அன்னம்மா பெத்தவளே...ஆட்டுக்குஞ்சொல்லதே...கவிஞர் வைரமுத்துவின் நாட்படு தேறல் 2
கவிஞர் வைரமுத்துவின் "அன்னம்மா பெத்தவளே"என்ற கவிதைப் பாடல் மே 8 ஞாயிறு அன்று ஒளிபரப்பாகிறது.
சென்னை: கவிப்பேரரசு வைரமுத்துவின் நாட்படு தேறல் பருவம் 2 பாட்டுத்தொடர் ஏப்ரல் 17 முதல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் நான்காவது பாடல் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து.

பூப்பெய்திய செய்தி மறைக்கப்படுகிறவரை ஆணாதிக்கச் சமூகத்தால் ஒரு பெண் பாலியல் கைதியாகவே பார்க்கப்படுகிறாள் என்று பொருள் அந்தச் சுதந்திரமில்லாமல் பெண்ணுக்கேது கண்ணியம்? அதைப் பேசாதிருப்பதென்ன பெண்ணியம்? அந்த அவலம் பாடுகிறது
'அன்னம்மா பெத்தவளே' என்று பதிவிட்டுள்ளார் வைரமுத்து.

அன்னம்மா பெத்தவளே!
ஆடுமேய்க்கப் போனவளே!
அந்தி மங்குமுன்னே
ஆடுவந்த மாயமென்ன!
வாய்க்காக் கரையோரம்
வயித்துவலி வந்துடுச்சா!
பயந்து நடுங்கையில
பாவாடை நனஞ்சுச்சா?
பிஞ்சுப் பழுத்திருச்சே
பெருந்துன்பம் வந்திருச்சே
நெல்லறுக்கப் போகயிலே
வெள்ளெருக்கு பூத்திருச்சே
பாவடை சட்டையே
அந்த பரமசிவன் கொடுத்த வரம்!
சக்களத்தி மவளே நான்
தாவணிக்கு என்ன பண்ண!
தாவணி வேணுமின்னா
தாய்மாமன் வரவேணும்!
தாய்மாமன் வரணுமின்னா
ஜாமீனில் வெளி வரவேணும்!
அப்பன் வெறுங்கூடு!
ஆத்தாளோக் கருவாடு!
இந்தவொரு லட்சணத்தில்
ஏண்டியம்மா குத்தவச்ச!
ஆளாகி நின்னவள
ஆடுமேய்க்கச் சொன்னாக்கா......
அப்பன் தடுப்பாக,
அடுத்தவுக முறைப்பாக!
இந்த ராத்திரிக்கு ராத்திரியே,
ரகசியமாத் தலைமுழுகி,
நாளைக்கே ஆடோட்டு!
யாருக்குந் தெரியாது!
ஆடுமேய்க்கப் போகயில
அங்கங்கே நிக்காதே!
அடியே ஒஞ்சங்கதிய......
ஆட்டுக்குஞ்சொல்லாதே! ஆமா!
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications