சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இடி மின்னலுடன் 5 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை... சூறாவளியும் வீசும்

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிக கனமழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    வடகிழக்குப் பருவமழை தமிழ்நாட்டில் தீவிரமடைந்துள்ளது. மதுரை, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் 9 செமீ மழை பதிவாகியுள்ளது. அவினாசி, கயத்தாறு, தென்காசி, பரமக்குடி, பந்தலூரில் தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது. வாலிநோக்கம், விருதுநகர்,சிவகாசி, தேனியில் 3 செமீ மழை பதிவாகியுள்ளது.

    Heavy rain with thunder and lightning in 5 districts

    தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்றைய தினம் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி,மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

    தஞ்சாவூர்,திருவள்ளூர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், இதர கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை...கேரளாவில் மஞ்சள் எச்சரிக்கை விடுத்த வானிலை மையம் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை...கேரளாவில் மஞ்சள் எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்

    நாளைய தினம் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை,செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில்
    ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

    30,31ஆம் தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ராமநாதபுரம்,விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள்மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசானதுமுதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    நவம்பர் 1ஆம் தேதியன்று கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானமழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

    28 மற்றும் 30ஆம் தேதிகளில் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். 29 முதல் 31ஆம் தேதி வரைக்கும் குமரிக்கடல் மற்றும் மன்னர் வளைகுடா பகுதிகளிலும் தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளிலும் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமிட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

    29 முதல் 31ஆம் தேதி வரைக்கும் கேரளா கடலோர பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல், மாலத்தீவு,லட்சத்தீவு பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வீசக்கூடும் எனவும் இந்த கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

    English summary
    Rain Fall Prediction in Tamil Nadu (வடகிழக்குப் பருவமழை:தமிழகத்தில் மழை நிலவரம்): The Chennai Meteorological Department has forecast heavy rains in Tamil Nadu for the first four days today. Tiruvallur, Chengalpattu, Kanchipuram and Tanjore districts are likely to receive heavy rains today, the Met office said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X