திருநங்கையர்களின் ஆரோக்கியம், வேலைவாய்ப்புகளில் கவனம் செலுத்துவேன்.. பத்மஸ்ரீ நர்த்தகி நடராஜ்
சென்னை: 11 வயதில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு 2019 ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதல்முறையாக பத்மஸ்ரீ விருது பெற்ற திருநங்கையர் நர்த்தகி நடராஜ், தற்போது மாநில அரசில் முக்கிய பதவிக்கு தேர்வு செய்யப்பட்டது வரை அவர் பட்ட கஷ்டங்கள் ஏராளம் ஏராளம்...
மதுரை மாவட்டம் அனுப்பானடி பகுதியில் 5ஆவது குழந்தையாக 1964 ஆம் ஆண்டு பிறந்தவர் நட்ராஜ். சிறுவயதிலேயே தன்னிடம் பெண்மை இருப்பதை உணர்ந்த நட்ராஜ், பெண்கள் அணியும் ஆடைகளையே அணிந்தார்.
பின்னர் தன்னுக்குள் இருக்கும் பெண்மை குறித்து தனது குடும்பத்தாரிடம் சொன்னபோது அவர்கள் நட்ராஜனை ஆணாக இருக்கும்படி கட்டாயப்படுத்தினார்கள். அவர் இல்லாததால் அவரை குடும்பத்தினர் ஒதுக்கினர். இதனால் 11 வயதில் தானே வீட்டை விட்டு வெளியேற்றினார். பின்னர் எப்படியோ 11 ஆம் வகுப்பு வரை படித்த நட்ராஜ், நாட்டியத்தில் ஆர்வம் கொண்டிருந்தார்.

வைஜெயந்தி மாலா
இதையடுத்து பரதநாட்டியத்தில் மிகவும் ஈடுபாடு கொண்ட நர்த்தகி, வைஜெயந்திமாலாவின் குருவான தஞ்சை கிட்டப்பா பிள்ளையிடம் தஞ்சை பாணி நாட்டியத்தை பயின்றார். கிட்டப்பா பிள்ளைதான் நட்ராஜுக்கு நர்த்தகி என்ற பெயரை சூட்டினார். பின்னர் மற்றொரு திருநங்கையரான சக்தி பாஸ்கருடன் இணைந்து சென்னை, மதுரையில் நாட்டியப் பள்ளிகளை தொடங்கினார். இந்தியாவில் பாஸ்போர்ட் பெற்ற முதல் திருநங்கையர் என்ற பெருமை நர்த்தகிக்கு உண்டு.

கவுரவம்
தற்போது மாநில வளர்ச்சி கொள்கை கவுன்சிலின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது எல்ஜிபிடிகியூ சமூகத்தின் பிரதிநிதிக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவம் மட்டுமல்லாமல் மாநிலத்திற்கு கலை மற்றும் கலாச்சாரத்திற்காக சிறப்பான பங்களித்த கலைஞருக்கு கிடைத்த கவுரவமுமாகும். முதல்முறையாக இது போன்ற பதவிகளில் திருநங்கையர் அமர்த்தப்பட்டுள்ளார்.

கவுரவம்
தற்போது மாநில வளர்ச்சி கொள்கை கவுன்சிலின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது எல்ஜிபிடிகியூ சமூகத்தின் பிரதிநிதிக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவம் மட்டுமல்லாமல் மாநிலத்திற்கு கலை மற்றும் கலாச்சாரத்திற்காக சிறப்பான பங்களித்த கலைஞருக்கு கிடைத்த கவுரவமுமாகும். முதல்முறையாக இது போன்ற பதவிகளில் திருநங்கையர் அமர்த்தப்பட்டுள்ளார்.

கொரோனா பெருந்தொற்று
இதுகுறித்து அவர் தி பிரிண்ட் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கொரோனா பெருந்தொற்றால் ஏராளமான திருநங்கையர்கள் முறையான மருத்துவ வசதிகள் இல்லாததால் இறந்துள்ளனர். இதற்கு காரணம் அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் இல்லாதது. இதனால் உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் இறந்தனர். நங்கையர்களுக்கு வேலை வாய்ப்பை கொடுத்தால் மட்டும் அவர்களது நிதி நிலை ஸ்திரத்தன்மையோடு இருக்காது, அவர்களுக்கு மரியாதையும் கொடுக்க வேண்டும். திருநங்கையர்களுக்கு கலையும் பரதமும் சொல்லிக் கொடுக்க மையங்களை ஏற்படுத்த வழிவகைகளை யோசித்து வருகிறேன். நங்கையர்கள் பணி செய்யவும் பாடம் நடத்தவும் டான்ஸ் ஆடவும் அவர்களை இயல்பாக்க வேண்டியது அவசியமாகும்.

புறக்கணிப்புகள்
எத்தனை அவமானங்கள், புறக்கணிப்புகள் இருந்தாலும் லட்சியம் என்ற இலக்கை அடைய தான் ஒரு கண்ணாடியாக இருக்க விரும்புகிறேன். நான் இதுவரை பெற்ற விருதுகள் அனைத்தும் எனது திறமைக்கு கிடைத்தவையே தவிர நான் ஒரு திருநங்கையர் என்பதால் அல்ல என்றார். அரவானி என அழைக்காமல் திருநங்கை என அழைக்குமாறு அரசுக்கு பரிந்துரைத்தவர் நர்த்தகி . திருநங்கையர்களுக்கு வழங்கப்படும் பாஸ்போர்ட்டில் பாலினத்தை பெண் என மாற்றுமாறு 2002 இல் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியவரும் இவரே!
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications