"நிரூப்- பிரியங்கா செய்றது தவறுங்க.. அர்ஜுன் மாதிரி கமல் கண்டிக்கணும்.. நோ வழவழா நோ கொழ கொழா!"
சென்னை: பிரியங்காவும் நிரூப்பும் கண்களாலேயே பேசிக் கொள்கிறார்கள் என்பதால் பார்க்கும் பார்வையாளர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. இதை கமல்ஹாசன் இன்றைய தினம் கண்டிப்பாரா என நெட்டிசன்கள் எதிர்பார்க்கிறார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மொத்தம் 100 நாட்களில் 12 நாட்களை கடந்து விட்டது. இதில் நாளை எலிமினேஷன் நடைபெறும். எலிமினேஷனில் தாமரைச் செல்வியை தவிர்த்து மற்ற அனைவரும் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்கள்.
தாமரைச் செல்வி அந்த வீட்டின் தலைவி என்பதால் அவர் நாமினேஷனில் இருந்து தப்பினார். இன்று வார இறுதி என்பதால் கமல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்.

சுவாரஸ்யம்
கடந்த முறை சின்னப்பொண்ணுவின் கதை சுவாரஸ்யமாக இல்லை என சொன்ன ராஜுவை அட்வைஸ் என்ற பெயரில் சிரித்துக் கொண்டே கமல் ஹாசன் கடுமை காட்டினார். இதை நெட்டிசன்கள் கொண்டாடினர். இந்த நிலையில் நண்பர்களான பிரியங்காவும் நிரூப்பும் கடந்த சில தினங்களாக கண்களால் பேசிக் கொள்கிறார்கள்.

கேட்காமல் இருக்க
மேலும் நேற்றைய நிகழ்ச்சியில் அக்ஷரா ரெட்டி லவ் செய்ய தொடங்கிவிட்டார் என்பதை யாருக்கும் கேட்காமல் இருக்க நிரூப் கையில் பிரியங்கா, அக்ஷராவின் முதல் எழுத்தை எழுதி காண்பித்தார். இது போல் பல விஷயங்களை இவர்கள் இருவரும் கண்களால் பேசிக் கொள்கிறார்கள். செய்கையிலும் பேசுகிறார்கள்.

பிக்பாஸ்
இதனால் இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்றே வியூவர்ஸுக்கு புரியவில்லை. பிக்பாஸ் விதிகளின்படி மைக்கில்தான் பேச வேண்டும். மைக் சரியாக அணியாவிட்டாலும் கூட பிக்பாஸ் எச்சரிக்கை விடுப்பார். அது போல் கடந்த சீசன்களில் மைக்கை கழற்றிவைத்துவிட்டு பேசிய போட்டியாளர்களை கமல் கண்டித்துள்ளார்.

நிரூப் மற்றும் பிரியங்கா
இன்றைய தினம் கமல் வரும் நிகழ்ச்சியில் நிரூப் மற்றும் பிரியங்காவை கண்டிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அர்ஜுன் மாதிரி வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என கமல்ஹாசன் பேசினால்தான் சரி. சும்மா வழவழானு கேள்வி கேட்கக் கூடாது என நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

அர்ஜுன் போல் கமலும் அதிரடி காட்டுவாரா
ஜீ தமிழில் வெளியாகும் சர்வைவர் நிகழ்ச்சியில் எல்லாத்தையும் கேமராவில் காட்டுகிறார்கள், பிரைவசி இல்லை என போட்டியாளர் ஐஸ்வர்யா கூறிய போது நடிகர் அர்ஜுன் கடிந்து கொண்டார். பிரைவசி பாத்ரூமில் மட்டும்தான். பிரைவசி வேண்டுமென்றால் எதற்காக இந்த நிகழ்ச்சிக்கு வந்தீர்கள் என நேருக்கு நேர் கடிந்து கொண்டார் அர்ஜுன்.
-
மதுரை முத்துவின் மகள்களுக்கு நடந்த பங்க்ஷன்.. நெகிழ வைத்த தந்தை பாசம்! வியந்து போன மதுரை மாநகரம் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி












Click it and Unblock the Notifications