• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"பிரேக்கிங்".. க்ளுக்கென சிரித்த "நயினார்".. "ஈயம் பூசன மாதிரி, பூசாத மாதிரி".. கிறுகிறுத்த பதில்கள்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக விவகாரத்தில் பாஜக தலையிடுமா என்பதும், அந்த விவகாரங்கள் குறித்தும் நயினார் நாகேந்திரன், பதில் தந்துள்ளார்.

நெல்லை எம்எல்ஏவும், பாஜகவின் மூத்த தலைவருமான நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு, அவர் அளித்த பதில்களின் தொகுப்புதான் இவையெல்லாம்;

நயினார் பேசும்போது, "கால்நடை மருத்துவ கல்லூரியை நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் கொண்டு வரப்பட்டது.. அன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் நேரடியாகவே பேசி, மேலப்பாளையத்தில் இஸ்லாமிய பெண்களுக்காக கலைக்கல்லூரிக்கு என்னால் அனுமதி வாங்கி தரப்பட்டது.

அதிமுக அலுவலக சீலுக்கு எதிரான வழக்கு! ஓபிஎஸ், இபிஎஸ் தனி தனி மனு.. ஹைகோர்ட்டில் இன்று விசாரணை அதிமுக அலுவலக சீலுக்கு எதிரான வழக்கு! ஓபிஎஸ், இபிஎஸ் தனி தனி மனு.. ஹைகோர்ட்டில் இன்று விசாரணை

 கேந்திரா வித்யாலயா

கேந்திரா வித்யாலயா

இப்போதுகூட 2 வாரங்களுக்கு முன்புகூட, என்னுடைய கோரிக்கையை ஏற்று, மானூரில் அரசு கலைக்கல்லூரிக்கு தமிழக முதல்வர் ஒப்புதல் தந்துள்ளார். அடுத்த ஆண்டு, மத்திய அரசு உதவியோடு, கேந்திர வித்யாலயா பள்ளியை துவங்குவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறேன்.. இப்படி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் மக்களோடு மக்களாக இணைந்து எல்லாருக்கும் எல்லா காலங்களிலும் பணி செய்து கொண்டிருக்கிறேன். 10 லட்சம், 6 லட்சம் செலவில் இந்த பகுதியில் பேருந்து நிலையம் கேட்டதால், அதற்கு இன்று அடிக்கல் நாட்டி உள்ளோம்" என்றார்.

நெருக்கம்

நெருக்கம்

இதற்கு பிறகு செய்தியாளர்கள் கேள்விகளை கேட்க ஆரம்பித்தனர்.. முதலாவதாக, "அதிமுகவில், நான் அவரை நீக்கிட்டேன்.. நான் இவரை நீக்கிட்டேன்" என்ற சொல்லி வருகிறார்கள்.. இதை எப்படி பார்க்கிறீங்க?" என்று கேட்டனர். அதற்கு நயினார், "அதிமுகவில் மாண்புமிகு அம்மாவுடன் நெருக்கமாக இருந்தேன்.. அவர்கள் இப்படி சண்டை போட்டுக் கொள்கிறார்கள் என்பதற்காகத்தான் வெளியே வந்தேன்.. இந்த இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம், பாஜகவின் விருப்பமும்" என்றார்.

 பொதுச்செயலாளர்

பொதுச்செயலாளர்

"இவர்களின் பிரச்சனைக்கு பாஜக தீர்வு காணுமா? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.. அதற்கு நயினார், "இதில், பாஜக தலையிட முடியாது.. ஆனால், எங்களுடைய அகில இந்திய தலைமை அதுகுறித்து முடிவு செய்யும்.. இதற்கு முன்பும் இப்படி சண்டை வந்துள்ளது.. அதனால், இவர்கள் ஒன்றுசேர மாட்டார்கள் என்று உறுதியாக சொல்ல முடியாது" என்றார். பிறகு, "சசிகலா நான்தான் பொதுச்செயலாளர் என்று இன்னும் சொல்லிக் கொண்டிருக்கிறாரே" என்று கேட்டதற்கு, "அதுக்குள்ளே ரொம்ப போக விரும்பல.. அது உட்கட்சி பிரச்சனை" என்றார்.

