சாதிய பாகுபாடு கூடாது.. உள்ளாட்சிகளில் தேசியக்கொடி ஏற்றனும்.. தலைமை செயலாளர் உத்தரவின் பரபர பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுதந்திர தின விழாவையொட்டி அனைத்து ஊராட்சிகள் உள்பட உள்ளாட்சிகளில் சாதிய பாகுபாடின்றி தேசியக்கொடி ஏற்றப்பட வேண்டும். தீண்டாமை கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடங்கிய உத்தரவை தலைமை செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.

ஆகஸ்ட் 15ம் நாளான திங்கட்கிழமை 75வது சுதந்திர தினம் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சுதந்திர தின கொண்டாட்டம் எளிய முறையில் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் தான் தற்போது 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மத்திய அரசு பல்வேறு இயக்கங்களை நடத்தி வருகிறது.

75வது சுதந்திர தினம்

75வது சுதந்திர தினம்

நாட்டில் 'ஆஸாதி கா அம்ருத் மஹோத்ஸவ்' எனும் பெயரில் இந்த சுதந்திர தினம் கடந்த ஓராண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் 'ஹர் கர் திரங்கா'(இல்லம்தோறும் மூவர்ணக் கொடி) எனும் இயக்கத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் ஆகஸ்ட் 13ம் தேதி (நாளை) முதல் 15 வரை 3 நாட்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்திலும் களைகட்டுகிறது

தமிழகத்திலும் களைகட்டுகிறது

மேலும் மத்திய அரசு அலுவலகங்கள், மாநில அரசு அலுவலகங்கள் தேசியக்கொடி போன்று மின்னொளியில் ஜொலித்து வருகின்றன. இதனால் இந்தியா முழுவதும் சுதந்திர தினம் களைக்கட்டியுள்ளது. தமிழகத்திலும் சுதந்திர தினம் விமரிசயைாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மேலும் சுதந்திர தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.

தலைமை செயலாளர் உத்தரவு

தலைமை செயலாளர் உத்தரவு

இந்நிலையில் தான் சுதந்திர தின நாளில் தேசியக்கொடி ஏற்றுவது தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு இன்று உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். சுதந்திர தினவிழாவையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மூலம் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என அவர் கூறியுள்ளார். மேலும் இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அவர் அறிவுரை வழங்கி உள்ளார்.

தீண்டாமை கூடாது

தீண்டாமை கூடாது

அதில் உள்ளாட்சிகளில் சாதிய பாகுபாடின்றி தேசியக்கொடி ஏற்றப்பட வேண்டும். கிராமசபை கூட்டத்திலும் சாதிய பாகபாடின்றி மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பதை உறுதிப்படுத்த வேண்டும். தீண்டாமை எந்த வடிவத்திலும் செயல்படுத்துவது அரசியலமைப்பு சட்ப்படி தடை செய்யப்பட்டுள்ளது. பட்டியலின, பழங்குடியின தலைவர்கள் தங்கள் கடமையை செய்வதற்கு இடையூறு செய்து அவமதிப்பது என்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என அவர் கூறியுள்ளார்.

பின்னணி என்ன?

பின்னணி என்ன?

தமிழகத்தில் இதற்கு முன்பு சில உள்ளாட்சி அமைப்புகளில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி மற்றும் கிராம சபை கூட்டங்களில் சாதிய பாகுபாடு காட்டப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனை தவிர்க்கும் நோக்கில் தான் இந்த உத்தரவை தலைமை செயலாளர் இறயைன்பு அதிரடியாக பிறப்பித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+