ஸ்டாலின் ஸ்கெட்ச்: அமித்ஷாவை தூக்கிய டிஜிபி கந்தசாமி பிளஸ் ஜெ. வழக்கு நல்லம்ம நாயுடு- அதிமுக ஷாக்
சென்னை: திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணிகளை தொடங்கிவிட்டாராம் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதற்காக ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் விசாரணை அதிகரியாக இருந்த நல்லம்ம நாயுடுவை தமது ஆலோசகராக மு.க.ஸ்டாலின் நியமிக்க உள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டசபை தேர்தலில் வென்று திமுக ஆட்சியைக் கைப்பற்றியது முதல் அதிகாரிகள் நியமனம் அனைத்தும் திரும்பிப் பார்க்க வைக்கக் கூடியதாக இருக்கிறது. தலைமைச் செயலாளர் இறையன்பு, முதல்வரின் செயலாளராக உதயசந்திரன் என இந்த பட்டியல் தொடங்கியது.
அடுத்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக கந்தசாமி நியமிக்கப்பட்ட போது பாஜகவும் அதிமுகவும் அதிர்ச்சியுடன் பார்த்தன. ஏனெனில் முன்னர் சிபிஐ-ல் பணிபுரிந்த கந்தசாமி, சொராபுதீன் போலி என்கவுண்ட்டர் வழக்கில் குஜராத் முதல்வராக மோடி பதவி வகித்த போது உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷாவை கைது செய்தவர்தான் டிஜிபி கந்தசாமி. அதனால்தான் டெல்லி முதல் சென்னை வரை அதிர்வலைகள் எதிரொலித்தன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதல்வர் ஸ்டாலினுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் தொடர்பாக டிஜிபி கந்தசாமி ஆலோசனை நடத்தினார் என்றும் செய்திகள் வெளியாகி இருந்தன. தேர்தல் வாக்குறுதிகள் என்னாச்சு என்று கேட்டு வரும் அதிமுகவுக்கு, தேர்தல் அறிக்கையில் சொன்னது போல ஊழல் புகார்களுக்கு உள்ளான அதிமுக மாஜி அமைச்சர்கள் மீது இதோ நடவடிக்கை தொடங்கிவிட்டது என்பதை முதல்வர் ஸ்டாலின் வெளிக் காட்டுவதாகவே இந்த சந்திப்பும் இருந்தது.

ஜெ. வீட்டில் ரெய்டு
இப்போது அதிமுகவுக்கு அடுத்த அதிர்ச்சியாக வலம் வரும் செய்திதான், லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகளில் முதல்வரின் ஆலோசகராக நல்லம்ம நாயுடு நியமிக்கப்பட இருக்கிறார் என்பது. 1996 முதல் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் 2017-ல் உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பு வரும் வரையில் பெரிதும் பேசப்பட்ட அதிகாரிகளில் ஒருவர் நல்லம்ம நாயுடு. இவர்தான் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான வழக்கின் விசாரணை அதிகாரி. இவரது தலைமையிலான 18 அதிகாரிகள் கொண்ட டீம்தான் ஜெயலலிதா வீட்டை சோதனையிட்டு அவரது ஆடம்பர வாழ்க்கையை உலகத்துக்கு வெளிச்சத்துக்கு காட்டியது. ஆம் ஜெயலலிதா வீட்டில் கைப்பற்ற ஆயிரக்கணக்கான சேலைகள், செருப்புகள், நகைகள் என படம்பிடித்து அம்பலப்படுத்தியது நல்லம்ம நாயுடு டீம்தான்.

பணி நீட்டிப்பு தந்த திமுக அரசு
இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த போது பணி ஓய்வு பெற்ற நல்லம்ம நாயுடுவுக்கு திமுக ஆட்சிதான் பதவி நீட்டிப்பு கொடுத்தது. ஆனால் 2001-ல் ஜெயலலிதா மீண்டும் முதல்வரான போது தமது பதவியை ராஜினாமா செய்தார் நல்லம்ம நாயுடு. அப்போது சசிகலாவின் உறவினரான செளந்தரராஜன் என்பவர் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் ஓய்வு பெற்ற பின்னரும் பதவி நீட்டிப்பும் தரப்பட்டது. ஆனால் 2006-ல் திமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய போது, செளந்தரராஜனுக்கு கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டது. அத்துடன் ஜெயலலிதா வழக்கு விசாரணை அதிகாரியாக மீண்டும் நல்லம்ம நாயுடுவே கொண்டுவரப்பட்டார்.

பெங்களூரு நீதிமன்றங்களில்..
பின்னர் கர்நாடகா நீதிமன்ற விசாரணைகளிலும் நல்லம்ம நாயுடு ஆஜராகி ஜெயலலிதா, சசிகலாவின் சொத்து குவிப்பு நடவடிக்கைகளை அங்குலம் அங்குலமாக ஆதாரங்களுடன் விவரித்தார் நல்லம்ம நாயுடு. சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி குன்ஹா தீர்ப்பு வழங்கியதற்கு முக்கியமான ஆதாரமாக விளங்கியவர் நல்லம்ம நாயுடு.

வழக்கில் இணைந்தது எப்படி?
2017-ல் உச்சநீதிமன்றம், நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை உறுதி செய்தது. அப்போது ஜெயலலிதா மறைந்துவிட்டதால் சசிகலா, இளவரசி, சுதாகரன் என மூவருமே கூண்டோடு சிறைக்குப் போனார்கள். அந்த தீர்ப்பு வெளியான நாளில், நீதி வென்றது என நல்லம்ம நாயுடு கட்டை விரலை உயர்த்திக் காட்டி பெருமிதமாக சொன்னது ஊடகங்களின் முக்கிய செய்தியானது. அப்போதுதான் மனம் திறந்து பேசினார் நல்லம்ம நாயுடு. தாம் ஜெயலலிதா வழக்கில் எப்படி வந்தேன்? எங்கெல்லாம் யாரிடம் எல்லாம் விசாரித்தேன் என்பதை விவரித்திருந்தார் நல்ம்ம நாயுடு. அவர் அளித்த பேட்டி ஒன்றில், முதலில் 1996 செப்டம்பர் 1-ல் விசாரணை அதிகாரியாக சென்னை உயர்நீதிமன்றம் என்னை நியமித்தது. முதலில் லத்திகா சரண்தான் நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் இந்த வழக்கை விசாரிக்க மறுத்ததால் நான் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டேன். முதலில் தயக்கம் இருந்தது. பின்னர் துணிச்சலுடன் ஏற்றுக் கொண்டேன்.

ஜெ.விடம் 27 நாட்கள் சிறையில் விசாரணை
ஜெயலலிதா வழக்கு விசாரணையின் போது சந்தித்த துயரங்கள், தொல்லைகள் பற்றி எப்போதுமே பேசவிரும்பவில்லை. வழக்கை நான் விசாரிக்க தொடங்கிய போது ஜெயலலிதா மற்றொரு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சசிகலாவும் கைது செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மொத்தம் 27 நாட்கள் ஜெயலலிதாவிடம் சிறைக்குப் போய் விசாரணை நடத்தினேன். அவர்கள் யாரையும் துன்புறத்தவும் இல்லை. இளவரசியை மன்னார்குடியில் விசாரித்தேன். சுதாகரன் டிமிக்கி கொடுத்துவிட்டு பழனி பாதயாத்திரைக்குப் போனதால் அவரை கைது செய்து விசாரித்தோம்.

தினகரனுக்கு எதிராக லண்டனில் ஆவணங்கள்
1997-ம் ஆண்டு ஜூன் 4-ல் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டுதான் ஓய்வு பெற்றேன். ஆனால் திமுக அரசு 4 ஆண்டுகள் பணி நீட்டிப்பு கொடுத்தது. ஜெயலலிதா வழக்கில் ஒரு கட்டத்தில் டி.டி.வி. தினகரனும் சேர்க்கப்பட்டார். அவர் லண்டனில் சொத்துகளை வாங்கி குவித்திருந்தார். இதனால் லண்டனுக்குப் போய் விசாரித்தேன். ஆவணங்களை எல்லாம் திரட்டி வந்தேன். ஆனால் தினகரனை சேர்த்ததால் ஜெயலலிதா மீதான முதன்மை வழக்கு விசாரணை தாமதமானது. இதனால் தினகரன் மீதான வழக்கை தனி வழக்காக பிரித்தோம். கர்நாடகாவில் வழக்கு விசாரணை நடைபெற்றபோது பெங்களூருவுக்கு பலமுறை சென்றேன்.

மகிழ்ச்சி தந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு
நீதிபதி குன்ஹா தீர்ப்புக்கு எதிராக கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி தீர்ப்பு தந்து ஜெயலலிதாவை விடுதலை செய்த போது அதிர்ச்சி அடைந்தேன். உச்சநீதிமன்றம் நியாயம் வழங்கும் என நம்பி இருந்தேன். அதுவும் நடந்துவிட்டது என கூறியிருந்தார் நல்லம்ம நாயுடு.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆலோசகர்?
இத்தகைய நேர்மையான அதிகாரியான நல்லம்ம நாயுடுவைதான் தற்போது லஞ்ச ஒழிப்பு வழக்குகள் தொடர்பாக தமக்கு ஆலோசகராக முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமிக்க உள்ளார் என்கின்ற தலைமை செயலக வட்டாரங்கள். டிஜிபி கந்தசாமி பிளஸ் நல்லம நாயுடு என முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டு வரும் அடுத்தடுத்த ஸ்கெட்சுகளால் அதிமுக மாஜி அமைச்சர்கள் ரொம்பவே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனராம். யார் மீது எந்த வழக்கு எப்போது பாயும் என்கிற பீதியில் கூடி கூடி ரகசிய ஆலோசனை நடத்தி வருகின்றனர் அதிமுக மாஜிக்கள்.
-
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்!











Click it and Unblock the Notifications