சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கண்டா வரச்சொல்லுங்க.. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாரானுக்கு கோரிக்கை வைத்த ஆனந்த் ஸ்ரீனிவாசன்!

Google Oneindia Tamil News

சென்னை: ‛‛இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.81 ஆக உள்ளது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களே ஒரு டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு ரூ.40 ஆக வழங்கப்படும் எனக்கூறி உங்கள் நண்பர் ரவிசங்கர் எங்கே? '' என பொருளாதாரா நிபுணரான ஆனந்த் ஸ்ரீனிவாசன் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்துள்ளார்.

கொரோனாவை தொடர்ந்து உலக நாடுகளில் பொருளாதாரம் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் இந்திய பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்து வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

ஆனால் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்து வருகிறது. இந்தியாவின் பொருளாதாரம் என்பது தொடர்ச்சியாக நல்ல நிலையில் இருப்பதாக மத்திய அமைச்சர்கள் கூறி வருகின்றன.

தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் மதவாத இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-சீமான்

டாலருக்கு நிகரான ரூபாய் வீழ்ச்சி

டாலருக்கு நிகரான ரூபாய் வீழ்ச்சி

இந்நிலையில் தான் 2 நாட்களுக்கு முன்பு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 80.28 ஆக இருந்தது. சர்வதேச சந்தையில் டாலருக்கான தேவை மிகவும் அதிகரித்த நிலையில் ரூபாயின் மதிப்பு 81 வரை வீழ்ச்சியடைந்தது. இதன்மூலம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் அதிகப்பட்ச வீழ்ச்சியாக இது பதிவானது.

ஆனந்த் ஸ்ரீனிவாசன் விமர்சனம்

ஆனந்த் ஸ்ரீனிவாசன் விமர்சனம்

இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பொருளாதார நிபுணரான தமிழகத்தை சேர்ந்தவர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் பாஜகவை விமர்சனம் செய்துள்ளார். மேலும், அவர் பாஜகவின் ஆதரவாளரான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி எங்கு என்று கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக ஆனந்த் ஸ்ரீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

ரவிசங்கர் குருஜி எங்கே?

ரவிசங்கர் குருஜி எங்கே?

‛‛இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.81 ஆக உள்ளது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களே ஒரு டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு ரூ.40 ஆக வழங்கப்படும் எனக்கூறிய உங்கள் நண்பர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் எங்கே? என கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது தேர்தலின்போது ரவிசங்கர் குருஜி கூறும்போது, ‛நரேந்திர மோடிக்கு ஓட்டளித்து பிரமராக்கினால் அவரது ஆட்சியில் அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.40 என்ற அளவில் இருக்கும் '' என கூறியிருந்தார். இதனை தான் தற்போது ஆனந்த் ஸ்ரீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்.

நிர்மலா சீதாராமன் விளக்கம்

நிர்மலா சீதாராமன் விளக்கம்

இதற்கு மத்தியில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛மற்ற நாணயங்களை ஒப்பிடுகையில் இந்திய ரூபாய் மதிப்பு ஏற்ற, இறக்கத்தில் சிக்கவில்லை. ரிசர்வ் வங்கி மற்றும் நிதியமைச்சகம் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது'' என கூறியுள்ளார். முன்னதாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் அமெரிக்க டாலரின் மதிப்பு 20 ஆண்டுகளில் இல்லாத உச்சத்துக்கு சென்றதாகவும், ரூபாய் உள்ளிட்ட ஆசிய நாடுகளின் நாணயங்கள் மதிப்பு கடுமையான சரிவை சந்தித்தது என்று அன்னிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
The value of the Indian rupee is Rs.81. Union Minister Nirmala Sitharaman said that the value of the Indian Rupee to one dollar will be Rs. 40. Where is Sri Sri Ravi Shankar? Anand Srinivasan, an economist, has questioned.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X