மீண்டும் மீண்டும் சர்ச்சை.. விஜய், அவரின் தாய் குறித்து நயினார் நாகேந்திரன் அருவருக்கத்தக்க கருத்து
சென்னை: தேர்தல் முடிந்தும் தமிழக அரசியலில் பரபரப்பு ஓயவில்லை. தேர்தலுக்கு முன்பே விஜய் த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார் பாஜக நயினார் நாகேந்திரன். முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தலில் தோல்வியடைந்ததை விமர்சிக்கும் வகையில், சட்டமன்றத்தில் அப்பாவை காணோம் என்று விஜய் கிண்டல் செய்திருந்தார். இந்த விவகாரத்தில் விஜய் மற்றும் அவரின் தாய் குறித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அருவருக்கத்தக்க வகையில் விமர்சனம் செய்திருப்பது சர்ச்சையாகியுள்ளது.
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் ஒரே நாடு 2.0 மாத இதழ் மற்றும் டிஜிட்டல் பதிப்பு வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு இதழை வெளியிட்டார். அப்போது நயினார் நாகேந்திரன் பேசுகையில், "டிஜிட்டல் முழுவதும் படிப்பதற்காக இந்த தளம் வெளியிடப்படுகிறது. வயதானவர்கள் மட்டுமல்லாமல் ஜென் ஸி தலைமுறையையும் சென்றடைய வேண்டும்.

நயினார் நாகேந்திரன் சர்ச்சை
கவிதைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். செத்த மாட்டின் தோலில் செருப்பு செய்யலாமே. செத்த ஆட்டின் தோலினால் ஆடை நெய்யலாமே.. செத்த மனிதன் தோலில் என்ன செய்ய முடியும் என்கிற கவிதை எனக்கு இப்போதும் நினைவில் உள்ளது. அப்படிப்பட்ட மனிதர்கள் ஆட்சி செய்கிற நிலை தமிழகத்தில் அமைந்துள்ளது. பிரதமரின் சாதனைகளை ஒரு மணிநேரம், ஒன்றரை மணி நேரம் தொடர்ச்சியாக பட்டியலிட முடியும். சொல்லிக் கொண்டே போகலாம்.
அது எல்லாம் மக்களுக்கு ரீச் ஆக வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை மாநில கட்சிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. பிரதமரின் சாதனைகள் மக்களிடம் சென்றடைந்தாலும் அது வாக்கு வங்கியாக மாறுவதில்லை. கடந்த காலங்களில் ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொரு சூழ்நிலை நிலவுகிறது. திமுக ஆட்சிக்கு மாற்றாக வருவோம் என்று நினைத்தபோது இவர்கள் வந்துவிட்டனர். இதுவும் மாறும். வருகிற நாட்களில் தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும்.
அப்பா எங்கே
இவர்களால் நாட்டில் என்ன செய்துவிட முடியும். சட்டமன்றத்தில் சென்று அப்பா எங்கே அப்பா எங்கே என தேடுகிறார். வீட்டில் போய் அம்மாவிடம் கேட்டால் தானே அப்பா யார் என்று சொல்வார்கள். சட்டமன்றத்தில் சென்று அப்பாவை தேடினால் எப்படி கிடைப்பார். இப்படிப்பட்டவர்களின் ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது. ஆட்சி செய்பவரின் சூழல் மோசமாக உள்ளது" என்று பேசினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மூத்த பெண் நிர்வாகிகளை வைத்து கொண்டே மேடையில் வைத்து கொண்டே நயினார் பேசியது சர்ச்சையாகியுள்ளது. முதலமைச்சர் விஜய் மற்றும் அவரின் தாய் குறித்து நயினார் அநாகரீமாக பேசியதாக தவெகவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
