முதலீடு ரூ.1614 கோடி.. ஆந்திரா 3 நிறுவனங்கள்! தவெகவுக்கு ரியாலிட்டி செக் வைத்த நயினார் நாகேந்திரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்துக்கு வர வேண்டிய முதலீடுகள் வேறு மாநிலங்களுக்கு செல்கிறதா? தென்கொரிய நிறுவனங்களின் முதலீட்டை ஆந்திரா ஈர்த்துள்ள நிலையில், தமிழக அரசியல் களத்திலும் இந்த விவகாரம் பேசுபொருளாகியுள்ளது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ள கருத்து, தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது...!!

தென்கொரியாவை சேர்ந்த 3 வாகன உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்கள் ஆந்திராவில் ரூ.1,614 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளன... ஹூண்டாய், கியா கார் நிறுவனங்களுக்கு உதிரிபாகங்களை வழங்கும் ஹவாஷின், செயோன், ஐவாமெட் ஆகிய நிறுவனங்கள் ஆந்திர அரசின் பொருளாதார மேம்பாட்டு வாரியத்துடன் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.

Nainar Nagendran Rs 1614 Crore Investment Korean Company Andhra Pradesh

ஆந்திரா முதலீடு ரூ.1614 கோடி

இதன்படி, ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் இந்த நிறுவனங்கள் புதிய உற்பத்தி ஆலைகளை அமைக்க உள்ளன. இதில் ஹவாஷின் நிறுவனம் ரூ.850 கோடியும், செயோன் நிறுவனம் ரூ.514 கோடியும், ஐவாமெட் நிறுவனம் ரூ.250 கோடியும் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன... இந்த முதலீடுகள் மூலம் அந்த பகுதியில் மொத்தம் 1418 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம் ஆந்திர தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் நாரா லோகேஷ் தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது ஹூண்டாய், கியா நிறுவனங்களின் விநியோக தொடரில் இடம்பெற்றுள்ள கொரிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் தொடர்ச்சியாகவே இப்போது இந்த முதலீடுகள் ஆந்திராவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில், தமிழகத்துக்கு வர வேண்டிய முதலீடு ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"ரியாலிட்டி செக்" நயினார் நாகேந்திரன்

"ரீல்ஸ் பாலிடிக்ஸும்...ரியாலிட்டி செக்கும்! - ரூ.1614 கோடி முதலீட்டை ஆந்திராவிடம் கோட்டைவிட்ட தவெக விஜய் அரசு!

திரையில் காட்டப்படும் மாஸ் பிம்பங்கள் நிஜ நிர்வாகத்திற்கு உதவாது என்பதற்கு, ரூ. 1614 கோடி கொரிய முதலீட்டை அண்டை மாநிலமான ஆந்திராவிடம் கோட்டைவிட்டிருப்பதே தவெக அரசுக்குக் கிடைத்த ஆகச்சிறந்த "ரியாலிட்டி செக்"

ஹூண்டாய், கியா நிறுவனங்களின் சப்ளையர்களான கொரியாவை சேர்ந்த ஹ்வாஷின் , செஷான் மற்றும் ஐவாமெட் ஆகிய நிறுவனங்கள் தமிழ்நாட்டோடு பேச்சுவார்த்தை நடத்தியும், அந்த வாய்ப்பு கைநழுவி ஆந்திராவுக்கு சென்றிருப்பது தவெக விஜய் தலைமையிலான அரசின் தொழில்துறை மந்தநிலையைத் தோலுரித்துக் காட்டுகிறது.

வைப் ஏற்றும் தவெக அரசு

ஒரு பக்கம் "புதிய முதலீடுகளை ஈர்க்கிறோம்" என கோட்-சூட் மாட்டிக்கொண்டு வெளிநாடுகளுக்கு ஜெட் வேகத்தில் பறப்பதும், அங்கு போட்டோஷூட் நடத்தி சமூக வலைதளங்களில் "வைப்" ஏற்றுவதுமாக முதல் - அமைச்சர் தீவிரமாக இருக்கிறார். ஆனால், "கையில் இருக்கும் வெண்ணெயை நழுவவிட்டுவிட்டு நெய்க்கு ஊர் சுற்றும் கதையாக", ஏற்கெனவே மாநிலத்தின் வாசலில் நின்ற நிறுவனங்களையே தக்கவைக்கத் திராணியின்றி தாரைவார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆந்திர அரசு திட்டமிட்டுச் செயல்பட்டு முதலீடுகளைத் தட்டி சென்றபோது, தமிழகத்தின் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா என்ன செய்து கொண்டிருந்தார்?

ஆட்சி நடத்துவது மாஸான வெளிநாட்டுச் சுற்றுலா அல்ல. போட்டி நிறைந்த சந்தையில் உடனடி முடிவுகளும், திறமையான பேச்சுவார்த்தைகளுமே முதலீடுகளைத் தக்கவைக்கும் என்பதை தவெக அரசு எப்போது உணரப்போகிறது?

பிம்ப அரசியல்

இதன் இறுதிப் பாதிப்பு, தமிழக இளைஞர்களுக்கான 1,400-க்கும் மேற்பட்ட உயர்தர வேலைவாய்ப்புகளும் பொருளாதாரப் பலன்களும் எல்லை தாண்டி ஆந்திராவிற்குச் சென்றது தான். புதிய மாற்றத்தை எதிர்பார்த்து நின்ற இளம் தலைமுறைக்கு, இதுபோன்ற தொடர் தொழில் இழப்புகள் மிகப்பெரிய ஏமாற்றத்தையே தந்துள்ளன.

இனியாவது வெற்று வெளிநாட்டு "பிம்ப அரசியலை" விடுத்து, கையில் இருக்கும் தொழில்களைக் காக்கும் உண்மையான ஆளுகையை நோக்கி முதல் - அமைச்சர் விஜய் நகரவில்லை என்றால், பக்கத்து மாநிலங்கள் தமிழ்நாட்டின் தொழில்துறை மகுடத்தைப் பறித்துச் செல்வதை வேடிக்கை மட்டுமே பார்க்க வேண்டியிருக்கும்" என்றெல்லாம் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+