சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடி, அமித் ஷா பற்றி சர்ச்சை பேச்சு.. நெல்லை கண்ணன் கைது.. பெரம்பலூர் விடுதியில் போலீஸ் அதிரடி

Google Oneindia Tamil News

Recommended Video

    நெல்லை கண்ணன் கைது - வீடியோ

    சென்னை: பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த புகாரில் பிரபல தமிழ் அறிஞரும், பேச்சாளருமான நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    நெல்லை மேலப்பாளையம் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கூட்டம் ஒன்றில், சமீபத்தில், கலந்து கொண்டு பேசிய நெல்லை கண்ணன், உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடர்பாக ஆட்சேபிக்கதக்க கருத்தை பேசினார்.

    Nellai Kannan arrested for his comment on Amit Shah

    பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகிய இருவரையும், ஒருமையில் விளித்து பேசினார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து நகர போலீஸ் கமிஷனரிடம் பாஜக மாவட்ட தலைவர் தயாசங்கர் புகார் மனு அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறி, நெல்லை கண்ணன் திடீரென நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். எனவே அவரை கைது செய்ய காவல்துறை யோசித்து .

    இதையடுத்து நெல்லை கண்ணனை கைது செய்ய வலியுறுத்தி, பாஜக சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் இன்று பெரும் தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது. இதில், எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன் போன்ற சீனியர் தலைவர்கள் பங்கேற்றனர்.

    ஆப்பரேஷன் சக்சஸ்.. எச்.ராஜா போட்ட அதிரடி ட்வீட்.. அப்புறம்தான் வெளியானது அந்த முக்கிய தகவல்ஆப்பரேஷன் சக்சஸ்.. எச்.ராஜா போட்ட அதிரடி ட்வீட்.. அப்புறம்தான் வெளியானது அந்த முக்கிய தகவல்

    விஷயம் பெரிதாகிக் கொண்டே போன நிலையில், காவல்துறை, நெல்லை கண்ணனை வலைவீசி தேடி வந்தது. அவர் திருவனந்தபுரம் சென்றுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

    இந்த நிலையில் பெரம்பலூரிலுள்ள ஒரு தனியார் விடுதியில் நெல்லை கண்ணன் இன்று இரவு கைது செய்யப்பட்டு உள்ளார். மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டு நெல்லைக் கண்ணனிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    போலீசார் கைது செய்ய சென்றபோது, பாஜகவினர் அங்கே குவிந்து, நெல்லை கண்ணனுக்கு எதிராக கோஷமிட்டனர். அவரை போலீஸ் வாகனத்திற்கு அழைத்துச் சென்றபோது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் நெல்லை கண்ணனை பாதுகாப்பாக அழைத்துச் செல்வதே பெரும் சிரமத்திற்கு உள்ளானது. இதனிடையே, நெல்லை கண்ணனை கைது செய்ய கூடாது என எஸ்டிபிஐ கட்சியினரும் அங்கே குவிந்து தர்ணா நடத்தியதால், பதற்றமான சூழ்நிலை நிலவியது.

    இந்த நிலிையில், இன்று இரவு, ட்வீட் வெளியிட்ட எச்.ராஜா, நெல்லை கண்ணனுக்கு எதிராக புகார் அளித்தவர்களுக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

    English summary
    Nellai Kannan arrested for his comment on Amit Shah near perabalur.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X