நோ இழுபறி.. டெல்லியில் இருந்து அறிவிப்பு வரும்! திமுக - காங். கூட்டணி உறுதி செய்த செல்வப்பெருந்தகை?
சென்னை: சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, திமுக காங்கிரஸ் கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை. காங்கிரஸ் தலைமையிடம் இருந்து அறிக்கை வரும். அதனை சென்னை அண்ணா அறிவாலயத்தில் காண்பித்து தொகுதி பங்கீட்டை நிறைவு செய்வோம் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக கூட்டணியில் முக்கிய கட்சியாக உள்ள காங்கிரஸ் கூடுதல் தொகுதிகளை கேட்டதால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாகவே நீண்டு கொண்டே சென்றுள்ளது. தொடர்ந்து 4வது முறையாக திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்க உள்ளது.

திமுக காங்கிரஸ் கூட்டணி
முதலில் காங்கிரஸ் 41 தொகுதிகளை கேட்டது. ஆனால் திமுக புதிதாக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம், தேமுதிக ஆகிய கட்சிகளுக்கும் கவுரவமான முறையில் இடங்களை ஒதுக்கி கொடுக்க வேண்டி உள்ளதால் இந்த முறை 25 தொகுதி தான் என திட்டவட்டமாக கூறியதாக தகவல் வெளியானது.
ஆனால் காங்கிரஸ் கட்சி இதனை ஏற்க மறுத்து மீண்டும் கிரிஷ் சோடங்கரை வைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. காங்கிரஸ் கட்சியின் இந்த கோரிக்கையை ஏற்பதற்கு திமுக மறுத்ததால் தொடர்ந்து திமுக காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் சிக்கல் நீடித்து வந்தது.
தவெகவுடன் போனால் ஜெயிக்க முடியாது
இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் நேற்று முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்து தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது திமுக 28 + 2 தொகுதிகளுக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர் இது குறித்து ப சிதம்பரம் டெல்லி தலைமையிடம் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது திமுக கூட்டணி இந்த முறை வலுவாக இருப்பதோடு வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. ஆனால் தவெகவுடன் போனால் வெற்றி பெற முடியாது என்றும் கூறியதாக தெரிகிறது.
எந்த இழுபறியும் இல்லை..
இதையடுத்து காங்கிரசும் இறங்கி வந்திருக்கிறது. இந்த நிலையில் உறுதியாக 28 + 2 அல்லது 29 + 1 என்று முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. திமுக காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகளும் கையெழுத்தும் போட இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, திமுக காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் எந்த இழுபறியும் இல்லை.. சுமூகமாக சென்று வருகிறது.
காங்கிரஸ் தலைமை அறிக்கை தரும்
தற்போது சென்னை விமான நிலையத்தில் ஆலோசனை நடத்தவில்லை.. நோன்புதான் திறந்தோம்.. எந்த இழுபறியும் இல்லை. டெல்லி காங்கிரஸ் தலைமை முறையான அறிக்கையினை எங்களுக்கு அனுப்பும். அதனை நாங்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் காண்பித்து தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தை நிறைவு செய்வோம். இதற்கு பிறகு உங்களை சந்தித்து எத்தனை தொகுதிகள் என்பதை வெளிப்படையாக அறிவிப்போம்.. கொஞ்சம் காத்திருங்க்ள்..” இவ்வாறு அவர் கூறினார்.
-
தவெகவில் சேர்ந்த 2 நாளில்! விஜய் விவாகரத்து வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்! யார் இந்த ப்ரீத்தி ஷெட்டி? -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
சென்னையில் இடி.. தவெகவில் இணையும் அதிமுக மா.செக்கள்? எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! -
இனி கோவில்களில் உள்ள கடைகளில் அதிக விலைக்கு விற்றால் அபராதம், உரிமம் ரத்து.. அறநிலையத்துறை அதிரடி! -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. ஸ்டாலினுக்கு செக்.. எடப்பாடிக்கு அதிர்ச்சி வைத்தியம்.. ஆதவ்வின் மெகா மூவ்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம்












Click it and Unblock the Notifications