என்.ஐ.ஏ அதிரடி ரெய்டு.. சென்னை, இலங்கை தமிழர் வீட்டில் விடுதலை புலிகள் தொடர்பான ஆவணங்கள் பறிமுதல்
சென்னை: தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் கேரளாவில், தேசிய பாதுகாப்பு முகமை (NIA) அதிகாரிகள் 7 இடங்களில் அதிரடி சோதனைகளை நடத்தியுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் , ஹெராயின் போதை பொருள், ஏ.கே 47 துப்பாக்கி மற்றும் குண்டுகளுடன் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து என்.ஐ.ஏ பிரிவு விசாரணை நடத்தி வரும் நிலையில் , அது தொடர்பாக சென்னை , திருவள்ளூர் ,கேரளா உள்ளிட்ட 7 இடங்களில் இன்று காலை முதல், என்.ஏ.ஐ சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை வளசரவாக்கத்தில் சற்குணம் என்ற இலங்கை தமிழர் தங்கியிருந்த வீட்டில் சோதனை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வீடு இலங்கைத் தமிழர் சற்குணம் கடந்த 6 மாதத்திற்கு முன்பு வசித்து வந்த வீடு ஆகும். அவரது வீட்டில், விடுதலை புலிகள் தொடர்பான புத்தகம், செல்போன், சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் மீது கேரளா மாநிலம் கொச்சியில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக, இவரின் வீட்டை சோதனை செய்து வருகின்றனர் என தகவல்.
குறிப்பிட்ட இந்த வீடு தாஜ் டவர், முரளி கிருஷ்ணா நகர் வளசரவாக்கம் சென்னை என்ற முகவரியில் உள்ளது. என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தலைமையில் 5 நபர்கள் மற்றும் வளசரவாக்கம் உதவி ஆய்வாளர் மணிமேகலை உதவியுடன் சோதனை செய்து வருகின்றனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கேரளாவில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கும், சென்னை இலங்கை தமிழர் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஆவணங்களுக்கும் என்ன தொடர்பு என்ற பல கோணங்களில் என்.ஐ.ஏ விசாரணை நடைபெற்று வருகிறது.
-
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!











Click it and Unblock the Notifications