கானா பாடலில் கவனம் செலுத்தியது ஏன்? தேவா பங்கேற்ற கடைசி நிகழ்ச்சியில் பேசும் வீடியோ வைரல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா இன்று திடீர் மரணம் அடைந்தார். இவரது கடைசி வீடியோ இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. தான் ஏன் கானா பாடலில் கவனம் செலுத்தினேன் என்பதற்கு அவர் விளக்கம் அளித்து பேசுகிறார்.

தேனிசை தென்றல் என்று அழைக்கப்படும் இசை அமைப்பாளர் தேவா இன்று திடீர் மரணம் அடைந்தார். தேவாவுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள். தேவா இசையில் வெளி வந்த பாடல்களும் அவரது பேட்டிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Deva Gana songs cinema

அந்த வகையில், தேவா பங்கேற்ற கடைசி நிகழ்ச்சியில் பேசிய காட்சிகள் தேவா ரசிகர்கள் இடையே அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 76 வயதான தேவா, கடந்த மாதம் இறுதியில் மீசையை முறுக்கு 2 படத்தின் வெற்றி விழாவில் பங்கேற்று பேசியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

சாதாரண விஷயம் இல்லை.

உன்கிட்ட ஒரு விஷயம் இருக்கு.. இதுவே போதும். ஆரா 10 க்கு 10 பாடலை 20 கோடி பேர் பார்த்து இருக்கிறார்கள் என்றால் சாதாரண விஷயம் இல்லை. மீசையை முறுக்கு 2 படத்தை முதலில் எனக்குதான் ஆதி போட்டு காட்டினார். என் பேரன் ஆதியின் பரம ரசிகன். எங்க குடும்பத்தில் நிறைய இசை அமைப்பாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவரது போனில் ஆதி படம் தான் இருக்கும்.

அப்படி ஒரு ரசிகன். அவன் சொன்னான். படத்தை பார்த்துவிட்டு தாத்தா இது வேற லெவல் தாத்தா என்று சொன்னான். இப்போது எல்லா படத்திலும் இரண்டே கால் பாட்டு, மூன்றே கால் பாட்டு அப்படித்தான் வந்துட்டு இருக்கு. பல்லவி வரைக்கும் இல்லை, கொஞ்சம் சரணம் அப்படித்தான் வந்து கொண்டு இருக்கிறது. இப்போ 11 பாட்டு ஒரு படத்தில் வச்சி.. இதெல்லாம் பழைய டிரெண்ட்.. பி சின்னப்பா காலத்து ஸ்டைல்..

Deva Gana songs cinema

இளையராஜா.. ஏ ஆர் ரகுமான் இருக்கும்போதே

11 பாட்டையும் ஹிட் பண்ணுறது பெரிய விஷயம். ஆரா 10 க்கு 10 க்கு என்றால் என்ன அர்த்தம்.. ஆரா என்றால் வைப் என்று ஒருவர் சொன்னார். பல்லவி ரீச் ஆகிவிட்டால் சரணத்தை பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டார்கள். மக்கள் பாடுற மாதிரி இருந்தாலே அது ரீச் ஆகிடும். அந்த விஷயம்.. ஆதியிடம் இருக்கிறது. ஏதோ ஒரு விஷயம் மக்களை புரிந்து வைத்து இருக்கிறார்.

நான் வந்த கால கட்டத்தில் இசைஞானி இளையராஜா கொடிநாட்டி கொண்டு இருந்தார். இப்பவும் அவர் தான். அவருக்கு பிறகு வந்த இசை அமைப்பாளர்களில் 28-வது ஆள்நான். அதுக்கு முன்னாடி 27 பேர் வந்து நிற்க முடியவில்லை. நான் வந்து நின்று இருக்கிறேன் என்றால் சாதாரண விஷயம் இல்லை. பெரிய விஷயம். அதற்கு பிறகு ஏ.ஆர் ரகுமான் வருகிறார். அவரு இந்த பக்கம்..

கானா பாடல் ஏன்?

இந்த பக்கம் ராஜா சார்.. இதற்கு நடுவில் இசையமைத்தால் ஒன்று இளையராஜா சாயல் இருப்பதாகவும் கொஞ்சம் வெஸ்டர்ன் கலந்தால் ரகுமான் போல் இருப்பதாகவும் பத்திரிகையில் தீட்டு தீட்டு என்று தீட்டினார்கள். அதனால் இரண்டு பேருக்கும் மத்தியில் நமக்கென்று ஒரு முத்திரை வேண்டும் என்பதற்காக கானா பாடலை கொண்டு வந்தேன்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+