பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகமா? விஜய் அரசுக்கு செக் வைக்கும் மீனவர்கள்.. 29ல் மாபெரும் ஆர்ப்பாட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் 29 ஆம் தேதி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர். எண்ணூர் நெட்டுக்குப்பம் முதல் நயினார்குப்பம் வரை உள்ள 56 மீனவ கிராமங்களில் இருந்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பார்கள் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று முதல்வர் விஜய் சட்டசபையில் அறிவித்தார். சென்னையில் கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானம் உள்ளிட்டவை அரசின் பரிசீலனையில் இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், திடீரென பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் அமைக்கப்படும் என்று அரசாணை வெளியானது.

New Secretariat

மீனவ மக்கள் எதிர்ப்பு

மீனவ மக்கள் அதிகம் வசிக்கும் பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் அமைத்தால், தங்கள் வாழ்வாதாரம் மற்றும் வாழ்விடம் பாதிக்கப்படும் எனக் கருதிய மீனவர்கள் புதிய தலைமை செயலகத்தை பட்டினப்பாக்கத்தில் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். 9 மீனவ கிராமங்களைச் சோ்ந்த மக்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் அப்பகுதியில் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

போராட்டம் அறிவிப்பு

திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட கட்சிகளும் பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டக்கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த நிலையில், வரும் 29 ஆம் தேதி மீனவ கிராம மக்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இது குறித்து மீனவர் கிராம பஞ்சாயத்து சபா ஒருங்கிணைப்பாளர் விஜயன் கூறியதாவது:-

தலைமை செயலகம் அமைவதில் எந்த வித கருத்து மாறுபாடும் எங்களுக்கு இல்லை. தலைமை செயலகம் எந்த இடத்தில் அமைகிறது என்பதுதான் எங்களின் கருத்து. முதல்வரின் வீடு அருகில் இருக்கும் ஒரே இடம் என்பதால் பட்டினப்பாக்கத்தை தேர்வு செய்து இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த இடம் அரசு இடம் கிடையாது. மீனவர்கள் மற்றும் ஏழை மக்களுக்கு வீடு வழங்கும் திட்டத்திற்காக அரசுக்கு ஒப்படைக்கப்பட்ட இடம்.

40 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள்

இந்த இடத்தில் தலைமை செயலகம் என்று தன்னிச்சையாக முதல்வர் அறிவித்துள்ளார். அந்த பகுதி மக்களின் கருத்தை கேட்க வேண்டும். எந்த வித கருத்தும் கேட்காமல் தன்னிச்சையாக அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இந்த அரசின் நடவடிக்கையை கண்டித்து வரும் 29 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். எண்ணூர் நெட்டுக்குப்பம் முதல் நயினார்குப்பம் வரை உள்ள 56 மீனவ கிராமங்களில் இருந்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+