என் அன்புத் தம்பி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து.. உருகிய கமல்ஹாசன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், என் அன்புத் தம்பியுமான உதயநிதி ஸ்டாலினுக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன்.

உதயநிதி ஸ்டாலின் தனது 45வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் திமுகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

உதயநிதியின் பிறந்தநாளுக்கு கட்சியினர் மட்டுமல்லாது திரையுலகப் பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், உதயநிதி ஸ்டாலினுடன் சமீபமாக நெருக்கமாக இருந்து வரும் கமல்ஹாசன், அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

உதயநிதி பிறந்தநாள்

உதயநிதி பிறந்தநாள்

திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 45ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை தமிழ்நாடு முழுவதும் இளைஞர்களின் எழுச்சி நாளாக கொண்டாடி வரும் திமுக உடன்பிறப்புகள், அனைத்து பகுதிகளிலும் கட்சிக் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர். ஏழைகளுக்கு அன்னதானம், ஆதரவற்றோருக்கு உதவிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்கள் உள்ளிட்டவைகளை திமுக நிர்வாகிகள் வழங்கி வருகின்றனர்.

வாழ்த்து

வாழ்த்து

இன்று 46வது வயதில் அடியெடுத்து வைக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு கனிமொழி கருணாநிதி எம்.பி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி ரசிகர்கள், கட்சித் தொண்டர்கள், திரையுலக பிரபலங்கள் என ஏராளமானோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

என் அன்புத் தம்பி

என் அன்புத் தம்பி

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் தலைவரும், எங்கள் ராஜ்கமல் நிறுவனத்தின் முயற்சிகளில் பங்கெடுத்துக் கொள்பவரும், என் அன்புத் தம்பியுமான உதயநிதி ஸ்டாலினுக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார். சமீபமாக, உதயநிதி ஸ்டாலின் - கமல்ஹாசன் இருவரும் தொழில் ரீதியாக மிகுந்த நட்புடன் பழகி வருகின்றனர்.

கமல் - உதயநிதி

கமல் - உதயநிதி

கமல்ஹாசன் - மணிரத்னம் இணையும் படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கிறார். அதேபோல் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் திரைப்படமே, நடிகராக தனது கடைசி படமாக இருக்கும் என உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+