என் மகள் இனி புது வாழ்க்கையை தொடங்குவாள்.. 6 பேரும் இனி நல்ல முறையில்.. நளினியின் தாயார் உருக்கம்!
சென்னை : நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை குறித்துப் பேசியுள்ள நளினியின் தாயார் பத்மா, "புதிதாக ஒரு வாழ்க்கையைத் தொடங்கப்போவதாக என் மகள் நளினி சொன்னாள். என் மகள் நல்ல முறையில் வாழ வேண்டும் என விரும்புகிறேன்" என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்ட நிலையில் நளினி, முருகன் உள்ளிட்டோரும் தங்கள் விடுதலைக்காக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதையடுத்து 30 ஆண்டுகள் சிறையில் இருந்துவரும் நளினி, முருகன், ரவிச்சந்திரன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நளினி கடந்த பல மாதங்களாக பரோலில் தனது தாயாருடன் இருந்து வரும் நிலையில், இந்த விடுதலைச் செய்தி அவரது தாயார் பத்மாவுக்கு மிகுந்த ஆறுதலைக் கொடுத்துள்ளது.

6 பேரும் விடுதலை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன், தன்னை விடுவிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் கடந்த மே 18ஆம் தேதி பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, அவரது கணவர் முருகன் உள்ளிட்ட 6 பேரும் தங்களை சிறையில் இருந்து விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நளினி உட்பட ஆறு பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளனர்.

நளினி
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நளினி கடந்த 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இவரது கணவர் முருகனும் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் தன்னை அருகிலிருந்து கவனித்துக்கொள்ள தன் மகள் நளினியை தற்காலிக விடுப்பில் விடுவிக்க வேண்டும் என்று அவரது தாயார் பத்மா, மனுத்தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து அவருக்கு பரோல் வழங்கப்பட்டது. நளினிக்கு 10வது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டிருந்தது. இதனால், நளினி கடந்த பல மாதங்களாக அவர் தாயாருடனே இருந்தார்.

நளினியின் தாயார்
இந்நிலையில் இன்று நளினி உள்ளிட்ட 6 பேரும் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட தகவல் நளினியின் தாயார் பத்மாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகப் பேசியுள்ள நளினியின் தாய் பத்மா, "எவ்வளவோ சூழல்களில் விரக்தி அடைந்தாலும், சிறு புள்ளி அளவு நம்பிக்கை என் மகள் நளினியிடம் தேங்கி இருந்தது. அந்த நம்பிக்கை இன்று நிஜமாகிவிட்டது. 7 பேரில் ஒரே ஒரு பெண்ணாக துயரங்களை அனுபவித்த நளினி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அரசியல் தலைவர்களுக்கு நன்றி
நளினியின் விடுதலைக்காக பாடுபட்ட முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். எடப்பாடி பழனிசாமிக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். அரசியல் தலைவர்களுக்கும், குரல் கொடுத்தவர்களுக்கும் நன்றி. இந்த வழக்கில் விடுதலைக்காக போராடிய அனைத்து வழக்கறிஞர்களுக்கும் கைகூப்பி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

நல்ல முறையில் வாழ வேண்டும்
மேலும், "இவர்களைத்தாண்டி எத்தனையோ மனிதநேயம் படைத்த பலர் எங்களுக்காகப் போராடினர். அவர்களுக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். மேலும் விடுதலையாகும் இந்த ஆறு பேரும் அனைவருக்கும் ஒத்துழைப்பு கொடுத்து நல்ல முறையில் இருப்பார்கள் என நான் மனப்பூர்வமாக நம்புகிறேன். என் மகளும் நன்றாக படித்துள்ளார், அது அவருக்கு கைகொடுக்கும். புதிதாக ஒரு வாழ்க்கையைத் தொடங்கப்போவதாக என் மகள் சொன்னாள். என் மகள் நல்ல முறையில் வாழ வேண்டும் என விரும்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications