விடுதலையில் பாரபட்சம்.. 6 பேருக்கும் திங்கள்கிழமை தமிழக அரசு கூறும் நற்செய்தி?.. நளினி வழக்கறிஞர்
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர் விடுதலையில பாரபட்சம் காட்டப்படுகிறது என நளினியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என கோரி அவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் நாகேஸ்வர ராவ் , பி ஆர் கவாய் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் விசாரணை நடத்தினர். அப்போது பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் பதில் ஒவ்வொரு முறையும் முரணாகவே உள்ளது. ஆளுநர் அமைசசரவை முடிவுக்கு எதிராக செல்ல அதிகாரமிலலை.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பின்படி 7 பேர் விடுதலை விவகாரத்தில் அமைச்சரவையே முடிவெடுக்கலாம். அமைச்சரவை முடிவுக்கு எதிராக ஆளுநர் சென்றால் அது கூட்டாட்சி அமைப்பில் மிகப் பெரிய பாதகத்தை ஏற்படுத்திவிடும் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.

மே 18 ஆம் தேதி தீர்ப்பு
தொடர்ந்து இந்த வழக்கில் மே 18ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இதற்காக சட்டப்பிரிவு 142 ஐ பயன்படுத்தி அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் பேரறிவாளனை போல் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் 6 பேரின் விடுதலை குறித்த கேள்வி எழுந்துள்ளது.

ஆயுள் தண்டனை சிறை
இந்த நிலையில் ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினிக்கு பரோல் வழங்கப்பட்டது. இவர் தற்போது காட்பாடி பிரம்மபுரம் பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். நளினியை சந்திப்பதற்காக அவரது வழக்கறிஞர் புகழேந்தி அவரது வீட்டிற்கு சென்றார்.

காவல் துறை அனுமதி
அப்போது காவல்துறையினர் அவருக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். இதைத் தொடர்ந்து நளினியை பார்க்க வேண்டும் என காவல் துறையிடம் புகழேந்தி வாக்குவாதம் செய்தார். பின்னர் நளினியை சந்திக்க சிறைத் துறைக்கு கடிதம் எழுதி காவலர் மூலம் அனுப்பினார். இதையடுத்து புகழேந்திக்கு அனுமதி கொடுக்கப்பட்டது.

நளினியை சந்தித்த பிறகு
நளினியை சந்தித்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது பேரறிவாளன் விடுதலைக்குப் பிறகு தாங்களும் விடுதலை செய்யப்படுவோம் என நளினி மகிழ்ச்சியாக உள்ளார். விடுதலையில் பாரபட்சம் காட்டப்படுகிறது. 7 பேரில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.

6 பேர் விடுதலை
ஆனால் முருகன் பல முறை உண்ணாவிரதம் இருந்தும் பரோல் வழங்கப்படவில்லை. தமிழக அரசு மீதமுள்ள 6 பேரையும் விடுதலை செய்யும் நடவடிக்கையை எடுக்க வேண்டும். அப்போதுதான் பாரபட்சம் என்ற குற்றச்சாட்டு நீங்கும். இவர்கள் விடுதலை குறித்து தமிழக அரசு மூலம் நல்ல முடிவு வரவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது என்றார் புகழேந்தி. 6 பேரின் விடுதலை குறித்து ஊட்டியில் இருந்தபடியே தமிழக அரசு வழக்கறிஞர் உள்ளிட்ட சட்டவல்லுநர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications