Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்ன முகமே தெரியல.. எவ்வளவு விளம்பரம்டா வைப்பிங்க.. ‛‛லோக்கல் சேனல்’’ வீடியோவால் நெட்டிசன்கள் கலகல

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்கல் சேனல் ஒன்றின் திரையில் இருந்த அதிகப்படியான விளம்பரத்தால் தொலைக்காட்சியில் நடிகர், நடிகைகளின் முகங்கள் சரியாக தெரியாத நிலையில் கடுப்பாகிபோன நெட்டிசன் அதனை வீடியோவா பதிவிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வேகமாகி பரவி வரும் நிலையில் நெட்டிசன்கள் கலகலவென கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உலகில் முதல் முதலாக 1923 காலக்கட்டத்தில் தொலைக்காட்சி கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு 2ம் உலக உலகப்போருக்கு தொலைக்காட்சி பயன்பாடு பல நாடுகளில் தொடர்ந்து அதிகரித்தது.

 தமிழகத்தில் தொலைக்காட்சி

தமிழகத்தில் தொலைக்காட்சி

இந்தியாவிலும் தொலைக்காட்சி பெட்டிகள் அறிமுகம் ஆனது. முன்காலத்தில் வாணொலி ரேடியோக்கள் மூலம் செய்திகளை கேட்ட மக்களுக்கு தொலைக்காட்சி என்பது பெரிய வரப்பிரசாதமாக மாறியது. இதற்கு காரணம் ஒலியோடு சேர்ந்த ஒளிப்பட காட்சிகள் தான். தமிழகத்தில் ஒருகாலத்தில் பஞ்சாயத்து அலுவலகங்களில் பொது தொலைக்காட்சி இருக்கும். துர்தர்சன் மட்டுமே இருந்த அந்த காலத்திலும் கூட இந்த தொலைக்காட்சிக்கு ரசிகர் பட்டாளம் அதிகம் தான். ஆண்ட்டனாவை அட்ஜெஸ்ட் செய்து ஒளியும் ஒலியும், செய்திகள், சக்திமான், மகாபாரதம், ராமயணம் உள்ளிட்டவை மட்டுமே நாம் ரசித்தாலும் கூட இன்றளவும் அது மனதில் மறக்க முடியாத நினைவாக தான் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது.

 ஏராளமான சேனல்கள்

ஏராளமான சேனல்கள்

அதன்பிறகு தமிழகத்தை பொறுத்தவரை 90களின் காலக்கட்டத்தில் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கும் இந்த தொலைக்காட்சி பெட்டி புகுந்தது. இருப்பினும் பெரும்பலானவர்களின் வீடுகளில் தொலைக்காட்சி என்பது இல்லை. இருந்தாலும் கூட தொலைக்காட்சி இருக்கும் வீடுகளில் சென்று படங்களை பார்த்து ரசித்த அனுபவம் பலருக்கும் நினைவில் இருக்கும். ஒருகாலத்தில் இப்படி இருந்த வாழ்க்கை தற்போது முற்றிலும் மாறி வருகிறது. ஒவ்வொருவரின் வீட்டிலும் நல்ல பெரிய தொலைக்காட்சிகள் இருப்பதோடு ஏராளமான சேனல்களை பார்க்க முடிகிறது.

 ‛டப்’ கொடுக்கும் லோக்கல் சேனல்கள்

‛டப்’ கொடுக்கும் லோக்கல் சேனல்கள்

இந்தியா முழுவதும், மாநிலம் முழுவதும் மக்கள் பார்த்து ரசிக்கும் வகையில் பல சேனல்கள் இருக்கும் நிலையில் மாவட்ட வாரியாக அல்லது குறிப்பிட்ட தாலுகாக்களுக்கு கூட லோக்கல் சேனல்கள் உள்ளன. தொலைக்காட்சி என்பதே பொழுதுபோக்கு சாதனம் தான் என்பதை உறுதி செய்யும் வகையில் முற்றிலும் பொழுதுபோக்கு சார்ந்த நிகழ்ச்சிகளை மட்டுமே இந்த லோக்கல் சேனல்கள் ஒளிபரப்பி வருகின்றன. அதேவேளையில் பெரிய சேனல்களுக்கு போட்டி போடும் வகையில் முழுநேரமும் பாடல்கள், திரைப்படங்களை ஒளிபரப்பி ரசிகர்களை தன்வசம் இழுப்பதிலும் பல சேனல்கள் கைதேர்ந்துள்ளன. இதுதவிர பல சேனல்கள் கலவையான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றன. அதாவது பாடல், திரைப்படம் ஆகியவற்றுடன் மக்கள் போன் செய்து விருப்ப பாடல்கள் கேட்கும் நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறது. இதற்கு அப்பாற்பட்டு கோவில் திருவிழாக்கள், திருமண விழாக்களில் தொடர்பான நிகழ்ச்சிகளையும் இலவசமாக ஒளிரப்புகின்றன.

