வசமாய் சிக்கிய இபிஎஸ்! ஓபிஎஸ் கையில் என்ன.. ஓ அது தானா? சீக்ரெட்டை உடைத்த மாஜிக்கள்! உற்சாக தேனி!
சென்னை : அதிமுகவில் அதிகார மோதல் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் வலுத்து வரும் நிலையில் அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் எடுத்துச் சென்ற ஆவணங்கள் காரணமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு புதுவித சிக்கல் முளைத்திருப்பதாகவும் அதனை வைத்து எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என எம்.ஜி.ஆர் பாடலை முனுமுனுத்தவாறு தமிழகத்தில் எதிர்க்கட்சி போல திமுகவுக்கு எதிராக பாஜக மேற்கொண்டு வரும் அதிரடி அரசியல் நடவடிக்கைகளை பார்த்து சோர்ந்து போய்விட்டனர் அதிமுக ரத்தத்தின் ரத்தங்கள்.
திமுகவுக்கு அடுத்தபடியாக தனியாகவே அதிக இடங்களில் வெற்றி பெற்ற போதிலும் ஆட்சியை இழந்ததோடு தற்போது தாங்கள் எதிர்க்கட்சி தானா? என்பதே தெரியாத அளவுக்கு அதிமுகவினர் உள்ளனர். இதற்கெல்லாம் எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் இடையேயான அதிகாரம் முதல் தான் காரணம்.

ஒற்றைத் தலைமை விவகாரம்
ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக கடந்த மே மாதத்தில் இருந்தே இருவரும் மோதல் போக்கை கையாண்டு வரும் நிலையில் இடையே பாஜக பாமக உள்ளிட்ட கட்சிகள் தாங்கள்தான் எதிர்க்கட்சி என பிரச்சாரம் செய்து வருகின்றன. திமுகவுக்கு அடுத்தடுத்து பாஜக அண்ணாமலை நெருக்கடி கொடுத்து வரும் நிலையில் தாங்கள் தான் எதிர்க்கட்சி என பாஜகவினர் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். ஆனால் தற்போது அதிமுக பொதுக்குழு தொடர்பான நீதிமன்ற தீர்ப்பில் எடப்பாடி பழனிச்சாமியும் ஓ பன்னீர் செல்வமும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

அடுத்தடுத்து சிக்கல்கள்
இது ஒரு புறம் இருக்க எடப்பாடி பழனிச்சாமிக்கும் அடுத்தடுத்து சிக்கல்கள் முளைத்து வருகிறது. தங்கக் கவச விவகாரத்தில் கைவிட்டு போன தீர்ப்பு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ஆணைய விசாரணை உள்ளிட்ட சிக்கல்களால் அடுத்தடுத்து பின்னடைவை சந்தித்து வருகிறது. அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தின் மூலம் அதிமுகவில் தனது தரப்பை வலுப்படுத்த திட்டமிட்டு வருகிறார். இதற்காக டெல்லி மேலிடத்தின் ஆதரவையும் அவர் எதிர்நோக்கி உள்ளார்.

முக்கிய கோப்புகள்
இந்நிலையில் அதிமுக பொதுக் குழுவின் போது நடந்த வன்முறையில் அதிமுக அலுவலகத்தில் இருந்து சில முக்கிய கோப்புகள் மாயமானதாக சிவி சண்முகம் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக சிபிசிஐடி தரப்பில் விசாரணை மேற்கொண்டு நிலையில் அந்த ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் அதிமுக அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட சில ஆவணங்களின் அடிப்படையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு நெருக்கடி கொடுக்க ஓ பன்னீர்செல்வம் முடிவு செய்து இருப்பதாக வெளியான தகவல்கள் தான் எடப்பாடி தரப்புக்கு நெருக்கடியாக அமைந்திருக்கிறது.

ஓபிஎஸ் ஆலோசனை
இது தொடர்பாக சட்ட ஆலோசகர்கள், ஆதரவாளர்கள் மற்றும் டெல்லி மேலிடத்தின் உதவியுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். கணக்கு வழக்கா அல்லது பிற வழிகளில் நெருக்கடி கொடுப்பாரா என்பது தெரியாத நிலையில் முக்கிய கோப்புகள் இன்னும் ஓபிஎஸ் வசம் இருப்பது எடப்பாடி தரப்பை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு எடப்பாடி தரப்பில் இருந்து ஓபிஎஸ் தரப்பில் தஞ்சம் புகுந்த மைத்ரேயன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோரும் சில முக்கிய ஆலோசனைகளை ஓபிஎஸ் தரப்புக்கு வழங்கி உள்ளதாகவும் அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும் என்கின்றனர் ஓபிஎஸ் தரப்பு அதிமுகவினர்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications