக மீண்டும் நடித்துக் காட்ட வேண்டும்.

'ஸ்லீப் பிங்கோ'வில், ஒரு வாரம் முழுவதும் தங்களது தூங்கும் பழக்கவழக்கங்களைக் கண்காணித்து மதிப்பீடு செய்ய வேண்டும். அதுபோக மற்றொரு வித்தியாசமான போட்டி ஒன்றும் கொடுக்கப்பட்டது. அது என்னவெனில் போட்டியாளர்கள் பேசும் போது 10 முறை 'போர்வை' அல்லது 'தலையணை' என்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். ஆனால், இந்த வார்த்தைகளை திட்டமிட்டு பயன்படுத்துகிறோம் என்று எதிரில் இருப்பவருக்கு தெரியக்கூடாது.

9.6 லட்சம் பரிசு

அதாவது நார்மல் பேச்சுகளின் போது இயல்பாக இந்த வார்த்தைகள் இருக்க வேண்டும். பிக் பாஸ்சை விட ரொம்ப கஷ்டமான டாஸ்க் கொடுக்கிறார்களே என்று நினைக்கும் அளவுக்கு பல டாஸ்க்கள் இந்த 60 நாட்களும் வழங்கப்படும். தூக்கத்தில் கலக்குபவர்களுக்கு ஒவ்வொரு வாரமும் 'வாரத்தின் சிறந்த தூக்கப் போட்டியாளர்' என்ற பட்டம் வழங்கப்பட்டது.

இந்தப் போட்டியின் இறுதியில் மும்பையை சேர்ந்த ஜினியா சட்டர்ஜி என்பவர் வெற்றி பெற்றார். அவருக்கு பரிசுத்தொகையாக ரூ.9.6 லட்சம் வழங்கப்பட்டது. அதுமட்டும் இன்றி வேக்பிட் நிறுவனம் வழங்கும் சுற்றுலா விடுமுறைக்கான வாய்ப்பும் அவருக்கு கிடைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+