 ஜாலியான விவாதமாகும் வீடியோ

ஜாலியான விவாதமாகும் வீடியோ

இதனால் தமிழகத்தில் பிரபலமான சேனல்களை போல் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள லோக்கல் சேனல்களும் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது என்றால் மிகையல்ல. லோக்கல் சேனல்களுக்கு வருமானம் என்பது இத்தகைய விளம்பரங்கள் மூலம் தான் கிடைக்கும். விளம்பரங்களுக்கான கட்டணம் என்பது மிகவும் குறைவு என்பதால் ஏராளமானவர்கள் விளம்பரம் செய்வார்கள். இதனால் தான் லோக்கல் சேனல்களில் பெரும்பாலும் விளம்பரங்கள் அதிகமாக காணப்படும். இந்நிலையில் தான் ட்விட்டரில் லோக்கல் சேனல் ஒன்றின்வீடியோ ஜாலியான விவாதத்துக்குள்ளாகி உள்ளது.

 பரவும் லோக்கல் சேனல் வீடியோ

பரவும் லோக்கல் சேனல் வீடியோ

அதாவது ஒரு லோக்கல் சேனலில் அதிகப்படியான விளம்பரங்கள் உள்ளன. சேனலின் மேல்பகுதி, கீழ்பகுதியிலும் துண்டு துண்டாய் நிறைய விளம்பரங்கள் உள்ளன. இந்த விளம்பரங்கள் என்பது தொலைக்காட்சி திரையில் தோன்றும் நபர்களின் முகத்தை மறைக்கும் வகையில் உள்ளன. தொலைக்காட்சியில் விளம்பரம் உள்ள பகுதிகளை கழித்து பார்த்தால் திரையின் நடுவில் சிறிய பகுதி மட்டுமே மக்களால் பார்க்க முடிகிறது. இதனால் கடுப்பாக்கிப்போன ஒருவர் அந்த தொலைக்காட்சி சேனலை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். அதில் பேசும் அந்த நபர், ‛‛அடேயப்பா.. சூப்பரா இருக்கு.. நான் என்ன சொல்றேனா(டிவி சேனலில் விளம்பரம் இல்லாத நடுப்பகுதியை கை வைத்து) இந்த இடத்தில் தயவு செய்து யாரிடமாவது கெஞ்சி கூத்தாடி விளம்பரம் போட்டுட்டீங்கனு வையுங்க.. நாம அனைவரும் போய் கண்தானம் செய்துவிட்டு ஆடியோ கேட்டே மகிழலாம். அவ்ளோ அழகா இருக்கு.. எவ்வளவு விளம்பரம் டா அப்பா..'' என கூறுகிறார்.

நெட்டிசன்கள் கருத்து

தற்போது இந்த வீடியோ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு வேகமாக பரவி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர், ‛‛விளம்பரமா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமடா'' என கூறியுள்ளார். இன்னொருவரோ இன்னும் அதிகமாக பாதிக்கப்பட்டவர் போல், ‛‛இந்த பதிவு அவசியம் தேவை. எல்லோருக்கும்எரிச்சலை உண்டாக்கியது'' என அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். இன்னொருவரோ, ‛‛இதற்கு தான் கேபிள் டிவி கனெக்சன் வேணாம்கிறது'' எனவும், இன்னொருவரோ வேறுவிதமாக யோசித்து, ‛‛அதான் டிவி சேனல் பேரு Max. மேக்சிமம் விளம்ம்பரம் போல'' என கிண்டல் செய்துள்ளார். எல்லோரும் இப்படி தங்களின் அதிருப்தியை பதிவு செய்த நிலையில் ஒருவர் ‛‛இத நேத்து பாத்தேன் அழகா இருந்துச்சி'' என கூலாக வந்து காமெடி செய்து கடுப்பாக்கிவிட்டு சென்றார். தொடர்ந்து இந்த வீடியோவுக்கு கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+