 சீல் - திமுக

சீல் - திமுக

"திமுக இன்னைக்கு அதிமுக ஆபீசுக்கு சீல் வைத்துவிட்டதே, இதை எப்படி பார்க்கிறீர்கள்" என்று செய்தியாளர்கள் கேட்டனர்.. "சட்டம் ஒழுங்கு பிரச்சனை நடக்காமல் முதலிலேயே திமுக அதை பார்த்திருக்கணும்.. சீல் வைக்க வேண்டிய அளவுக்கு இந்த விவகாரத்தை விட்டிருக்க கூடாது" என்றார் நயினார். "ஓபிஎஸ் கட்சிக்கு வந்தால் ஏற்று கொள்வோம் என்று அண்ணாமலை சொல்லியிருக்கிறாரே? நீங்க என்ன சொல்றீங்க?" என்று செய்தியாளர்கள் கேட்டனர்..

 நயினார் பதில்

நயினார் பதில்

அதற்கு நயினார், அதிமுக பாஜக இரண்டுமே கூட்டணியில் இருக்கு.. இதுக்கு நான் பதில் சொன்னால், அது கூட்டணி தர்மத்துக்கு எதிராகிவிடும்.. அதனால், இதை பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை.. நான்கூடதான் பிஜேபிக்கு போனேன்.. போகும்போது யாரையும் கூப்பிட்டு போகல.. அப்படி கூப்பிட்டிருந்தால் என்னுடன் நிறைய பேர் வந்திருப்பார்கள்' என்றார். 'ஒற்றை தலைமை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? திமுகவுக்கு எதிர்ப்பு தருவதற்கு ஒற்றை தலைமைதான் சரியா? திமுகவுக்கு எதிர்ப்பு இல்லையா?" என்று அடுத்த கேள்வியை கேட்டனர்.

 நினைச்சேன்.. இப்படித்தான்

நினைச்சேன்.. இப்படித்தான்

அதற்கு நயினார், "திமுகவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது அதிமுக மட்டுமில்லை.. பாஜகவும்தான்.. எதிர்ப்பு தெரிவிக்க இத்தனை உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கை வைத்து பேச கூடாது.. ஒருத்தர் எதிர்ப்பு தெரிவித்தாலும் அது எதிர்ப்புதான்" என்ற நயினார், செய்தியாளர்களை பார்த்து, "நான் அப்பவே நினைச்சேன்.. இன்னைக்கு இவ்வளவு பேர் வந்திருக்கீங்களே, என்னமோ இருக்கு"ன்னு என்று சொல்லவும், செய்தியாளர்கள் சிரித்துவிட்டனர்,. பிறகு மீண்டும் கேள்வியை தொடர்ந்த செய்தியாளர்கள், "ஒற்றை தலைமைக்கு 3 பக்கம் போட்டி இருக்க.. இதில் யார் தலைமை வந்தால் சிறப்பாக இருக்கும்?" என்று அடுத்த கேள்விக்கு தாவினர்.

Recommended Video

  Nainar Nagendran பேசியது அவரது சொந்தக்கருத்து! - Kadeswara Subramaniam | *Politics
   பிரேக்கிங் நியூஸ்

  பிரேக்கிங் நியூஸ்

  உடனே நயினார், "பிரேக்கிங் நியூஸ் வேணுமா?" என்று கேட்டு சிரித்து கொண்டே, அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் நல்லது என்றார். பொன்னையன் ஆடியோ வெளியாகி இருக்கே.. சாதியை கட்டமைத்து பேசப்பட்டுள்ளது குறித்து என்ன நினைக்கிறீங்க என்றனர்.. அதற்கு நயினார், "அதில் பேசியது நான் இல்லை என்று பொன்னையனே சொல்லிட்டாரே, அப்பறம் எப்படி அதை பற்றி கருத்து சொல்வது?" என்று திரும்ப கேட்டு சிரித்தார் நயினார்.. பேட்டியை முடித்து கொண்டு கிளம்பும்போது, "என்ன உங்களுக்கு ஒன்னும் நியூஸ் கிடைக்கலையா இன்னைக்கு.. என்ன தலைப்பு போடப்போறீங்க, ஒன்னுமே இல்லையோ" என்று கேட்கவும் மறுபடியும் செய்தியாளர்கள் சிரித்துவிட்டனர்.

  English summary
  nainar nagendran criticized about dmk and says about aiadmk local politics நயினார் நாகேந்திரன் அதிமுக உட்கட்சி பூசல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X